Home /News /entertainment /

ரசிகர்கள் எதிர்பார்த்த அந்த தருணம்.. வெண்ணிலாவிடம் காதலை சொன்ன சூர்யா!

ரசிகர்கள் எதிர்பார்த்த அந்த தருணம்.. வெண்ணிலாவிடம் காதலை சொன்ன சூர்யா!

காற்றுக்கென்ன வேலி

காற்றுக்கென்ன வேலி

வெண்ணிலாவிடம் தனது காதலை சொல்லி அதற்கு பதிலை கேட்கிறார் சூர்யா.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    காற்றுக்கென்ன வேலி சீரியலில் முக்கிய கட்டம். வெண்ணிலாவிடம் தனது காதலை முதன் முறையாக சொல்கிறார் சூர்யா.

    எத்தனை தடைகள் வந்தாலும் படித்தே தீருவேன் என்று போராடும் சாதாரண மிடில் கிளாஸ் பெண் தான் வெண்ணிலா. இவரின் வாழ்க்கையில் நடக்கும் போராட்டம் தான் காற்றுக்கென்ன வேலி தொடரின் கதை.விஜய் டிவியில் மதிய நேரத்தில் ஒளிப்பரப்பாகும் இந்த தொடர் இளைஞர்களை மிகவும் கவர்ந்த தொடராக உள்ளது.பல போராட்டங்களைக் கடந்து வெண்ணிலா எப்படி படித்து வெற்றி பெறுகிறார் என்பதும் கல்லூரியில் பேராசிரியரும், கல்லூரியின் உரிமையாளருமான சூர்யாவுக்கும்  இவருக்கும் எப்படி காதல் வளர்கிறது என்பதும் கதையின் முக்கிய களங்களாக காட்டப்படுகிறது.



    தனுஷ் படத்தில் நடிக்கும் சூப்பர் சிங்கர் பிரபலம்.. கடைசி நேரத்தில் கொடுத்த சர்ப்ரைஸ்!

    இந்த சீரியலில் வெண்ணிலா கதாபாத்திரத்தில் பிரியங்கா குமார் நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக சுவாமிநாதன் என்பவர் நடித்து வருகிறார். மாளவிகா அவினாஷ், பானு பிரகாஷ், ஜனனி அசோக் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். சீரியலின் முக்கிய வில்லி கதாபாத்திரங்களில் ஒன்றான மீனாட்சி ரோலில் நடிகை சுஜாதா பஞ்சு நடிக்கிறார்.  அம்மா சாரதா மற்றும் சூர்யாவை பிரித்ததும் இவர் தான். இப்போது சூர்யா - வெண்ணிலாவை பிரிக்க பல முயற்சிகளை எடுத்து வருகிறார். ஆனால் ஒவ்வொரு முறையும் அவரின் சதியை வெண்ணிலா முறியடித்து விடுகிறார். வெண்ணிலாவின் அப்பாவிடம் பேசி, அவரை வீட்டில் இருந்து வெளியே அனுப்ப நினைத்தார் மீனாட்சி. கடைசியில் சாராதாவுடன் வெண்ணிலா இருக்கும்படி ஆகிவிட்டது.



    இதை அவராலும் அபியாலும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இப்படி இருக்கையில் தற்போது காற்றுக்கென்ன வேலி சீரியலின் பரபரப்பு புரமோ வெளியாகியுள்ளது. இதில் சூர்யா, வெண்ணிலாவிடம் தனது காதலை சொல்கிறார். அதாவது இதுவரை இருவரும் ஒருவரையொருவர் காதலித்தனர். ஆனால் வெளியில் சொன்னது இல்லை. இந்நிலையில் வெண்ணிலாவிடம் தனது காதலை சொல்லி அதற்கு பதிலை கேட்கிறார் சூர்யா. வெண்ணிலா இன்ப அதிர்ச்சியில் உறைந்து போகிறார். அடுத்து வெண்ணிலாவின் பதில் என்னவாக இருக்கும் என்பது தான் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி