Home /News /entertainment /

சாபம் விட்ட எல்லாருக்கும் நன்றி... விஜய் டிவி பாவம் கணேசன் நவீன் மனைவி கண்ணீர்

சாபம் விட்ட எல்லாருக்கும் நன்றி... விஜய் டிவி பாவம் கணேசன் நவீன் மனைவி கண்ணீர்

மனைவியுடன் நவீன்

மனைவியுடன் நவீன்

முதல் மனைவி திவ்யாவிடம் இருந்து நவீன் முறையாக விவாகரத்து பெற்று விட்டாரா என்பது குறித்து தெரியவில்லை.

  உனக்கெல்லாம் குழந்தையே பிறக்காது என பலர் தனக்கு சாபம் விட்டதாக பாவம் கணேசன் சீரியல் நடிகர் நவீனின் மனைவி கிருஷ்ணகுமாரி கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

  விஜய் டிவியில் ‘கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சியில் பங்கேற்ற நவீனின் அசாத்திய திறமையை கண்டு வியக்காதவர்களே இல்லை எனலாம். மிமிக்ரி தொடங்கி நடிப்பு பாடி லாங்வேஜ் என அனைத்திலும் கலக்குவார். நவீன் பங்கேற்ற சீசனில் அவருக்கு மிகப் பெரிய டஃப் கொடுத்த போட்டியாளர்கள் ஏராளம் இருந்த போது தனக்கென தனி இடத்தையும், தனி ரசிகர்கள் பட்டாளத்தையும் நவீன் உருவாக்கி கொண்டார்.

  நவீன் கலந்துக் கொண்ட சீசனின் ஃபனல்ஸ் பொதுமக்கள் முன்னிலையில் நடந்தது. அப்போது சிறப்பு விருந்தினராக நடிகர் சிவகார்த்திகேயன் கலந்துக் கொண்டார். அனைவரின் எதிர்பார்ப்பும் நவீன் வெற்றி பெறுவார் என்று தான் இருந்தது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் குரேஷி டைட்டிலை வென்றார்.

  இருந்த போதிலும், சிவகார்த்திகேயன் மனம் கவர்ந்த போட்டியாளராக நவீனே அறியப்பட்டார். அதன் பின்பு அவருக்கு ஏராளமான வாய்ப்புகள் தேடி வந்தன. திரைப்படங்களிலும் முகம் காட்டினார். கல்லூரி விழாக்கள், வெளிநாடுகளில் கலை நிகழ்ச்சிகளிலும் கலந்துக்கொள்ள தொடங்கினார். தற்போது விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பாவம் கணேசன் சீரியலில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

  18 வருஷம் கழிச்சும் அதே அன்போட அஜித் சார்... அம்பானி சங்கர் நெகிழ்ச்சி!

  இதற்கிடையே நவீனுக்கும் திவ்யா என்ற பெண்ணுக்கும் 2016-ல் காதல் திருமணம் நடைபெற்ற நிலையில், அதனை மறைத்து மலேசியாவை சேர்ந்த கிருஷ்ணகுமாரி என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்ய முயல்வதாக நவீன் மீது திவ்யா புகாரளித்தார். பின்னர் காவல்துறையினர் நவீனை கைது செய்து விசாரித்தனர்.

  பின்னர் ஜாமீனில் வெளியே வந்த நவீன் கிருஷ்ணகுமாரியுடன் படங்களை பதிவேற்றினார். அவர்களுக்கு திருமணம் நடந்ததும் புகைப்படம் மூலமே தெரிய வந்தது. ஆனால் முதல் மனைவி திவ்யாவிடம் இருந்து அவர் முறையாக விவாகரத்து பெற்று விட்டாரா என்பது குறித்து தெரியவில்லை.

  AK 62 Update: விக்னேஷ் சிவனுடன் அஜித்தின் 62-வது படம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!   
  View this post on Instagram

   

  A post shared by Vijay Television (@vijaytelevision)


  இந்நிலையில் விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகவிருக்கும் ’விஜய் டெலி அவார்ட்ஸின்’ முன்னோட்ட ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் பேசியுள்ள நவீனின் மனைவி கிருஷ்ணகுமாரி, ‘எல்லாரும் உனக்கெல்லாம் குழந்தையே பிறக்காது. நீங்க பிரிஞ்சிடுவீங்கன்னு சொல்லிருக்காங்க. சாபம் விட்ட எல்லாருக்கும் ரொம்ப தேங்க்ஸ். இப்போவும் சொல்றேன் 'என்னை தாண்டி தான் எந்த கஷ்டத்தையும் அவரை (நவீனை) நெருங்க விடுவேன்’ என கண்ணீர் மல்க கூறுகிறார். வயிற்றில் கை வைத்திருக்கும் அவர் கர்ப்பமாக இருப்பது போல் தெரிகிறது. அப்போது கிருஷ்ணகுமாரியின் முகத்தை நெஞ்சில் பச்சை குத்தியிருக்கும் நவீன் அதை அனைவருக்கும் காண்பிக்கிறார். இருவரும் கட்டி அணைத்து தங்கள் அன்பை வெளிப்படுத்துகின்றனர்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published:

  Tags: Vijay tv

  அடுத்த செய்தி