Home /News /entertainment /

இது எங்களுடைய தவறில்லை... இலங்கை குறித்து உணர்ச்சி வசப்பட்ட லாஸ்லியா

இது எங்களுடைய தவறில்லை... இலங்கை குறித்து உணர்ச்சி வசப்பட்ட லாஸ்லியா

லாஸ்லியா

லாஸ்லியா

சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக செயல்படும் லாஸ்லியாவுக்கு கிட்டத்தட்ட 1.7 மில்லியன் ஃபாலோயர்கள் இருக்கிறார்கள்.

  சமீப காலமாக லாஸ்லியாவை பற்றி செய்திகள் அடிக்கடி வெளியாகின்றன. இலங்கையை சேர்ந்த லாஸ்லியா மரியநேசன் பிக் பாஸ் மூன்றாம் சீசனில் கலந்து கொண்டு ஓவர்நைட் ஸ்டாராக புகழ்பெற்றார். இலங்கையில் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளராக இருந்தவர் லாஸ்லியா. எந்த அளவுக்கு பிரபலம் அடைந்தாரோ, அதே அளவுக்கு எதிர்மறையான விமர்சனங்களையும் சந்தித்தார். அதனாலேயே லாஸ்லியாவை பற்றி எந்த செய்தி வந்தாலும் அது பெரிய அளவில் பேசப்படும்.

  தற்போது லாஸ்லியா எமோஷனலான ஒரு பதிவை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார் அது வைரலாக பரவி வருகிறது. கடந்த வாரம் நடிகர் அஸ்வின் குமார் உடன் லாஸ்லியா நடித்த மியூசிக் ஆல்பம் வெளியாகி ட்ரெண்டாகி வந்தது. அதுமட்டுமின்றி மில்லியன் கணக்கில் வியூஸும் அள்ளியது. பிக்பாஸ் சீசன் திரீ முடிந்த பிறகு பல திரைப்பட வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் அந்த அளவுக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

  அதனால், பிக்பாஸில் கலந்துகொண்ட போது கொழுகொழுவென்று இருந்த லாஸ்லியா இப்பொழுது எடை குறைத்து சிக்கென்று மாறி விட்டார். இதைப் பற்றியும் சில நாட்களுக்கு முன் அவர் பேட்டி அளித்திருந்தார். தனக்கு இனி திரைப்படங்கள் தான் எல்லாம் என்று முடிவு செய்த பிறகு அதற்கு ஏற்றவாறு என்னை நான் மாற்றிக் கொண்டுவிட்டேன் என்று அவர் கூறியிருந்தார்.

  அதேபோல பிக் பாஸில் இருக்கும் போது லாஸ்லியா கவின் காதல் தான் அதிகமாக பேசப்பட்டது. இருவரும் பிரேக் அப் செய்து விட்டுவிட்டதாகவும் வெளிப்படையாக அவர் சில நாட்களுக்கு முன்பு கூறியிருந்தார். பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்தபோது அந்த சூழலில் உறவு வேறு மாதிரி தெரிந்தது என்றும், பிக்பாஸ் வீட்டுக்கு வெளியே வந்த பிறகு எல்லாமே மாறிப்போனதாகவும் லாஸ்லியா தனது பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.

  பிக் பாஸ் அல்டிமேட்டின் வைல்டு கார்டாக கலந்து கொள்ளப்போகிறார் என்றும், அதற்கு குவாரண்டைனில் இருக்கிறார் என்றும் பல்வேறு செய்திகள் வெளியாகின. ஆனால், எதிர்பார்க்காத சில காரணங்களால், பிக்பாசில் கலந்து கொள்ளவில்லை.

  சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக செயல்படும் லாஸ்லியாவுக்கு கிட்டத்தட்ட 1.7 மில்லியன் ஃபாலோயர்கள் இருக்கிறார்கள். அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி புகைப்படம் பகிரும் பழக்கமும் இருக்கிறது.

  HBD Parvathy: தனித்துத் தெரியும் நடிகை பார்வதியின் பிறந்தநாள்! - படங்கள்

  இவர் கடந்த ஆண்டு கிறிஸ்மஸ்கு சாண்டா கிளாஸ் உடையில் வெளியிட்ட கவர்ச்சியான புகைப்படங்கள் லைக்கை குவித்தது. தற்போது மலையாள ரீமேக்கான கூகுள் குட்டப்பா என்ற படத்தில் தற்போது நடித்து வருகிறார். இந்த திரைப்படமும் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  இந்நிலையில் இலங்கையில் நடந்து வரும் பிரச்சனை குறித்து லாஸ்லியா எமோஷனலாக ஒரு பதிவை பகிர்ந்துள்ளார். கடந்த சில நாட்களாக இலங்கையில் தீவிரமான பொருளாதார பிரச்சினை நிலவி வருகிறது. இலங்கையின் அதிபரும் ராஜினாமா செய்துவிட்டார். இந்நிலையில் இலங்கையின் பொருளாதார தட்டுப்பாட்டுக்கு இந்தியாவும் உதவி செய்து வருகிறது என்பது அனைவரும் அறிந்தது. தண்ணீர் சூழ்ந்த தீவான இலங்கையில் இப்பொழுது கண்ணீர் சூழ்ந்துள்ளது.

  Happy Birthday Parvathy: மிஸ் பண்ணக் கூடாத பார்வதியின் 5 படங்கள்!
  2019 ஆம் ஆண்டு சர்ச்சுகளில் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது, எங்களுடைய குடும்பங்கள் சுனாமியை எதிர்கொண்டன, அதை கடந்த பின்பு கோவிட் தாக்குதலால் பாதிப்பு. மேலும், தற்போது மிகவும் தீவிரமான பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இது எங்களின் தவறு இல்லை ஆனால் நாங்கள் ஸ்ரீலங்காவைச் சேர்ந்தவர்கள் என்பதால் மட்டுமே இதையெல்லாம் நாங்கள் அனுபவிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. எவ்வளவு நெருக்கடியான நிலையிலும் நாங்கள் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருப்போம் என்று எமோஷனலாக பதிவு செய்துள்ளார் லாஸ்லியா.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published:

  Tags: Losliya

  அடுத்த செய்தி