• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • புதுச்சேரி முதல்வரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற சினேகன் - கன்னிகா தம்பதி!

புதுச்சேரி முதல்வரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற சினேகன் - கன்னிகா தம்பதி!

சிநேகன் - கன்னிகா ரவி தம்பதி

சிநேகன் - கன்னிகா ரவி தம்பதி

மிக பிரமாண்டமாக நடந்த இந்த திருமணத்தில் உலகநாயகன் கமலஹாசன் தலைமை வகித்தார்

  • Share this:
    நடிகர், கவிஞர், பாடலாசிரியர் மற்றும் அரசியல் பேச்சாளர் என பன்முகங்களை கொண்ட சினேகன் இதுவரை 2,500-க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார்.

    தஞ்சாவூரில் பிறந்த இவர் சென்னைக்கு வந்ததும் கவிஞர் வைரமுத்துவிடம் ஐந்து வருடம் பணியாற்றியுயுள்ளார். பின்பு புத்தம் புது பூவே திரைப்படம் மூலம் திரைத்துறைக்கு பாடலாசிரியராக அறிமுகமானார். மேலும் அமீர் இயக்கிய ‘யோகி’படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான இவர் தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ளார்.

    இதனை தொடர்ந்து விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 1-ல் கலந்துக் கொண்டதன் மூலம் பிரபலமடைந்தார். முன்னதாக சின்னத்திரையில் இளவரசி, அப்பனும் ஆத்தாலும், தெக்கத்தி பொண்ணு மற்றும் உயிர்மெய் போன்ற சீரியல்களில் நடித்தார். இந்நிலையில் சிநேகனுக்கும், நடிகை கன்னிகா ரவிக்கும் சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. கன்னிகா தேவராட்டம் உள்ளிட்ட சில படங்களில் துணை நடிகையாகவும், சின்னத்திரையிலும் நடித்துள்ளார். இவர்கள் இருவரும் கடந்த 8 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் இவர்களது திருமணம் சென்னையில் உள்ள கிரீன் பார்க் ஹோட்டலில் ஜூலை 29-ம் தேதி இரண்டு குடும்பத்தினர் சம்மதத்துடனும் நடைபெற்றது.

    மிக பிரமாண்டமாக நடந்த இந்த திருமணத்திற்கு உலகநாயகன் கமலஹாசன் தலைமை வகித்தார். இவர்களது திருமண புகைப்படங்கள் வெளியாகி வைரலாகியது. இவர்களது திருமணத்தில் குடும்பத்தினர், மற்றும் பிரபலங்களான இயக்குனர் பாரதி ராஜா, இயக்குனர் அமீர், பழ கருப்பையா, உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு வாழ்த்தினர்.

    இந்நிலையில் சினேகன் மற்றும் கன்னிகா ரவி ஆகியோர் சமீபத்தில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை சந்தித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. கன்னிகா தனது சமூக வலைத்தளத்தில் இதனை ஷேர் செய்துள்ளார். அதில் “எங்களை நேரில் அழைத்து வாழ்த்திய எங்களின் நலம் விரும்பி அய்யா என்.ரங்கசாமி" எனக் குறிப்பிட்டுள்ளார். ”புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் முதலமைச்சராகிய நீங்கள் எங்களை அழைத்து வாழ்த்தியத்திற்கு நன்றி அய்யா” என்றும் கன்னிகா ரவி தெரிவித்துள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.




    முன்னதாக திருமணம் முடிந்த கையோடு நடிகை கன்னிகா ரவி, தனது ட்விட்டர் பக்கத்தில் இருவரும் 7 வருடத்திற்கு முன்பு எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படத்தை ஷேர் செய்திருந்தார். அதில் ’என் முதல் காதல் திருமணத்துடன் தொடர்கிறது'. எங்களுடைய முதல் புகைப்படம் 2014-ம் ஆண்டு எடுத்தது. வாழ்த்திய எல்லோருக்கும் நன்றி கொரோனா சூழ்நிலையால் யாரையும் கூப்பிட முடியவில்லை, கோவம் வேண்டாம்’ எனவும் குறிப்பிட்டிருந்தார். இதனை தொடந்து சமீபத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய புகைபடங்களையும் ஷேர் செய்திருந்தார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: