• HOME
 • »
 • NEWS
 • »
 • entertainment
 • »
 • பாண்டியன் ஸ்டோர்ஸ் லட்சுமி அம்மா பரிகாரம் செய்தாரா? கிளம்பும் புதிய சர்ச்சை!

பாண்டியன் ஸ்டோர்ஸ் லட்சுமி அம்மா பரிகாரம் செய்தாரா? கிளம்பும் புதிய சர்ச்சை!

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ்

ஷீலாவிற்கு சீரியல் குழுவினரால் திருஷ்டி கழிக்கப்பட்டு உள்ளது.

 • Share this:
  விஜய் டிவி-யில் திங்கள் முதல் சனி வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் குடும்ப சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ்.

  சின்னத்திரை ரசிகர்களை பெரிதும் கவர்ந்த இந்த சீரியல் அண்ணன், தம்பிகள் நால்வரை மையமாக வைத்து ஒளிபரப்பாகி கொண்டிருப்பது நாம் அனைவரும் அறிந்ததே. கூட்டு குடும்பத்தின் முக்கியத்துவம், சிறப்புகள் மற்றும் சகோதர பாசம் உள்ளிட்ட பல அம்சங்கள் இந்த சீரியலில் ரசிகர்களை நெகிழ வைக்கும் காட்சிகளாக ஒளிபரப்பாகி வருவதால் குடும்பம் குடும்பமாக அமர்ந்து இந்த சீரியலை பார்க்க  சின்னத்திரை ரசிகர்களால் சூப்பர் ஹிட் சீரியலாக ஓடி கொண்டிருக்கிறது பாண்டியன் ஸ்டோர்ஸ்.

  எனினும் கடந்த சில நாட்களாக பாண்டியன் ஸ்டோர்ஸ் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தும்படியான எபிசோட்கள் ஒளிபரப்பாகின. மூர்த்தி, ஜீவா, கதிர், மற்றும் கண்ணன் ஆகியோரின் தாயாக நடித்து வந்த லட்சுமி என்ற கேரக்டர் முடித்து வைக்கப்பட்டதே இதற்கு காரணம். பிரபல நடிகர் விகாரந்த்தின் தாயான ஷீலா தான், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் சகோதர்கள் நால்வருக்கும் தாயாக, லட்சுமி என்ற கேரக்டரில் நடித்து வந்தார்.

  கதைப்படி இவரது இளைய மகன் கண்ணன் (நடிகர் சரவணன் விக்ரம்) குடும்பத்தார் யாரிடமும் சொல்லாமல் உறவுக்கார பெண்ணான ஐஸ்வர்யாவை கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டதால் அனைவரும் கடும் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். செல்ல மகனின் ஏற்று கொள்ள முடியாத இந்த தவறால் உடல்நலம் குன்றி ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்படுவது போலவும், பின்னர் குணமாகி வீட்டுக்கு வந்த பின் இரவு தூக்கத்திலேயே லட்சுமி அம்மா இறந்து விடுவது போலவும் காட்டப்பட்டது. அவர் இறந்தது முதல் உடலை சுடுகாட்டிற்கு கொண்டு சென்று ஏற்பட்டது வரையிலான காட்சிகள் சுமார் 1 வாரத்திற்கு விரிவாக காட்டப்பட்டன.

  இந்த சீன்களை தத்ரூபமாகவும், உணர்ச்சிபூர்வமாகவும் காட்ட நடிகை ஷீலாவை குளிப்பாட்டுவது, பாடையில் படுக்க வைப்பது, இறுதி சடங்குகள் செய்வது, சாலையில் பாடையில் தூக்கி செல்வது என நிஜ இறப்பு நிகழ்வுகளில் செய்யப்படும் அத்தனையும் படமாக்கப்பட்டது. இவை ஒளிபரப்பும் செய்யப்பட்டு ரசிகர்களை கண்ணீர் விட வைத்தது இதனிடையே சினிமா மற்றும் சீரியல்களில் இறப்பது போன்ற காட்சிகளில் நடிப்பவர்களுக்கு எப்போதுமே திருஷ்டி கழித்து விட்டு வீட்டிற்கு அனுப்புவது வழக்கம்.

  அந்த வகையில் நடிகை ஷீலா இறப்பு தொடர்பான காட்சிகளில் மிக நீண்ட நேரம் நடித்ததால், இறுதி கட்ட காட்சி முழுமையாக எடுக்கப்பட்ட பின் அவருக்கு பூசணிக்காய், எலுமிச்சை மற்றும் தேங்காய் உள்ளிட்டவற்றில் சூடம் கொளுத்தி அவற்றை சுற்றி ஷீலாவிற்கு சீரியல் குழுவினரால் திருஷ்டி கழிக்கப்பட்டு உள்ளது.

  இது தவிர சென்ட்டிமென்ட்டாக இறந்தது போல நடித்தவரை வைத்து அவர் சிரித்து கொண்டே வருவது போல காட்சிகளும் வழக்கமாக எடுக்கப்படுமாம். இதனை அடுத்து நடிகை ஷீலா, லட்சுமியாக சிரித்த முகத்துடன் மருமகள் தனத்தின் கனவில் வருவது போல ஒரு காட்சியும் வைக்கப்பட்டது. அந்த காட்சி சமீபத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் எபிசோடில் ஒளிபரப்பானது குறிப்பிடத்தக்கது  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Sreeja Sreeja
  First published: