சீனப்பெண் போல் இருப்பதால் வாய்ப்புகள் மறுக்கப்பட்டது - மௌன ராகம் சீரியல் நடிகை ஓபன் டாக்!

நடிகை ரவீனா தாஹா

சின்னத்திரையில் இப்பொது இவர் பிரபலமாகியிருந்தாலும் வெள்ளித்திரையில் கதாநாயகியாக வலம்வர வேண்டும் என்பதே இவரது ஆசை.

  • Share this:
இயக்குநர் நேசன் இயக்கிய ஜில்லா படத்தில் நடிகர் விஜய்யுடன் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் ரவீனா தாஹா. இந்த படத்திற்கு பிறகு பள்ளி பருவ பெண்ணாக ராட்ஷசன் படத்தில் அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தார். இவர் வெள்ளித்திரையில் முதன்முறையாக கால் தடம் பதித்தது கதை சொல்ல போறோம் என்கிற படத்தில் தான். இதுதவிர ஜீவா, புலி, பேய்கள் ஜாக்கிரதை, நாகேஷ் திரையரங்கம் உள்ளிட்ட பல படங்களிலும் நடித்துள்ளார். மேலும் திரை பயணத்திற்கு முன்னர் சின்னத்திரையில் தான் இவர் என்ட்ரி கொடுத்துள்ளார்.

அவரது முதல் சீரியல் தங்கம், அப்போது அவருக்கு 3 வயது. இந்த சீரியல் ஜூன் 2009 ஆண்டு ஒளிபரப்பட்டது. இதில் நடிகை ரம்யாகிருஷ்ணன் கதாநாயகியாக நடித்துள்ளார். அதைத் தொடர்ந்து வசந்தம், பவானி, சாந்தி நிலையம், வள்ளி, மல்லி, பைரவி, 63 நாயன்மார்கள், ராமானுஜர், சந்திரலேகா என பல தொடர்களில் நடித்துள்ளார். இவை அனைத்திலும் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார்.

Also Read : உங்களை கல்யாணம் செய்து கொள்வதற்கான நடைமுறை என்ன? ரசிகரின் கேள்விக்கு பதிலளித்த பிரியா பவானி சங்கர்!

ஒரு நீண்ட இடைவேளைக்கு பிறகு தான் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை என இரண்டிலும் தலைகாட்ட ஆரம்பித்தார். அப்போது ஜீ தமிழில் ஒளிபரப்படும் பூவே பூச்சூடவா தொடரில் நடித்திருந்தார். பின்னர் அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பான DJD ரியாலிட்டி ஷோவில் கலந்துகொண்டு முதல் ரன்னர் அப் பட்டத்தை வென்றிருந்தார்.

இப்போது இவர் தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வரும் நிலையில் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் மௌன ராகம் 2 என்ற சீரியலில் நாயகியாக நடித்து வருகிறார். மேலும் இவர், தனது இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் போட்டோஷூட் மற்றும் ரீலிஸ் ஆகியவற்றை பதிவிடுவதன் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்து வருகிறார். சின்னத்திரையில் இப்பொது இவர் பிரபலமாகியிருந்தாலும் வெள்ளித்திரையில் கதாநாயகியாக வலம்வர வேண்டும் என்பதே இவரது ஆசை.

Also Read : காதலருடன் போதைப்பொருள் பயன்படுத்திய தமிழ் நடிகை கைது

இவர், சமீபத்தில் அளித்த பேட்டியில் கூட, சீரியலில் நாயகியாக நடித்தாலும் வெள்ளித்திரையில் நாயகியாக நடித்து சாதிக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை என்று கூறியிருந்தார். எப்படியாவது வெள்ளித்திரையில் நுழைய வேண்டும் என்ற ஆசையில் வாய்ப்பை தேடி அலைந்த இவருக்கு தோல்விகளே பதிலாக இருந்தது. எங்கு சென்றாலும் இவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. பார்ப்பதற்கு சீனர்களைப்போல இருப்பதால், இவருக்கு பல இடங்களில் சிவப்பு கொடிதான் காண்பிக்கப்பட்டது.

ஆனால் சற்றும் மனம் தளராமல் வாய்ப்புக்காக பொறுமையாக காத்திருந்த தளபதி ரசிகையான ரவீனாவிற்கு ஜில்லா திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. இப்போது இளசுகளின் நாயகியாக உருவெடுத்துள்ளார். விரைவில் வெள்ளித்திரையில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்புகள் இருக்கிறது. இப்போது விஜய் டிவியின் மௌன ராகம் தொடரில் சக்தி கதாபாத்திரத்தில் நடித்து, பல ரசிகர்களை ஈர்த்து வருகிறார். ஆரம்பத்தில் சுருதி கதாபாத்திரத்திற்காக ஆடிஷனுக்கு சென்றவர், பிறகு சக்தி கதாபாத்திற்கு தேர்வு செய்யப்பட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Vijay R
First published: