தங்க மீன்கள் பாடலுடன் பிக்பாஸ் வீட்டுக்கு வந்த லாஸ்லியாவின் அப்பா!

தங்க மீன்கள் பாடலுடன் பிக்பாஸ் வீட்டுக்கு வந்த லாஸ்லியாவின் அப்பா!
தந்தையுடன் பிக்பாஸ் லாஸ்லியா
  • News18
  • Last Updated: September 11, 2019, 12:56 PM IST
  • Share this:
நேற்று முகெனின் தாய், மற்றும் தங்கை பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த நிலையில் இன்று லாஸ்லியாவின் தந்தை வீட்டுக்கு வருகை தந்துள்ளார். 10 ஆண்டுகளாக தனது தந்தையைப் பார்க்காத லாஸ்லியா, பிக்பாஸ் வீட்டுக்குள் தந்தையைப் பார்த்தவுடன் கண்ணீர் விட்டு கதறி அழுகிறார்.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி 80 நாட்களைக் கடந்து இறுதிக்கட்டத்தை நோக்கி பயணித்து வருகிறது. ஆரம்பத்தில் 16 போட்டியாளர்களுடன் துவங்கிய இந்நிகழ்ச்சியில் தற்போது 8 போட்டியாளர்கள் உள்ளனர்.

இவர்களில் கவின், ஷெரின், வனிதா, தர்ஷன், சாண்டி ஆகியோர் இந்தவாரம் வெளியேற்றப்படுவோரின் பட்டியலில் உள்ளனர். இவர்களில் ஒருவர் மக்கள் அளிக்கும் வாக்குகளின் அடிப்படையில் வெளியேற்றப்படுவார்.


இதுஒருபுறமிருக்க இறுதிக்கட்டத்தில் இருக்கும் போட்டியாளர்களின் குடும்பத்தினர் பிக்பாஸ் வீட்டுக்கு வந்து அவர்களை சந்திக்கின்றனர். நேற்று முகெனின் தாய் மற்றும் தங்கை பிக்பாஸ் வீட்டுக்கு வந்திருந்தனர். இன்று லாஸ்லியாவின் தந்தை வருகை தந்துள்ளார். அவரைப்பார்த்து லாஸ்லியா கண்ணீர் விட்டு கதறி அழுகிறார். பின்னணியில் தங்க மீன்கள் படத்தின் ஆனந்த யாழ் பாடல் ஒலிக்கிறது. இதை புரமோ வீடியோவாக நிகழ்ச்சிக் குழு வெளியிட்டுள்ளது.

கடந்த வார இறுதியில் ரகசிய அறைக்குச் செல்லும் முன்பாக லாஸ்லியாவிடம் பேசிய சேரன், உனது தந்தையை நீ நேரில் பார்த்து 10 வருடங்களாகின்றன என்று கூறியிருந்தார்.

அதன்படி பார்த்தால் லாஸ்லியா 10 வருடங்களுக்குப் பின் தனது தந்தையை சந்திக்கிறார்.

வீடியோ பார்க்க: CINEMA ROUNDUP | மீண்டும் கைகோர்க்கும் சூர்யா - கெளதம் மேனன்

First published: September 11, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்