விக்ரம் படத்தில் நடித்துள்ள மானாட மயிலாட புகழ் கோகுல், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ பலரின் கவனத்தையும் பெற்றுள்ளது.
மானாட மயிலாட நிகழ்சி மூலம் சின்னத்திரை நட்சத்திரமாக ஜொலிக்க தொடங்கியவர் கோகுல். அம்புலி, ஆ, ஜம்புலிங்கம், மகளிர் மட்டும், ஐரா போன்ற படங்களில் நடித்துள்ள இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் - கமல்ஹாசன் கூட்டணியில் வெளியாகி இருக்கும் விக்ரம் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் சந்தனம் என்ற வில்லன் ரோலின் விஜய் சேதுபதி நடித்து இருக்கிறார். அவரின் கேங்கில் ஒருவர் தான் கோகுல். படம் வெளியாகி வசூலில் மிகப் பெரிய சாதனை செய்து கொண்டிருக்கிறது. அதே போல் விமர்சனம் ரீதியாகவும் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
6 சீரியல்களில் நடித்து இருக்கும் பிரபல நடிகர்.. யாருன்னு கெஸ் பண்ண முடியுதா?
படத்தில் வெள்ளித்திரை பிரபலங்கள் மட்டுமில்லை மைனா நந்தினி, ஷிவானி, ஸ்ரீகுமார் போன்ற சின்னத்திரை நட்சத்திரங்களும் நடித்துள்ளனர். படம் குறித்த சுவாரசியமான பல தகவல்கள் இணையத்தில் உலா வந்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில் விக்ரம் படத்தில் நடித்துள்ள கோகுல் தனது இன்ஸ்டாவில் வீடியோ ஒன்றை ஷேர் செய்துள்ளார். அதாவது, மானாடா மயிலாட நிகழ்ச்சியில் கோகுல் போட்டியாளராக கலந்து கொண்ட போது அப்போது நடுவராக இருந்த ரம்பா அவரிடம் வருங்கால ஆசை குறித்து கேட்டு இருக்கிறார். அதற்கு கோகுல், 2 ஆசைகளை கூறி இருக்கிறார்.
பாரதி கண்ணம்மா சீரியலில் அறிமுகமாகும் பிரபல சீரியல் நடிகர்! அதுவும் யாருக்கு ஜோடி தெரியுமா?
அதாவது ஹாலிவுட் படத்தில் நடிக்க வேண்டும் அல்லது ஹாலிவுட் தரத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்கும் படத்தில் அவருடன் சேர்ந்து ஒரு சீனாவது நடிக்க வேண்டும் என கூறுகிறார். அன்று சொன்ன கோகுலின் ஆசை 2022ஆம் ஆண்டு விக்ரம் படம் மூலம் நிறைவேறியுள்ளது. இந்த நிகழ்வுகளை வீடியோவாக எடிட் செய்து ரீல்ஸாக கோகுல் இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் கோகுலுக்கு தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
இதுமட்டுமில்லை கோகுல், யூனிக் டேலண்ட் அகாடமி என்கிற பெயரில் ஒரு பயிற்சி மையத்தையும் நடத்தி வருகிறார். அதில் பல குழந்தைகள் பல கலைகளில் பயிற்சி பெற்று வருகிறார்கள்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.