Sembaruthi Serial: செம்பருத்தி சீரியலில் பிரபல சினிமா நடிகர்!

Sembaruthi Serial: செம்பருத்தி சீரியலில் பிரபல சினிமா நடிகர்!

செம்பருத்தி சீரியல் ஷபானா

ஆதித்யா தனது வீட்டின் பணிப்பெண் பார்வதி மீது (ஷபானா) காதலில் விழுந்து அவளை மணக்கிறான்.

  • Share this:
    சீரியல்கள் தமிழ் மக்கள் மனதில் மிகவும் நெருக்கமாகியிருக்கின்றன. சீரியல்கள் அன்றாட பொழுதுபோக்கின் முக்கிய ஆதாரமாக மாறியிருக்கின்றன எனக் கூறலாம். ஃபன், நகைச்சுவை, சிலிர்ப்பு, காதல், சூழ்ச்சி மற்றும் நிலைத்தன்மை என ஒரு பொழுதுபோக்கிற்கு தேவையான அனைத்தும் இதில் அடங்கியுள்ளன.

    அந்த வகையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘செம்பருத்தி’ சீரியல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. 2017-ல் முதல் ஒளிபரப்பாகி வரும் இந்த குடும்ப நாடகம், ஆதித்யா (அப்போது கார்த்திக் ராஜ், இப்போது அக்னி) மற்றும் அவரது தாயார் அகிலாண்டேஸ்வரி (பிரியா ராமன்) ஆகியோருக்கு இடையிலான உறவை சித்தரிக்கிறது.

    குக் வித் கோமாளி புகழ் காட்டில் பட மழை! முன்னணி நடிகரின் படத்தில் ஒப்பந்தம்?

    ஆதித்யா தனது வீட்டின் பணிப்பெண் பார்வதி மீது (ஷபானா) காதலில் விழுந்து அவளை மணக்கிறான். அடுத்து என்ன நடக்கும் என்பது கதையின் முக்கிய அம்சமாக அமைகிறது. இப்போது, சமீபத்திய செய்தி என்னவென்றால், செம்பருத்தி சீரியலில் பிரபல நடிகரும், முன்னாள் ஹீரோவுமான லிவிங்ஸ்டன் சிறப்பு தோற்றத்தில் நடிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: