ஜானுவாக லாஸ்லியாவும்... சின்னகவுண்டராக சரவணனும் பிக்பாஸ் வீட்டில் இன்று!

இன்று நிகழ்ச்சிக் குழு புரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளது. அதில் பிக் பாஸ் வீட்டில் உள்ள அனைத்து போட்டியாளர்கள் ஒவ்வொருவருக்கும் பிரபலங்களின் கதாப்பாத்திரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

Web Desk | news18
Updated: July 30, 2019, 10:36 AM IST
ஜானுவாக லாஸ்லியாவும்... சின்னகவுண்டராக சரவணனும் பிக்பாஸ் வீட்டில் இன்று!
பிக்பாஸ் வீட்டில் கவின் மற்றும் லாஸ்லியா
Web Desk | news18
Updated: July 30, 2019, 10:36 AM IST
பிக்பாஸ் வீட்டில் இன்றைய டாஸ்கில் ஜானுவாக லாஸ்லியாவும், சின்னகவுண்டராக சரவணனும் வலம் வரவுள்ளனர்.

தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசன் கடந்த மாதம் முதல் ஒளிபரப்பாகி வருகிறது. 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் பாத்திமா பாபு, வனிதா விஜயகுமார், மோகன் வைத்யா, மீரா மிதுன் ஆகிய 4 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இதையடுத்து வைல்ட் கார்டில் உள்ளே செல்ல இருக்கும் நபர் யார் என்ற எதிர்பார்ப்பும் பார்வையாளர்களிடையே ஏற்பட்டுள்ளது.


ஆல்யா மானசா, பவர் ஸ்டார் சீனிவாசன், ஸ்ரீரெட்டி, சங்கீதா உள்ளிட்டோர் வைல்ட் கார்டில் உள்ளே செல்ல இருக்கும் போட்டியாளர்களின் பட்டியலில் உள்ளனர்.

Also read... பேருந்தில் பெண்களை உரசிய விவகாரம்: பிக்பாஸ் சரவணன் மன்னிப்பு கேட்டார்!

இந்நிலையில் நேற்றும் பிக்பாஸ் வீட்டில் எவிக்‌ஷனுக்கான நாமினேஷன் நடைபெற்றது. நாமினேஷனின் புதிய மாற்றத்தை அறிமுகப்படுத்தி நிகழ்ச்சிக்குழு மற்ற போட்டியாளர்கள் முன்னிலையில் ஒவ்வொரு போட்டியாளரும் தான் வெளியேற்ற விரும்பும்  2 நபரை தக்க காரணங்களுடன் அறிவிக்க வேண்டும்.

Loading...

இதனடிப்படையில் நேற்று எவிக்‌ஷனுக்காக அபிராமி, கவின், மதுமிதா, ரேஷ்மா மற்றும் ஷாக்‌ஷி என 5 போட்டியாளர்கள் நாமினேட் செய்யப்பட்டனர்.

இந்நிலையில் இன்று நிகழ்ச்சிக் குழு புரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளது. அதில் பிக் பாஸ் வீட்டில் உள்ள அனைத்து போட்டியாளர்கள் ஒவ்வொருவருக்கும் பிரபலங்களின் கதாப்பாத்திரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.அதன் அடிப்படையில் 96 படத்தில் வரும் ஜானுவாக லாஸ்லியாவும், சின்னகவுண்டராக சரவணனும், அஜித்தாக கவினும், ஜானி படத்தில் வரும் ரஜினியாக சேரனும் இன்று பிக்பாஸ் வீட்டில் வலம்வர உள்ளனர்.

Also see...

First published: July 30, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...