ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

எடுத்துச் சொல்லும் ஜிபி முத்து! கடுப்பில் சீறும் அஸீம்! நேற்றைய பிக்பாஸில் நடந்தது இதுதான்!

எடுத்துச் சொல்லும் ஜிபி முத்து! கடுப்பில் சீறும் அஸீம்! நேற்றைய பிக்பாஸில் நடந்தது இதுதான்!

அஸீம், ஜிபி முத்து

அஸீம், ஜிபி முத்து

முதல் நாள் பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் 4 கிளப்புகளாக பிரிந்து வீட்டில் உள்ள வேலைகளை செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டது.

  • News18
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

பிக்பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் இரண்டாவது தினமான நேற்று நடந்த சம்பவங்கள் குறித்து காண்போம்.

சின்னத்திரையில் பிகபாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சி கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கப்பட்டு இதுவரை 5 சீசன்கள் முடிந்துள்ளது.

இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் கடந்த 9-ம் தேதி தொடங்கியுள்ளது. இந்நிகழ்ச்சியில் ஜி.பி.முத்து, அசல் கோலார், ஷிவின் கணேசன், முகமது அசீம், ராபர்ட் மாஸ்டர், ஆயிஷா, ஷெரீனா, மணிகண்ட ராஜேஷ், ரக்ஷிதா மகாலட்சுமி, ராம் ராமசாமி, ஆர்யன் தினேஷ் கனகரத்தினம், ஜனனி, சாந்தி, விக்ரமன், அமுதவாணன், மகேஸ்வரி சாணக்கியன், வி.ஜே.கதிரவன், குயின்சி ஸ்டான்லி, நிவா,தனலட்சுமி என 20 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர்.

முதல் நாள் பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் 4 கிளப்புகளாக பிரிந்து வீட்டில் உள்ள வேலைகளை செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டது.

அப்போது கிச்சன் கிளப்பில் உள்ள மகேஷ்வரி டாஸ்க் முடியும் வரை காலையில் ஒரு டீ, மாலையில் ஒரு டீ மட்டுமே வழங்கப்படும் என்று மகேஷ்வரி கூற, நீங்கள் பிக்பாஸ் இல்லை என்று அசீம் வாதம் செய்கிறார்.

அதனை தொடர்ந்து கிச்சன் டீமின் லீடர் ஷிவின் கணேசன் போட்டியாளர்கள் அனைவரையும் டைனிங் ஹாலில் கூட்டி, வீட்டின் ரேஷன் இருப்பு குறித்தும், டாஸ்கின் போது அடிக்கடி டீ போடுவது என்பது கடினம் என்றும் தெரிவித்தார். அதன் பின்னர் தனியாக பேசிக்கொண்ட மகேஷ்வரியும் அசீமும் மாறிமாறி சாரி சொன்னதுடன் இனி இவ்வாறு பிரச்னை நடக்காமல் பார்த்துகொள்ளலாம் என்று கூறிக்கொண்டனர்.

பின்பு ஆக்டிவிட்டி ஏறியாவில் போட்டியாளர்களுக்கு ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டது. அதில் இங்கு உள்ள போட்டியாளர்களிடையே யாரிடம் நட்பு பாராட்ட விரும்புகிறீர்கள் என்று பிக்பாஸ் கேட்க ஒருவர் பின் ஒருவராக வந்து யாரிடம் நட்பு வேண்டும் எதற்காக அந்த நட்பு வேண்டும் என்று விளக்கினர்.

அவர்களை தொடர்ந்து அசல் வந்து ஆயிசாவிடம் நட்பு குறித்து பேசும் போது என்னை வாடா, போடா என்று பேசாதை என கூற உடனே ஜிபி முத்து ஃப்ரண்ட்ஸ்னா அப்படிதான் கூப்புடுவாங்க ஃப்ரண்ட்ஸ்க்குள் எந்த வரமுறையும் இல்லை என்று கூற அனைத்து போட்டியாளர்களும் அவரின் கருத்தை ஆமோதித்தனர்.

அதனை தொடர்ந்து ஆக்டிவிட்டி ஏரியாவிற்கு போட்டியாளர்கள் அனைவரையும் அழைத்த பிக்பாஸ் அங்கு உள்ள மைக்கின் முன் நின்று உங்களால் எவ்வளவு சத்தமாக கத்தமுடியுமோ கத்துங்கள். நீங்கள் கத்தும் சத்தத்தை பொறுத்து அதன் டெசிமல் கணக்கிடப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

முதலாவதாக வந்த அசீம் கத்தும் போது சில டெக்கினிக்கள் பிரச்னை காரணமாக அவர் கத்திய டெசிமல் கணக்கிட முடியாமல் போனது அதனால் அவருக்கு இன்னொரு முறை கத்தும் வாய்ப்பை பிக்பாஸ் வழங்கினார். அசீம் தொண்டை பிரச்னை ஆகிவிட்டது அதனால் கடைசியாக கத்துகிறேன் என்று கூறிவிட்டார்.

Also read... கிச்சன் சண்டை.. 'நீங்க பிக்பாஸ் இல்லை..' மகேஷ்வரியிடம் கடுப்பைக் காட்டிய அசீம்!

அவரை தொடர்ந்து மற்ற போட்டியாளர்கள் வரிசையாக வந்து மைக்கின் முன் கத்தினர். அவர்களின் சத்ததின் டெசிமல் கணக்கிடப்பட்டது. அப்போது அசல் கத்தும் போது சரியாக கத்தவில்லை அதனால் அசீமுக்கு வழங்கிய இரண்டாவது வாய்ப்பு போல அசலுக்கும் வழங்க வேண்டும் என்று விக்ரமன் கேட்டார்.

இதற்கு ஜிபி முத்து, மணிகண்டன் உட்பட மற்ற போட்டியாளர்கள் கடுபாகி அது டெக்கினிக்கள் பிரச்னை காரணமாக அசீமிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இதற்கு வாய்பு வழங்குவது நியாயமானது இல்லை என்று பேசினர்.

பின்பு இன்றைய நாளிற்கான முன்னோட்டம் இறுதியில் போடப்பட்டது. அதில் ரக்‌ஷித்தா கத்தியது அனைத்து போட்டியாளர்களையும் அதிர்ச்சியில் உறைய வைத்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Bigg Boss Tamil 6