திரைப்படங்களைப் போலவே சீரியலிலும் வெவ்வேறு நடிகர், நடிகைகள் முதல் முறையாக ஜோடியாக இணைவது பெரிய வரவேற்பை ஏற்படுத்தும். அந்த வகையில் ஏற்கனவே கலர்ஸ் தமிழின் ஆஸ்தான நாயகனாக உள்ள அருண் பத்மநாபன் முதல் முறையாக ஜீ தமிழில் ஹீரோவாக நடிக்கிறார்.
அதேபோல விஜய் டிவியின் அழகிய வில்லியாக இருந்த கண்மணி மனோகரனும், ஜீ தமிழுக்கு முதல் முறையாக வருகிறார். இவர்கள் இருவருமே வெவ்வேறு சேனலில் இருந்து ஜீ தமிழில் அறிமுகம் ஆகின்றனர். மேலும், ஜோடியாக ஒரு புதிய சீரியலில் நடிக்க இருக்கிறார்கள் என்ற தகவல் சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி வைரலாக பரவியது.
அது மட்டுமின்றி சீரியலிலும் ஒரு சின்ன சஸ்பென்ஸ் வைத்திருந்தார்கள். சீரியலின் முழுப்பெயர் இல்லாமல், ‘அமுதாவும்......’ என்று பாதி டைட்டில் மட்டும் வைத்து புரோமோ மற்றும் போஸ்டர்கள் வெளியாகின. ஜீ தமிழில் இந்த சீரியல் எப்போது ஒளிபரப்பாகும் என்பது பற்றி பலரும் ஆவலோடு காத்திருந்த நிலையில் தற்போது சீரியல் பற்றி அப்டேட் ஒன்று வெளியாகி இருக்கிறது.
பாரதி கண்ணம்மா சீரியலில் அஞ்சலியாக முதலில் வில்லத்தனம் செய்யும் ரோலில் நடித்தார் கண்மணி மனோகரன். முதலில் வில்லியாக அறிமுகமானாலும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றார். அதேபோல இவருடைய கதாபாத்திரம் கண்ணம்மாவுக்கு ஆதரவாக மாறும் பொழுதும், அஞ்சலிக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆனால் திடீர் என்று தற்போது பாரதி கண்ணம்மா சீரியலை விட்டு வெளியேறி ஜீ தமிழ் சேனலில் ‘அமுதாவும் ....?’ என்ற ஒரு புதிய சீரியலில் நாயகியாக நடிக்கிறார் என்ற தகவல் கடந்த பிப்ரவரி மாதம் வெளியானது.
பாரதி கண்ணம்மா சீரியலில் முக்கியத்துவம் வாய்ந்த பாத்திரமாக இருந்தாலும் அஞ்சலியாக இவர் பட்டி தொட்டி எங்கும் புகழ் பெற்றாலும், ஜீ தமிழின் புதிய நாடகத்தில் இவருக்கு கதாநாயகி வேடம் என்று கூறப்படுகிறது. இந்த செய்தி எல்லாமே, அவ்வபோது கண்மணி தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் பகிர்ந்துள்ளார்.
Also Read : பிக் பாஸ் தாமரைச்செல்விக்காக புது வீடு கட்டும் பிரபல இசையமைப்பாளர்!
மேலும், “அமுதாவும் ......” . ப்ரோமோவும் வெளியாகியது. சீரியலின் பெயரை இன்னும் ஜீ தமிழ் தொலைக்காட்சி இப்போது வரை வெளியிடவில்லை. சீரியலின் நாயகனின் பெயர் என்னவாக இருக்கும் என்று ரசிகர்கள் பலரும் யூகித்து வருகின்றனர்
Also Read : வி.ஜே.மணிமேகலை தொலைத்ததோ 2 லட்சம் மதிப்புள்ள பைக்... ஆனால் சம்பாதித்தது 5 லட்சம்...
ஆசிரியையாக, பாவாடை தாவணி அணிந்து கொண்டு அழகாக காட்சியளிக்கிறார். கண்மணி மனோகரன் அமுதாவாக நடிக்க, கலர்ஸ் தமிழ் சேனலின் இரண்டு சீரியலில் ஹீரோவாக நடித்த அருண் பத்மநாபன் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார்.
சீரியலுக்கு என்ன ஆச்சு, படப்பிடிப்பு நடக்கிறதா, உடன் நடிக்கும் நடிகர்கள் யார் என்பதைப்பற்றி எந்த தகவலும் இதுவரை வெளியாகாத நிலையில் இப்பொழுது ஜூன் மாதம் முதல் இந்த சீரியல் ஒளிபரப்பாகும் என்று அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை இரண்டு கதாபாத்திரங்கள் மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் இவர்களுக்காகவே இந்த சீரியலைப் பார்க்க வேண்டும் என்று ஆவலாக காத்திருக்கும் ரசிகர் கூட்டம் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.