• HOME
 • »
 • NEWS
 • »
 • entertainment
 • »
 • என் காலில் கூட விழுவார்... விஜய் டிவி மா.கா.பா ஆனந்த் மனைவி போட்டுடைத்த ரகசியம்!

என் காலில் கூட விழுவார்... விஜய் டிவி மா.கா.பா ஆனந்த் மனைவி போட்டுடைத்த ரகசியம்!

விஜய் டிவி மா.கா பா

விஜய் டிவி மா.கா பா

மா.கா.பா மனைவி சூசனும் ஸ்பெஷல் சர்ப்பிரைஸாக மேடை ஏறுகிறார்.

 • Share this:
  விஜய் டிவி மா.கா.பா ஆனந்த் மனைவி தனது குடும்ப ரகசியத்தை மேடையில் போட்டு உடைத்துள்ளார்.

  விஜய் டிவி மாகாபா ஆனந்த் யாரென்றால் சின்ன குழந்தையும் சொல்லும் என்றால் அது மிகையல்ல. கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் தனக்கான பாதையை பெயரை பெற்று விட்டார் மா.கா.பா. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபராகி வரும் பல்வேறு நிகழ்ச்சிகளை ஸ்வாரஸ்யமாக கொண்டு செல்வதில் அந்த நிகழ்ச்சியில் உள்ள தொகுப்பாளர்களும் பெரும் பங்கு வகிக்கின்றனர். அதில் குறிப்பாக மா.கா.பா மற்றும் பிரியங்கா பற்றி கேட்கவே வேண்டாம். இப்போது பிரியங்கா பிக் பாஸ் சென்று விட்டார்.

  இந்நிலையில் விஜய் டிவியில் தனி ஒருவனாக மொத்த நிகழ்ச்சியை அசால்டாக ஆங்கரிங் செய்து வருகிறார் மா.கா.பா ஆனந்த்.
  வானவராயன் வல்லவராயன் திரைப்படம் மூலம் வெள்ளி திரையில் அறிமுகமான மா.கா.பா நவரச திலகம், கடலை, மீசையை முறுக்கு போன்ற படங்களிலும் நடித்துள்ளார். விஜய் டி.வி.யில் காலடி எடுத்து வைத்தாலே சினிமா அதிர்ஷ்டம் சுலபத்தில் கதவைத் தட்டிவிடும் மா.கா.பாவுக்கும் அது நடந்தது. ஆனால் சின்னத்திரை போல் மிகப் பெரிய பெயரை வாங்கி தரவில்லை. மா.கா.பா வின் இந்த வெற்றிக்கு அவரின் மனைவியும் காரணம் எனலாம்.

  சுவர்களில் வால் போஸ்ட்டர் எல்லாம் ஒட்டி தான் இந்த நிலைமைக்கு வந்துள்ளார் மா.கா.பா. சினிமா காரம் காபி’ மூலம் விஜய் டிவியின் கதவு இவருக்காகத் திறந்தபிறகு தன் திறமையின் வெவ்வேறு பரிமாணங்களை வெளிப்படுத்தினார் மா.கா.பா தனது யூடியூப் சேனலில் மனைவி பற்றியும் மகள், மகன் பற்றியும் அடிக்கடி பகிர்ந்து கொள்வார். சில வருடங்களுக்கு முன்பு விஜய் டிவியில் அவருக்கு விருது வழங்கிய போது தனது மனைவிக்கு கண்ணீர் உடன் நன்றி கூறி இருந்தார்.

  ஏழை மாணவர்கள் படிக்கும் கல்லூரியில் விஸ்காம் மாணவர்களுக்கு நல்ல ஆலோசகராக மாகாபா பணியாற்றி வருவது பலருக்கும் தெரியாத ஒன்று.இவரும் பிரியங்காவும் சேர்ந்துக் கொண்டு அடிக்கும் லூட்டிகள் லாக் டவுனில் அதிகம் தேடப்படும் வீடியோக்களாக உள்ளன.இப்படி ஆல் ரவுண்டரான மா.கா. பா விஜய் டிவியில் தனது 10 வருட பயணத்தை எட்டி விட்டார். இதை கொண்டாடும் வகையில் விஜய் டிவியில் ஞாயிறு மதியம் 3 மணிக்கு ஒளிப்பரப்பாகும், ‘சவுண்ட் பார்ட்டி’ஷோவில் மா. கா.பாவின் 10 ஆண்டு பயணம் கொண்டாடப்படுகிறது.  இதற்கு அவரின் மனைவி சூசனும் ஸ்பெஷல் சர்ப்பிரைஸாக மேடை ஏறுகிறார். அப்போது மா.கா.பா பற்றி அவரின் முயற்சி, வெற்றி பற்றியும் பல தகவல்களை பகிர்ந்து கொள்கிறார். அதில் ஒன்று தான் அவர்களின் குடும்ப ரகசியமான, தப்பே செய்யாமல் மனைவி காலில் மா.கா.பா விழுந்து மன்னிப்பு கேட்பது. இதுக் குறித்த புரமோ தற்போது வெளியாகியுள்ளது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Sreeja Sreeja
  First published: