Home /News /entertainment /

Bigg Boss Ultimate: பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் முதல் போட்டியாளர் இவர் தான்!

Bigg Boss Ultimate: பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் முதல் போட்டியாளர் இவர் தான்!

 பிக் பாஸ் அல்டிமேட்

பிக் பாஸ் அல்டிமேட்

டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் பிக் பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சி 24 மணி நேரமும் ஒளிபரப்பாகவிருக்கும் அறிவிப்பு வெளியானது.

    டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரின் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ளும் போட்டியாளர்கள் குறித்த தகவல் இன்று முதல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    நடந்து முடிந்த பிக் பாஸ் 5-வது சீசனில் இசைவாணி, ராஜு ஜெயமோகன், மதுமிதா, அபிஷேக் ராஜா, நமீதா மாரிமுத்து, பிரியங்கா, அபிநய் வாடி, சின்ன பொண்ணு, பாவனி, நாடியா சங், வருண், இமான் அண்ணாச்சி, ஐக்கி பெர்ரி, ஸ்ருதி, அக்‌ஷரா, தாமரை செல்வி, சிபி சந்திரன், நிரூப் நந்தகுமார் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர். பின்னர் அமீர் மற்றும் சஞ்சீவ் வைல்ட் கார்டு எண்ட்ரியில் பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்தனர்.

    இதில் போட்டியாளர்கள் பெற்ற குறைந்த வாக்குகளின் அடிப்படையில் ஒவ்வொருவராக வெளியேற்றப்பட, பாவனி, பிரியங்கா, ராஜு, அமீர், நிரூப் ஆகிய ஐந்து பேரும் இறுதிப்போட்டிக்கு தேர்வானார்கள். நேற்று ஒளிபரப்பப்பட்ட இதன் இறுதிப் போட்டியில் ராஜு ஜெயமோகன் பிக் பாஸ் சீசன் 5-ன் டைட்டிலை வென்றார். இரண்டாவது இடத்தை பிரியங்காவும், மூன்றாவது இடத்தை பாவனி ரெட்டியும் பிடித்தனர்.

    மேட்சின் போது வெளியான அனுஷ்கா சர்மா-விராட் கோலி மகள் வாமிகாவின் படம் - கோபத்தில் ரசிகர்கள்

    பிக் பாஸ் 5 நிகழ்ச்சி முடிவடைந்ததையடுத்து, டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் பிக் பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சி 24 மணி நேரமும் ஒளிபரப்பாகவிருக்கும் அறிவிப்பு வெளியானது. இதற்கான ப்ரோமோவும் கடந்த வாரம் வெளியானது. இதையடுத்து நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ளும் போட்டியாளர்கள் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.



    இந்நிலையில் இன்று முதல் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ளும் போட்டியாளர்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குக் வித் கோமாளி புகழ் இடம் பெற்றுள்ள அந்த ப்ரோமோவில் முதல் போட்டியாளருக்கான க்ளூ இடம் பெற்றுள்ளது. யானை, சோளப்பொறி குறியீடு காட்டுப்பயலே பாடலைக் குறிக்கிறது. இந்தப் பாடலை எழுதியவர் கவிஞர் சினேகன். அதோடு ப்ரோமோவிலேயே பாம்பு மற்றும் துப்பாக்கியையும் காட்டுகிறார்கள். அதனால் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் சினேகன் கலந்துக் கொள்ளவிருப்பது உறுதியாகியிருக்கிறது. இது குறித்த அறிவிப்பு இன்று மாலை 6 மணிக்கு அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Bigg Boss Tamil

    அடுத்த செய்தி