பிக்பாஸ் டைட்டில் வின்னர் லாஸ்லியா தான் - நடிகர் சதீஷ்

news18
Updated: July 11, 2019, 1:07 PM IST
பிக்பாஸ் டைட்டில் வின்னர் லாஸ்லியா தான் - நடிகர் சதீஷ்
லாஸ்லியா | நடிகர் சதீஷ்
news18
Updated: July 11, 2019, 1:07 PM IST
பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் லாஸ்லியா தான் வெற்றிபெறுவார் என்று நடிகர் சதீஷ் கூறியுள்ளார்.

பிக்பாஸ் 3 நிகழ்ச்சி சமீபத்தில் துவங்கியது. மூன்றாவது முறையாக கமல்ஹாசனே இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். பிக்பாஸ் வீட்டுக்குள் 16 பேர் போட்டியாளர்களாக சென்ற நிலையில் கடந்த வார இறுதியில் முதல் ஆளாக பாத்திமா பாபு வெளியேறினார்.

இந்த வாரம் வனிதா விஜயகுமார், சரவணன், மீரா மிதுன், மோகன் வைத்யா, மதுமிதா ஆகியோர் வெளியேற்றப்படுவோரின் பட்டியலில் உள்ளனர். இந்த பட்டியலில் இருந்து வார இறுதியில் ஒருவர் வெளியேற்றப்படுவார்.

நிகழ்ச்சி தொடங்கியது முதலே வீட்டுக்குள் இருக்கும் போட்டியாளர்களின் நடவடிக்கைகளை பார்த்து வரும் ரசிகர்கள், சமூகவலைதள பக்கங்களில் தங்களது கருத்துகளையும், விமர்சனங்களையும் முன்வைத்து வருகின்றனர். மேலும் திரைபிரபலங்கள் சிலரும் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து தங்களது கருத்துகளை சமூகவலைதள பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் நகைச்சுவை நடிகர் சதீஷ், அவ்வப்போது பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

இந்நிலையில் பிக்பாஸ் குறித்து இணைய செய்தி ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்திருக்கும் நடிகர் சதீஷ், “இந்த முறை பிக்பாஸ் நிகழ்ச்சியில் லாஸ்லியா தான் வெற்றி பெறுவார். இது என்னுடைய எண்ணம் மட்டுமல்ல. மக்களின் எண்ணமும் கூட” என்று கூறியுள்ளார்.பார்க்க: பிக்பாஸ் நிகழ்ச்சியை இந்த கோணத்துல பாருங்க பாஸ் - வைரல் மீம்ஸ்!

மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு உங்களை அழைத்தால் செல்வீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த நடிகர் சதீஷ், நான் கலந்துகொள்ள மாட்டேன். காரணம் 24 மணி நேரமும் ஒரு மனிதன் நடித்துக் கொண்டே இருக்க முடியாது.

ஒரு சந்தர்ப்பத்தில் நம்முடைய உண்மை முகம் வெளியே வரும். அது மக்களுக்கு பிடிக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை. அதனால் என் மேல் கெட்ட இமேஜ் வரவும் வாய்ப்புள்ளது. அதனால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான் கலந்துகொள்ள மாட்டேன்” என்று கூறியுள்ளார்.

மேலும் படிக்க: வனிதாவின் சண்டையால் பிக்பாஸ் வீட்டிற்குள் அழுகும் லாஸ்லியா... வருத்தத்தில் ரசிகர்கள்! 
First published: July 11, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...