Home /News /entertainment /

கடனை திருப்பிக் கேட்ட என் மீது சீரியல் நடிகரின் மனைவி பொய் வழக்கு... தயாரிப்பாளர் புகார்

கடனை திருப்பிக் கேட்ட என் மீது சீரியல் நடிகரின் மனைவி பொய் வழக்கு... தயாரிப்பாளர் புகார்

சுஜிதா

சுஜிதா

ஆன்லைனில் கடன் வாங்கி திருப்பி செலுத்தாததால் ஆபாசமாக போட்டோ வீடியோக்களை அனுப்பி மிரட்டுவதாக சுஜிதா தனக்கு வாட்ஸ் அப் மூலம் செய்தி அனுப்பியதாகவும் தெரிவித்துள்ளார்.

    ஆன்லைனில் வாங்கிய கடனை அடைப்பதற்காக கொடுத்த பணத்தை திருப்பி கேட்டதற்கு பொய் வழக்கு போட்டதாக, மறைந்த நடிகரின் இரண்டாவது மனைவி மீது சினிமா தயாரிப்பாளர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

    சிவா மனசுல புஷ்பா உட்பட பல திரைப்படங்களை தயாரித்தவர் வாராகி (46). இவர் விருகம்பாக்கம் நடேசன் நகரில் அமைந்துள்ள பிரபல அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். இவர் அதே குடியிருப்பில் வசித்து வரக்கூடிய சுஜிதா(31) என்ற பெண்ணை திருமணம் செய்துக்கொள்ளுமாறு நீண்ட மாதங்களாக வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

    இதனால் மன உளைச்சல் அடைந்த சுஜிதா வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வாராகி மீது புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் தயாரிப்பாளர் வாராகியை கைது செய்தனர். இவர் மீது பெண் வன்கொடுமை சட்டம், பொது இடத்தில் ஆபாசமாக பேசுதல், மிரட்டல் உட்பட 6 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்தனர். ஏற்கனவே வாராகி மீது சேலையூர் உட்பட 4 காவல் நிலையங்களில் வழக்கு நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

    இதனையடுத்து கைது செய்யப்பட்ட வாராகியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தற்போது ஜாமினில் வெளிவந்துள்ள வராகி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

    அதில் தற்கொலை செய்துக் கொண்ட நடிகர் சாய் பிரசாத்தின் இரண்டாவது மனைவி தன்னோடு 2016-ஆம் ஆண்டில் இருந்து சுமார் மூன்று வருடம் வேலை பார்த்ததாக தெரிவித்துள்ளார். அதன்பின் அவரது நடவடிக்கைகள் சரியில்லாததால் வேலையை விட்டு நிறுத்தி விட்டதாக தெரிவித்துள்ளார்.

    serial actor Sai Prashanth suicide, sai prashanth, sai prashanth wife, sai prashanth wife sujitha fraud case, sujitha sai prashanth, sai prashanth linkedin, niranjana sai prashanth, sasneham serial actor prashanth, sai prashanth death reason, sujitha sai prashanth marriage, sai prashanth first wife, sai prashanth death, sai prashanth suicide, devi krupa, serial actress devi krupa, serial actress devi krupa instagram, சாய் பிரசாந்த் தற்கொலை, நடிகர் சாய் பிரசாந்த், sai prashanth first wife, sai prashanth death reason, sai prashanth linkedin

    இந்நிலையில் தனக்கு ஆன்லைன் மூலம் கடன் அதிகமாகி வட்டி மற்றும் இஎம்ஐ செலுத்த வேண்டிய காரணத்தினால், உடனடி கடனாக இரண்டு அல்லது மூன்று லட்ச ரூபாய் வேண்டும் என கேட்டதாக தெரிவித்துள்ளார். ஆன்லைனில் கடன் வாங்கி திருப்பி செலுத்தாததால் ஆபாசமாக போட்டோ வீடியோக்களை அனுப்பி மிரட்டுவதாக சுஜிதா தனக்கு வாட்ஸ் அப் மூலம் செய்தி அனுப்பியதாகவும் தெரிவித்துள்ளார்.

    பாதி கதையை மட்டும் கேட்டு நிராகரித்த விஜய் - வேறு ஹீரோ நடிப்பில் பிளாக்பஸ்டர் ஹிட்டடித்த படம்!

    இரண்டு நாட்களில் பணத்தைத் திருப்பித் தருவதாக கூறியதால், மகளுக்கு கல்விக்கட்டணம் செலுத்த வேண்டிய பணத்தை கொடுத்து உதவியதாக கூறியுள்ளார். உதவுவதற்காக கொடுக்கப்பட்ட இரண்டு லட்ச ரூபாய் பணத்தை திருப்பிக் கேட்டபோது தொடர்ந்து அலைக்கழித்ததாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

    serial actor Sai Prashanth suicide, sai prashanth, sai prashanth wife, sai prashanth wife sujitha fraud case, sujitha sai prashanth, sai prashanth linkedin, niranjana sai prashanth, sasneham serial actor prashanth, sai prashanth death reason, sujitha sai prashanth marriage, sai prashanth first wife, sai prashanth death, sai prashanth suicide, devi krupa, serial actress devi krupa, serial actress devi krupa instagram, சாய் பிரசாந்த் தற்கொலை, நடிகர் சாய் பிரசாந்த், sai prashanth first wife, sai prashanth death reason, sai prashanth linkedin

     

    பணத்தை கேட்காமல் இருப்பதற்காகவே தன் மீது பொய் புகார் அளித்து வழக்குப்பதிவு செய்து இருப்பதாக புகாரில் தெரிவித்துள்ளார். ஆன்லைனில் கடன் வாங்கியதால் மர்ம நபர்கள் ஆபாச வீடியோ போட்டோ அனுப்பி மிரட்டுவது தொடர்பான விபரங்கள் தொடர்பாக தனக்கு சுஜிதா அனுப்பிய வாடஸ் அப் சாட்கள், மற்றும் கடன் தொல்லையில் மாட்டிக்கொண்டு பணம் கேட்ட ஆடியோவையும் ஆதாரமாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் சமர்ப்பித்துள்ளார்.

    Rangamma Patti: எம்.ஜி.ஆர் - ஜெயலலிதா படங்களில் நடித்த ரங்கம்மா பாட்டி - வறுமையின் பிடியில் சிக்கித் தவித்த கொடூரம்

    பணத்தை வாங்கிக்கொண்டு பொய் புகார் அளித்த மறைந்த சாய் பிரசாத் என்ற நடிகரின் இரண்டாவது மனைவி சுஜிதா மீது நடவடிக்கை எடுக்குமாறு புகாரில் தெரிவித்துள்ளார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: TV Serial

    அடுத்த செய்தி