Home /News /entertainment /

காதலர் தினத்தன்று காதலை சொல்ல போகும் ஜீ தமிழ் சீரியல் ஜோடிகள்!

காதலர் தினத்தன்று காதலை சொல்ல போகும் ஜீ தமிழ் சீரியல் ஜோடிகள்!

ஜீ தமிழ் சீரியல் ஜோடிகள்

ஜீ தமிழ் சீரியல் ஜோடிகள்

காதலர் தினத்தன்று ஜீ தமிழில் காதல் சங்கமம்' என்ற 2 மணி நேர ஸ்பெஷல் எபிசோடில் ரசிகர்கள் பார்க்கலாம்.

    மக்களை மகிழ்விப்பதில் தமிழ் சின்னத்திரையில் உள்ள பிரபல முன்னணி சேனல்கள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. தங்களது சேனலின் TRP ரேட்டிங்கை உயர்த்தும் வகையில் ரசிகர்களை தங்கள் நிகழ்ச்சிகளை ஆர்வமாக பார்க்க வைக்கும் வகையில் பல வித்தியாசமான முயற்சிகளையும் சேனல்கள் அவ்வப்போது எடுப்பது வழக்கமான ஒன்று. ஒரே கதையம்சம் என்ற ட்ராக்கில் சென்று கொண்டிருந்த சீரியல்கள் தற்போது வெள்ளித்திரை படங்களை மிஞ்சும் வகையில் காதல், ரொமேன்ஸ், ஆக்ஷன் என்று பட்டையை கிளப்பி கொண்டிருக்கின்றன.

    டிவி சேனல்களில் பல ரியாலிட்டி ஷோக்கள் ஒளிபரப்பாகி ரசிகர்களை பெரிதும் கவர்ந்திருந்தாலும், சீரியல்களுக்கான மவுசு தற்போது வரை குறையவில்லை. எனவே சீரியல்களிலும் அவ்வப்போது வித்தியாசமான முயற்சிகள் எடுக்கப்பட்டு அது மக்களை கவர்ந்து வருகின்றன. அந்த வகையில் ஒரே சேனலில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களை தேவைக்கேற்ப அவ்வப்போது ஒன்றாக சேர்த்து சங்கமம் என்ற பெயரில் தமிழ் சேனல்கள் ஒளிபரப்பி வருகின்றன. ஒரு சில நேரங்களில் அடுத்தடுத்து ஒளிபரப்பாகும் சீரியல்கள் சங்கமிக்க வைக்கப்படும் அல்லது வேறு டைமிங்கில் ஒளிபரப்பாகும் 2 சீரியல்கள் சங்கமிக்கும் அல்லது குறிப்பிட்ட சீரியலில் வேறு டைமிங்கில் ஒளிபரப்பாகும் சீரியல்களின் கேரக்டர்கள் சிறப்பு தோற்றத்தில் நடித்து ரசிகர்களை மகிழ்விப்பார்கள்.

    இதையும் படிங்க. BB Ultimate : ஜூலியை அழ வைத்தவர்கள் வனிதாவுக்கு விருது கொடுத்தார்கள்.. என்ன தான் நடக்குது இந்த பிக் பாஸ் அல்டிமேட்டில்?

    பல ஹிட் சீரியல்களை ஒளிபரப்பி வரும் முக்கிய சேனல்களில் ஒன்றாக இருந்து கொண்டிருக்கிறது ஜீ தமிழ் சேனல். தற்போது ஜீ தமிழ் ரசிகர்களுக்கு உற்சாகம் தரும் தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. குறிப்பாக ஜீ தமிழின் செம்பருத்தி, சத்யா, நினைத்தாலே இன்னிக்கும் ரசிகர்களுக்கு இது ஒரு நல்ல செய்தி. ஏனென்றால் இந்த பிரபலமான சீரியல்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ள பிரபல ஜோடிகள் அனைவருமே 'காதல் சங்கமம்' என்ற நிகழ்ச்சியில் ஒன்றாக வர உள்ளனர். செம்பருத்தி, சத்யா மற்றும் நினைத்தாலே இனிக்கும் சீரியல்களின் முன்னணி ஜோடிகளின் காதல் பயணத்தை 'காதல் சங்கமம்' என்ற 2 மணி நேர ஸ்பெஷல் எபிசோடில் ரசிகர்கள் பார்க்கலாம்.

    இதையும் படிங்க.. என்றென்றும் புன்னகை சீரியல் ஹீரோ இனி இவர் தான்… ஜீ தமிழ் கொடுத்த முக்கிய அப்டேட்!

    இந்த ஸ்பெஷல் எபிசோடில் மேற்காணும் 3 சீரியல்களில் ஹீரோ & ஹீரோயினாக நடிக்கும் கேரக்டர்கள் சீரியல் கதையின்படி தங்கள் உறவில் உள்ள குறைபாடுகளை அடையாளம் கண்டு, அவற்றை தீர்த்து கொள்ள முனைந்து முன்பை விட ஒருவருக்கொருவர் புரிந்து கொள்வதை ரசிகர்கள் பார்க்கலாம் என தெரிகிறது.



     




    View this post on Instagram





     

    A post shared by zeetamil (@zeetamizh)






    அன்பு மற்றும் நம்பிக்கை மூலம் தங்கள் துணையுடனான உறவை வளர்ப்பதன் முக்கியத்துவத்தை அனைவருக்கும் உணர்த்துவதே நிகழ்ச்சியின் தயாரிப்பாளர்களின் நோக்கம் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த 'காதல் சங்கமம்' ஸ்பெஷல் எபிசோடில் சத்யா 2 சீரியலில் இருந்து ஆயிஷா- விஷ்ணு, செம்பருத்தியிலிருந்து அக்னி - ஷபானா, நினத்தாலே இனிக்கும் சீரியலிலிருந்து ஸ்வாதி சர்மா- ஆனந்த் செல்வன் ஆகியோர் இணைவார்கள் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. காதலர் தினத்திற்கு முதல் நாளான பிப்ரவரி 13-ஆம் தேதி ஞாயிற்றுகிழமை மதியம் 1.30 முதல் 3.30 மணி வரை , 3 மெகா சீரியல்கள் இணையும் இந்த ஸ்பெஷல் எபிசோட் ஒளிபரப்பாகும் என்ற தகவலை ஜீ தமிழ் தனது இன்ஸ்டாவில் ஷேர் செய்து இருக்கிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: TV Serial, Zee tamil

    அடுத்த செய்தி