Home /News /entertainment /

சினிமாவை மிஞ்சிய லவ் சீன்.. காற்றுக்கென்ன வேலியில் காதலை சொன்ன வெண்ணிலா!

சினிமாவை மிஞ்சிய லவ் சீன்.. காற்றுக்கென்ன வேலியில் காதலை சொன்ன வெண்ணிலா!

காற்றுக்கென்ன வேலி

காற்றுக்கென்ன வேலி

காற்றுக்கென்ன வேலி புரமோ தற்போது வெளியாகியுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    காற்றுக்கென்ன வேலி சீரியலில் ரசிகர்கள் எதிர்பார்த்த அந்த தருணம் வந்து விட்டது. ஒருவழியாக சூர்யாவிடம் தனது காதலை சொல்கிறார் வெண்ணிலா.

    ரசிகர்களின் ஆல் டைம் ஃபேவரெட் லிஸ்டில் சேர்ந்துள்ள காற்றுக்கென்ன வேலி தொடர் முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. இந்த சீரியல் கல்லூரி கதைக்களத்தோடு அமைந்திருந்தாலும் காதல், சண்டை என வாழ்க்கையின் முக்கிய பரிமாணங்களை இளமை ததும்ப காட்சிப்படுத்தப்பட்டுள்ளதால் இளைஞர்கள் அதிகம் விரும்பி இந்த தொடரை பார்க்கின்றனர். அதனால் சீரியல் கதையும் முழுக்க முழுக்க இளைஞர்கள் பாணியில் கொண்டு செல்லப்படுகிறது. போன வாரத்தில் தனது காதலை வெண்ணிலாவிடம் சூர்யா சொன்னார். ஆனால் வெண்ணிலா தனது காதலை மறைத்து கொண்டு இல்லை என சூர்யாவிடம் பதில் கூறிவிட்டார்.



    கூடிய விரைவில் முடிவுக்கு வரும் விஜய் டிவி சீரியல்?

    அதற்கு முக்கியமான காரணம் மீனாட்சி பெரியம்மா மற்றும் அப்பாவுக்கு பயந்து தனது காதலை வெண்ணிலா மறைத்துக் கொண்டார். ஆனால் சூர்யாவால் இதை ஏற்க முடியவில்லை. அதே போல் வெண்ணிலாவை மறக்கவும் முடியவில்லை. இதனால் லெட்டர் எழுதி விட்டு வீட்டுக்கு தெரியாமல் பழனி, ராமஸ்வரம் கிளம்ப முடிவு எடுக்கிறார் சூர்யா. வெண்ணிலாவுக்கு லெட்டர் எழுதி அனுப்பிவிட்டு மறுநாள் பழனிக்கு கிளம்புகிறார்.

    நீளமான முடியை கொண்ட பேரன்பு சீரியல் நடிகை வானதி!

    இந்நிலையில் அடுத்து என்ன நடக்கும்? என ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்க இதுக் குறித்த புரமோ தற்போது வெளியாகியுள்ளது. அதாவது வெண்ணிலா லெட்டரை படித்து விட்டு அழுதப்படி ஓடி வருகிறார். சூர்யா ஊருக்கு செல்வதை தடுக்க  நினைக்கிறார். பஸ்சில் ஏறி சூர்யா செல்ல, ரோட்டில் கத்தி கதறுகிறார் வெண்ணிலா. கடைசியில் வெண்ணிலாவின் குரலை கேட்டு சூர்யா வர சந்தோஷத்தில்  முதன் முறையாக தனது காதலை சொல்கிறார் வெண்ணிலா.



    சினிமாவையே மிஞ்சும் அளவுக்கு  இந்த காதல் காட்சி படமாக்கப்பட்டுள்ளது. எபிசோடுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி