• HOME
 • »
 • NEWS
 • »
 • entertainment
 • »
 • பிக் பாஸ் டைட்டில் வின்னருக்கு ஜோடியா ‘கண்மணி’ லீஷா!

பிக் பாஸ் டைட்டில் வின்னருக்கு ஜோடியா ‘கண்மணி’ லீஷா!

லீஷா எக்லெர்ஸ்

லீஷா எக்லெர்ஸ்

சன் டிவி-யில் ஒளிபரப்பாகும் கண்மணி சீரியல் லீஷா எக்லெர்ஸ் தெலுங்கு படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.

 • Share this:
  கண்மணி சீரியலில் ஹீரோயினாக நடித்த நடிகை லீஷா, தெலுங்கு பிக்பாஸ் டைட்டில் வின்னர் கௌஷல் மந்தனுக்கு ஜோடியாக புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளார்.

  ஆந்திராவைச் சேர்ந்த நடிகை லீஷா, படித்து முடித்தது எல்லாம் சென்னையில் தான். பள்ளிப் படிப்பை நிறைவு செய்த லீஷா, சென்னையிலேயே கல்லூரி படிப்பையும் முடித்தார். அப்போது, அவருக்கு இருந்த ஆசையின் காரணமாக மாடலிங்கில் கால்பதித்தார். இதில் போதுமான அனுபவத்தைப் பெற்றுக் கொண்ட பின்பு திரையில் ஜொலிக்க வேண்டும் என முடிவெடுத்த லீஷா, கோடம்பாக்கத்துக்குள் நுழைய முயற்சி எடுத்தார். மாடலிங் துறையில் இருந்ததால் அழகான புகைப்படங்களுடன் தமிழ் திரையுலகில் வாய்ப்பு தேடினார்.

  இயக்குநர் சசிக்குமாரின் வெள்ளையத் தேவா படத்தில் நடிக்க முதன்முதலாக வாய்ப்பு கிடைத்தது. அதில் சப்போர்ட்டிங் கேரக்டர் ரோலை ஏற்று நடித்திருப்பார். அதனைத் தொடர்ந்து திருப்புமுனை, பொதுநலன் கருதி, சிரிக்க விடலாமா, மை டியர் லிசா, பிரியமுடன் பிரியா உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார். ஆனால், அவருடைய நடிப்புக்கான உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை. இதனால், அதுவரை வெள்ளித்திரையில் பயணிக்க வேண்டும் என்றிருந்த லீஷாவின் பார்வை, சின்னத்திரை மீது திரும்பியது.

  அவருடைய அதிர்ஷடம் சன் டிவியில் ஒளிபரப்பான கண்மணி சீரியலில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்புறம் என்ன சொல்லவா வேண்டும், கண்மணி கதாப்பாத்திரத்தில் நடிப்பில் அசத்தினார். அவருடைய புகழும் பட்டிதொட்டியெல்லாம் ரீச்சானது. சின்னத்திரையில் டாப் ஹீரோயின் லிஸ்டில் சென்ற அவர், இன்ஸ்டாகிராமில் குதித்தார். அங்கு அழகான புகைப்படங்களை தொடர்ந்து பதிவேற்றிக் கொண்டே இருந்தார்.

  சேலை முதல் மார்டன் டிரஸ் வரை அனைத்து டிரஸ்களிலும் டிசைன் டிசைனாக போஸ் கொடுத்து அவர் பதிவேற்றிய படங்கள், ரசிகர்களின் மனங்களையும் கவர்ந்தது. ஹோம்லி கேர்ள் என பட்டம் கட்டிவிடக்கூடாது என்பதற்காக கவர்ச்சியிலும் தாராளம் காட்டினார். இது ரசிகர்களின் மனங்களை வெகுவாக கவர்ந்து, இளைஞர்களின் இதயங்களில் இடம்பிடிக்கும் அளவுக்கு சென்றார்.

  நாளுக்கு நாள் இன்ஸ்டாவில் கிடைக்கும் ஆதரவால் மகிழ்ச்சியில் இருந்த லீஷாவுக்கு, தமிழ் திரைப்பட உலகில் அடிக்காத ஜாக்பாட் தெலுங்கு திரைப்பட உலகில் அடித்துள்ளது. அந்த மாநிலத்தில் ஒளிபரப்பான பிக்பாஸில் டைட்டில் வெற்றிப் பெற்ற கௌஷன் மந்தன் புதிய படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக கண்மணி லீஷா நடிக்கிறார். இந்த மகிழ்ச்சியான செய்தியை அவரே தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பதிவேற்றியிருக்கிறார்.   
  View this post on Instagram

   

  A post shared by Leesha eclairs (@leesha_eclairs)


  இதற்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ள நெட்டிசன்கள், எப்போதும்போல் அழகான புகைப்படங்களை பதிவேற்ற மறந்துவிடாதீர்கள் என்ற கோரிக்கையையும், கண்மணியிடம் வைத்துள்ளார்கள். இவ்வளவு நாள் கலர் கலர் புகைப்படங்களில் ரசிகர்களை கவர்ந்த லீஷா, ஜாக்பாட் அடித்திருக்கும் இந்த நேரத்தில் போட்டோ போட மறந்துவிடுவாரா என்ன? சீக்கிரமே நச்சுன்னு இருக்கும் புகைப்படம் ஒன்றை போட்டு, எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வார் என கோரிக்கை வைத்த நெட்டிசன்களுக்கு பதில் கொடுத்துள்ளனர்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Shalini C
  First published: