சன் டிவி சீரியலில் இருந்து விலகியது ஏன்? நடிகர் லிவிங்ஸ்டன் மகள் விளக்கம்

நடிகை ஜோவிதா

‘பூவே உனக்காக’ சீரியலில் இருந்து விலகியதற்கான காரணத்தை நடிகர் லிவிங்ஸ்டன் மகள் ஜோவிதா வெளிப்படுத்தியுள்ளார்.

  • Share this:
1982-ம் ஆண்டு வெளியான ‘டார்லிங் டார்லிங் டார்லிங்’ படத்தில் உதவி இயக்குநராகவும், சிறிய கேரக்டரிலும் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் லிவிங்ஸ்டன்.

அதைத்தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும் இவர் தற்போது தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்து வருகிறார். மேலும் கன்னிராசி, காக்கி சட்டை உள்ளிட்ட சில திரைப்படங்களுக்கு திரைக்கதை அமைத்தும் கொடுத்திருக்கிறார்.

நடிகர் லிவிங்ஸ்டனுக்கு ஜோவிதா, ஜெம்மா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் ஜோவிதா சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘பூவே உனக்காக’ தொடரில் பூவரசி என்ற கேரக்டருக்கு தோழியாக கீர்த்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இந்த சீரியல் ஆரம்பித்து சில மாதங்களே ஆன நிலையில் இத்தொடரில் இருந்து ஜோவிதா லிவிங்ஸ்டன் விலகியுள்ளார்.

தான் விலகியதற்கான காரணத்தை இன்ஸ்டாகிராமில் வெளிப்படுத்தியிருக்கும் அவர், “பூவே உனக்காக தொடரில் இருந்து விலகுகிறேன். நான் எனது உயர்கல்வியை தொடர இருப்பதால் இந்த முடிவை எடுத்துள்ளேன். இந்த சிறப்பான வாய்ப்பை எனக்களித்த சன் டிவி குடும்பத்திற்கு நான் எப்பொழுதும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். அனைத்துக்கும் மேலாக உங்கள் அனைவருடைய அன்புக்கும் நன்றி. இதேபோல் என் வாழ்க்கையில் நான் செய்யும் ஒவ்வொரு செயல்களுக்கும் உங்கள் ஆசிர்வாதம் வேண்டும். மிக விரைவில் அடுத்த புராஜெக்டில் உங்களை சந்திக்கிறேன்” இவ்வாறு நடிகை ஜோவிதா தெரிவித்துள்ளார்.
ஜோவிதா ஏற்கெனவே சுந்தர்.சி.யின் உதவியாளர் அஸ்வின் மாதவன் இயக்கத்தில் நடிகை அம்பிகாவின் மகன் ஹீரோவாக அறிமுகமான படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். அந்தப் படம் இன்னும் திரைக்கு வரவில்லை.
Published by:Sheik Hanifah
First published: