Home /News /entertainment /

ஒரே ஒரு ஃபோட்டோ தான்.. மொத்த ரசிகர்களுக்கும் ஷாக் கொடுத்த குஷ்பு!

ஒரே ஒரு ஃபோட்டோ தான்.. மொத்த ரசிகர்களுக்கும் ஷாக் கொடுத்த குஷ்பு!

நடிகை குஷ்பு

நடிகை குஷ்பு

வெயிட் லாஸ் என்ற பெயரில், மிகவும் உடல் எடையை குறைத்து ஒல்லியான தோற்றத்தில் காட்சியளிக்கிறார்

    நடிகை குஷ்புவின் சமீபத்திய புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர். பலரும் ஏன் இந்த திடீர் மாற்றம் என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

    தமிழ் சினிமாவின் பான்-இந்தியா ஸ்டார் நடிகைகள் லிஸ்டில் குஷ்புவும் இருக்கிறார். தனது அழகு, திறமை, நடிப்பு, நடனம் ஆகியவற்றால் பல மொழிகளிலும் முன்னணி கதாநாயகியாக கொடி கட்டி பறந்தவர். எந்த நடிகைக்கும் கட்டாத அளவுக்கு குஷ்புவுக்கு மட்டும் தான் கோவில் கட்டியிருக்கின்றனர் ரசிகர்கள். தொழில் முனைவர், தயாரிப்பாளர், சீரியல் நடிகை என்று பல வித அவதாரங்களை எடுத்த குஷ்பு தற்போது கதாசிரியர். கலர்ஸ் தமிழில் ஒளிப்பரப்பாகும் மீரா சீரியலை குஷ்புவே எழுதி மற்றும் நடித்து வருகிறார். சீரியலும் டிஆர்பியில் நல்ல ரேட்டிங்கைப் பெற்று பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது

    இதையும் படிங்க.. தொடங்குகிறது பிக் பாஸ் சீசன் 6.. ஆங்கர் யார் தெரியுமா?

    இரண்டு தலைமுறை நடிகர்களோடு நடித்து, இன்னும் மூன்றாவது தலைமுறை நடிகர்களோடு நடித்துக் கொண்டிருக்கும் குஷ்பு சினிமா, அரசியல் இரண்டிலும் பிஸியோ பிஸி. அதே போல சின்னத்திரையிலும் தனது பங்களிப்பை தந்து கொண்டிருக்கிறார். பன்முகத்தன்மை கொண்ட நடிகை குஷ்பு சமீப காலமாக தனது உடல் நலத்தில் மிகுந்த கவனம் கொண்டு எடையை குறைத்து வருகிறார்.

    சிம்பு விஷயத்தில் சீரியல் நடிகையை திட்டிய காஜல் பசுபதி! ஷாக்கான ரசிகர்கள்

    கொரோனா லாக்டவுனுக்கு பின்பு எடையை குறைத்து ஸ்லிம் தோற்றத்துக்கு மாறி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியும் கொடுத்தார். மீண்டும் பழைய குஷ்புவை பார்ப்பது போலவே இருக்கிறது என ரசிகர்கள் அன்பு மழையை பொழிந்து இருந்தனர். ஆனால் தற்போது குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் மாற்றி இருக்கும் புரோஃபைல் பிச்சர், ரசிகர்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

    kushboo twitter khushbusundar profile pic shocked everyone meera serial khusbhu
    குஷ்புவின் ட்விட்டர் புகைப்படம்


    வெயிட் லாஸ் என்ற பெயரில், மிகவும் உடல் எடையை குறைத்து ஒல்லியான தோற்றத்தில் காட்சியளிக்கிறார். குஷ்பு என்றாலே ஜப்பி தான் அழகு என கூறும் ரசிகர்கள் இதற்கு மேல் ஒல்லி ஆக வேண்டும் எனவும் அன்பு கோரிக்கை வைத்துள்ளனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: Colors Tamil | கலர்ஸ் தமிழ், Kushboo

    அடுத்த செய்தி