Home /News /entertainment /

இந்த வன்முறைக்கு யார் காரணம்? கலர்ஸ் தமிழுடன் சேர்ந்து விளக்கிய நடிகை குஷ்பு!

இந்த வன்முறைக்கு யார் காரணம்? கலர்ஸ் தமிழுடன் சேர்ந்து விளக்கிய நடிகை குஷ்பு!

குஷ்பு

குஷ்பு

கன்னத்தில் பதிந்த கைவிரல் ரேகையோடும் ஒரு நிழற்படத்தை நடிகை குஷ்பூ சமீபத்தில் பதிவிட்டபோது இணையமே பெரும் பரபரப்பிற்கு உள்ளானது.

  குடும்ப வன்முறை மீது விழிப்புணர்வை உருவாக்க கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியுடன் இணைந்து செயல்படும் நடிகை குஷ்பூ .
  7095511111 என்ற கட்டணமில்லா எண்ணுக்கு மிஸ்டுகால் தருவதற்கான ஒரு பரப்புரையின் வழியாக குடும்ப வன்முறைக்கு எதிராக ஒரு தெளிவான நிலைப்பாட்டை எடுக்கும் கலர்ஸ் தமிழ் மற்றும் நடிகை குஷ்பூ


  பெண்களுக்கு எதிரான வன்முறை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தமிழ்நாட்டில் அதிவேகமாக வளர்ந்து வரும் பொது பொழுபோக்குச் சேனலான கலர்ஸ் தமிழ், இதில் விரைவில் தொடங்கப்படவுள்ள “மீரா” நிகழ்ச்சியின் வழியாக, குடும்ப வன்முறை போன்ற சமூகத் தீமைகளை வெளிச்சம் போட்டுக்காட்டவும் மற்றும் அவற்றின் மீது விழிப்புணர்வை உருவாக்கவும் திட்டமிட்டிருக்கிறது. சர்வதேச பெண்கள் தின அனுசரிப்பையொட்டி ஒரு தனித்துவமான மிஸ்டுகால் கொடுக்கும் செயல்திட்டத்தை இந்த சேனல் தொடங்கியிருக்கிறது. 7095511111 என்ற கட்டணமில்லா எண்ணுக்கு ஒரு மிஸ்டுகால் செய்வதன் மூலம் பெண்களுக்கு எதிரான அடக்குமுறைக்கும், ஒடுக்குமுறைக்கும் எதிராக குரல் கொடுக்கவும் மற்றும் இதன்மீது அவர்களது சிந்தனைகளை பகிர்ந்துகொள்ளவும் மக்களை தூண்டுவதே இச்செயல்திட்டத்தின் நோக்கம்.

  இதையும் படிங்க.. மாமியாருடன் சண்டை போட்ட சீரியல் நடிகை.. வெளியானது வீடியோ! கடைசியில் தான் ட்விஸ்டே இருக்கு

  #SayNoToViolence #StandWithMe #SpeakUpNow #Meera என்பவற்றின் மூலம் தனது இன்ஸ்டாகிராம் ஹேண்டில் மீது வீங்கிய முகத்துடனும், கன்னத்தில் பதிந்த கைவிரல் ரேகையோடும் ஒரு நிழற்படத்தை நடிகை குஷ்பூ சமீபத்தில் பதிவிட்டபோது இணையமே பெரும் பரபரப்பிற்கு உள்ளானது. இதன் பின்னணியில் என்ன காரணங்கள் இருக்கக்கூடும் என்று பல ரசிகர்கள் தங்களது எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டபோது ஒரு புதிய வீடியோவை வெளியிட்டதன் மூலம் நடிகை குஷ்பூ அனைத்து வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்தார். பெண்கள் திறனதிகாரம் பெறவேண்டுமென்ற குறிக்கோளை எட்டுவது குறித்தும், ஆணாதிக்க சூழலின் மத்தியில் அவர்களின் உரிமைகளுக்காக பெண்கள் தைரியமாக போராட முன்வருவது குறித்து #StandWithMeera என்பதன் வழியாக ஒரு உறுதியான நிலைப்பாட்டை நடிகை குஷ்பூ எடுக்கவிருப்பதை அந்த வீடியோ வெளிப்படுத்தியிருந்தது.

  இதையும் படிங்க.. தாங்க முடியாத சந்தோஷத்தில் நடிகை தேவயானி... மருமகளுடன் செம்ம டான்ஸ்!

  நடிகர் சுரேஷ் மேனன் தன்மீது காட்டுகின்ற மனப்பான்மையை நடிகை குஷ்பூ வெறுத்து ஒதுக்குகின்ற நிலையில், அவளது இரு குழந்தைகளுக்கு முன்னால் நடிகர் சுரேஷ் மேனன் நடிகை குஷ்பூவின் கன்னத்தில் அறைவதை அந்த வீடியோ சித்தரித்திருக்கிறது. அவரது முகத்தின் மீது கேமராவின் வெளிச்சம் பாய்கின்றபோது, ஒரு கணவன் அவரது மனைவியை கன்னத்தில் அடிக்கலாமா என்று பார்வையாளர்களைப் பார்த்து அவர் கேள்வியெழுப்புகிறார். அதுவும் அவரது குழந்தைகளுக்கு முன்னால் இந்த வன்முறை நிகழுமானால், வரும் காலத்தில் அவளது குழந்தைகள் இந்த குடும்ப வன்முறையை ஒரு இயல்பான நிகழ்வாக எடுத்துக்கொள்ள பழகிவிடுவார்கள் என்ற அச்சத்தையும் வெளிப்படுத்துவதாக அது இருந்தது. #STANDWITHMEERA என்ற ஹேஷ்டேக் உடன் திரையில் காட்டப்படுகின்ற 7095511111 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணுக்கு ஒரு மிஸ்டுகால் தருவதன் மூலம் குடும்ப வன்முறைக்கு எதிராக ஒரு உறுதியான நிலைப்பாட்டை எடுக்கவும் மற்றும் குடும்ப வன்முறை மீதான அவர்களது சிந்தனைகளை பகிர்ந்துகொள்ளவும் மக்களையும், ரசிகர்களையும் நடிகை குஷ்பூ வலியுறுத்திக் கேட்டுக்கொண்டார். வாழ்க்கையையே மாற்றிப்போடுகின்ற ஒரு முடிவை எடுக்க மீராவுக்கு உதவுமாறும் அந்த வேண்டுகோள் இருந்தது.   
  View this post on Instagram

   

  A post shared by Kushboo Sundar (@khushsundar)


  கலர்ஸ் தமிழ் சேனலுடனான ஒத்துழைப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் நெடுந்தொடர் இதுதான் என்று ரசிகர்களுக்கு சுட்டிக்காட்டியிருக்கும் நிலையில், நன்கு படித்திருந்தாலும் அல்லது நகர்ப்புறத்தில் வாழ்பவராக இருந்தாலும் கூட அனைத்துப் பிரிவுகளையும் சேர்ந்த பெண்கள் இதுபோன்ற மிருகத்தனமான ஒடுக்குமுறையை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது என்ற செய்தியினை பார்வையாளர்களுக்கு வலியுறுத்திச் சொல்ல நடிகை குஷ்பூவும், கலர்ஸ் தமிழ் சேனலும் விரும்புகின்றனர். கலர்ஸ் தமிழின் புத்தம் புதிய நிகழ்ச்சியான மீராவின் (#Meera) வழியாக குடும்ப வன்முறை போன்ற மோசமான சமூகத் தீமைகளை துணிவுடன் எதிர்க்க மக்களை ஊக்குவிப்பது இந்த விளம்பரத் திட்டத்தின் பின்புல குறிக்கோளாக இருக்கிறது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Sreeja
  First published:

  Tags: Colors Tamil | கலர்ஸ் தமிழ், Instagram, Kushboo

  அடுத்த செய்தி