முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / Bigg Boss Ultimate: மூன்றாவது வைல்டு கார்டு போட்டியாளரால் ஆட்டம் மாறுமா?

Bigg Boss Ultimate: மூன்றாவது வைல்டு கார்டு போட்டியாளரால் ஆட்டம் மாறுமா?

bigg boss ultimate tamil

bigg boss ultimate tamil

Bigg Boss Ultimate Tamil | பலரும் ஓவியா மற்றும் ஷெரின் ஆகியவர்களைக் வைல்டு கார்டாக வருவார்கள் என குறிப்பிட்டார்கள். ஆனால், யாரும் எதிர்பார்க்காத வகையில், பிக் பாஸ் சீசன் 3ல் பல சர்ச்சைகளில் சிக்கிய ஒருவர் தான் மூன்றாவது வைல்டு கார்டு போட்டியாளாராக வரப்போகிறார் என்ற செய்தி வெளியானது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

டிஸ்னிபிளஸ் ஹாட்ஸ்டாரில் 24 மணிநேரமும் பிக்பாஸ் அல்டிமேட்டில் வெற்றிகரமாக ஐந்தாவது வாரம் நிறைவடைய இன்னும் ஒரு நாள் தான் இருக்கிறது. பிக்பாஸ் அல்டிமேட்டைப் பொறுத்தவரை அதன் போட்டியாளர்கள் தான் மிகப்பெரிய அட்ராக்ஷனாக இருக்கிறார்கள் . சீசன் 1 ல் இருந்து சினேகன், சுஜா, மற்றும் ஜூலி, சீசன் 2 ல் இருந்து ஷாரிக் மற்றும் தாடி பாலாஜி, சீசன் 3 ல் இருந்து அபிராமி மற்றும் வனிதா விஜயகுமார், சீசன் 4 ல் இருந்து பாலாஜி முருகதாஸ், அனிதா மற்றும் சுரேஷ் சக்கரவர்த்தி மற்றும் இறுதியாக சமீபத்தில் முடிந்த சீசன் 5 ல் இருந்து நான்கு போட்டியாளர்கள் தாமரை, நிரூப், சுருதி மற்றும் அபிநய் ஆகியோர் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளனர்.

முதலில் 8 வாரம் தான் இந்த அல்டிமேட் சீசன் இருக்கும் என்று கூறப்பட்டது. ஆனால், தற்போது 10 வாரம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. வைல்டு கார்டு என்ட்ரியாக மீண்டும் வந்துள்ள சுரேஷ் தவிர்த்து, சுஜா, அபிநய், மற்றும் ஷாரிக் ஆகியோர் எலிமினேட் செய்யப்பட்டுவிட்டார்கள். வனிதா விஜயகுமார் தானாகவே வாக்-அவுட் ஆகிவிட்டார். மற்றொரு வைல்டு கார்டாக KPY சதீஷும் வந்துள்ளார்.

இப்போது 11 போட்டியாளர்களுடன் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் இந்த வாரம் ஒருவர் வெளியேறிவிடுவார். ஷோ இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்ட நிலையில், புதிய போட்டியாளரை களம் இறக்க முடிவு செய்துள்ளனர் பிக்பாஸ் குழுவினர்.

வைல்டு கார்டாக யார் வருவார் என்ற கேள்விக்கு பார்வையாளர்கள் தங்களின் விருப்பமான போட்டியாளர்கள் பெயரைக் கூறினார்கள். அதில், பலரும் ஓவியா மற்றும் ஷெரின் ஆகியவர்களைக் குறிப்பிட்டார்கள். ஆனால், யாரும் எதிர்பார்க்காத வகையில், பிக் பாஸ் சீசன் 3ல் பல சர்ச்சைகளில் சிக்கிய லாஸ்லியா தான் மூன்றாவது வைல்டு கார்டு போட்டியாளாராக வரப்போகிறார் என்ற செய்தி வெளியானது.

பிக் பாஸ் சீசன் 3ல் கவினுடன் காதல், சக ஹவுஸ்மேட்ஸ்களுடன் சண்டை என்று பல சர்ச்சைகள் சூழந்தன. ஓரிரு படங்களில் நடித்த லாஸ்லியா, திரைப்படங்களின் ரிலீஸுக்காக காத்திருக்கிறார். ஆனால், இவருடைய என்ட்ரி கேமை மாற்றும் என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

Also Read : சிம்புவின் பாணியை ஃபாலோ செய்யும் விஜய் டிவி நடிகை!

லாஸ்லியாவுக்கு கணிசமான ஃபாலோயர்கள் உள்ளனர். சீசன் 3ன் போட்டியாளர் என்பதால், அதற்குப் பின்னர் வந்த சீசன்களின் போட்டியாளர்களின் ரசிகர்கள் லாஸ்லியாவின் ரசிகர்களாக இருக்கும் வாய்ப்பு அதிகம். இதனால், கணிசமான அளவில் வாக்குகள் பிரியும் வாய்ப்பு உள்ளது. அது மட்டுமின்றி, ஏற்கனவே அல்டிமேட்டில் கலந்துகொண்டுள்ள அபிராமியும், லாஸ்லியாவும் சகோதரிகள் போன்றவர்கள். ஆனால், தற்போது ஜூலியும், அபிராமியும் நெருக்கமாக பழகி வருகிறார்கள்.

Also Read : சூப்பர் சிங்கர் பிரியங்கா மீது கடும் கோபத்தில் விஜய் டிவி?

லாஸ்லியாவின் வரவு இவர்கள் நட்பை பாதிக்குமா? அது மட்டுமின்றி, ஏகப்பட்ட கிசுகிசுக்கள் வலம் வருகின்றன. இதைப் பற்றி லாஸ்லியா அபிராமிக்குத் தெரியப்படுத்துவாரா என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல, சீசன் 3ல் தனித்து விளையாடாமல் குழுவாக விளையாடித் தான் ஃபைனலுக்கு வந்தார் என்று ஒரு தரப்பினர் விமர்சன் செய்து வருகின்றனர். ஆறாவது வாரத்தில் இணையும் லாஸ்லியாவுக்கு இந்த சீசனில் வெற்றி பெற வாய்ப்பு குறைவு என்றாலும், இவர் எப்படி கேம் விளையாடுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

நாளை ஒளிபரப்பாகும், சிம்பு தொகுத்து வழங்கும் வார இறுதி நிகழ்வில் லாஸ்லியா அறிமுகமாகி வீட்டுக்குள் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read : குக் வித் கோமாளி சுனிதாவின் பாய் ஃபிரண்ட் இவரா? காதலை சொன்ன வீடியோ!

இந்த வார எலிமினேஷன் பட்டியலில், சினேகன், சுருதி, தாடி பாலாஜி மற்றும் அபிராமி ஆகியோர் டேஞ்சர் ஜோனில் இருக்கிறார்கள். சிம்புவின் வருகையை முன்னிட்டு, கடந்த வாரம் எந்த போட்டியாளரும் எலிமினேட் ஆகவில்லை. அதனால், இந்த வாரம் கண்டிப்பாக எலிமினேஷன் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

First published:

Tags: Bigg Boss Tamil, Entertainment, Losliya