தமிழும் சரஸ்வதியும் தொலைக்காட்சி தொடரில் நடிப்பதில் மகிழ்ச்சி – லாவண்யா மாணிக்கம்!

லாவண்யா மாணிக்கம்

சீரியலில் முக்கிய வேடங்களில் நடிக்கும் நடிகர்களையும் குறிப்பிட்டு, அவர்களுக்கும் நன்றி தெரிவித்திருந்தார்

  • Share this:
‘தமிழும் சரஸ்வதியும்’ என்ற புத்தம் புதிய சீரியலில், ராகினி என்ற பாத்திரத்தில் நடிப்பதில் உற்சாகமாக இருப்பதாக நடிகை லாவண்யா மாணிக்கம் தெரிவித்துள்ளார்.

ஸ்டார் விஜய் தொலைகாட்சியின் புத்தம் புதிய சீரியல் ‘தமிழும் சரஸ்வதியும்.’ இது ஜூலை 12 அன்று முதல் எபிசோடை ஒளிபரப்பியது. இந்த சீரியலில் நடிப்பதில் உற்ச்காகமாக இருப்பதாக தெரிவித்தார் நடிகை லாவண்யா மாணிக்கம். இவர் இந்த சீரியலில் ராகினி என்ற கதாபாத்திரத்தில், நாயகனின் தங்கையாக நடிக்கிறார். நாயகனாக, தமிழ் என்ற பாத்திரத்தில் தீபக் தினகர் நடித்து வருகிறார்.

இந்த சீரியலில் நடிப்பதில் மிகவும் மகிழ்ச்சியாக உணர்வதாக சமூக வலைத்தளங்களில் தெரிவித்திருந்தார் நடிகை லாவண்யா மாணிக்கம். “கடவுளின் ஆசீர்வாதத்துடன், இந்த பிரபஞ்சத்தின் நேர்மறை சக்தியுடன், என் கனவு நிஜமான தருணம் இது. என்னுடைய கேரியரில், மிகப்பெரிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

ALSO READ |  விக்ரம் வேதா இந்தி ரீமேக்கில் ராதிகா ஆப்தே!

மிகவும் திறமையான திரு. குமரன் அவர்கள் இயக்கம் தமிழும் சரஸ்வதியும் என்ற புதிய சீரியலில், நானும் இருப்பது பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளது. என் குடும்பம் மற்றும் நண்பர்கள் அனைவரின் ஆசீர்வாதம் அன்பும் ஆதரவாலும் இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.

முருகா போற்றி, எண்ணம் போல் வாழ்க்கை!’

இத்துடன், சீரியலில் முக்கிய வேடங்களில் நடிக்கும் நடிகர்களையும் குறிப்பிட்டு, அவர்களுக்கும் நன்றி தெரிவித்திருந்தார்.

இன்ஸ்டாகிராமில் தன் மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் அனைவரோடும், லாவண்யா மாணிக்கம் பகிர்ந்த பதிவு இதோ:

 

 
 

 

நடிகை லாவண்யாவிற்கு அனைவரும் தொடர்ந்து வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இதிலே, கார்த்திகா மற்றும் பல பிரபலங்களும் அடங்கும்.

ALSO READ |  பாஜகவின் ஆட்சி முறையை திரைப்படங்களில் சாடியதற்காகவே நடிகர் விஜய்க்கு மறைமுக அழுத்தங்கள் - சீமான் குற்றச்சாட்டு

தமிழும் சரஸ்வதியும் சீரியலில் புதிதாக இணைந்திருக்கும் லாவண்யா மாணிக்கம், சீரியல் ரசிகர்களுக்கு ஏற்கனவே பழக்கமானவர். கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் ‘இதயத்தை திருடாதே’ என்ற சீரியலில் ஐஷு / ஐஷ்வர்யா என்ற பாத்திரத்தில் நடித்து வருகிறார்.இது மட்டுமின்றி, பல பிரபலமான சீரியல்களில் முன்னணி பாத்திரங்களில் நடித்தவர் லாவண்யா. நாயகி 2 சீரியலில் அமுதா என்ற பாத்திரத்திலும், அம்மன் சீரியலில் இன்பா என்ற பாத்திரத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ |  மூன்று ஜட்ஜ்களுடன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் மாஸ்டர் செஃப் நிகழ்ச்சி டீசர் வெளியானது!

ராகினியாக நடிக்கும் லாவண்யா மாணிக்கம் தவிர்த்து, தமிழாக தீபக் தினகர் கதாநாயகனாக நடிக்கும் இந்த சீரியலில், நக்ஷத்ரா நாகேஷ் சரஸ்வதி என்ற பாத்திரத்தில், சீரியல் நாயகியாக நடிக்கிறார். மேலும், கோதை என்ற பாத்திரத்தில் மீரா கிருஷ்ணன், சந்திரகலா என்ற பாத்திரத்தில் ரேகா கிருஷ்ணப்பா ஆகியோருடன், மகாலிங்கம் ராமச்சந்திரன், நவீன் வெற்றி, தர்ஷனா ஸ்ரீபால் கொலேச்சா, யோகி மற்றும் பலர் நடிக்கிறார்கள். தமிழும் சரஸ்வதியும் சீரியல் தற்போது ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் தினமும் மாலை 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Sankaravadivoo G
First published: