புதுசு, புதுசா நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்தி மக்களை என்டர்டெயின் செய்வதில் விஜய் தொலைக்காட்சி சிறந்து விளங்குகிறது. அதேநேரத்தில் விறுவிறுப்பாகவும், டிஆர்பி ரேட்டிங்கில் டாப் கியரிலும் சென்று கொண்டிருந்த சீரியல் அல்லது நிகழ்ச்சிகள் ஏதாவது முடிவுக்கு வந்துவிட்டால், உடனே அடுத்த சீசனுக்கான அறிவிப்பை வெளியிட்டு ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் திக்குமுக்காடவும் வைத்துவிடும்.
அப்படி ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து காத்திருந்த முக்கிய நிகழ்ச்சியாக கலக்கப்போவது சீசன் 3 ஷோ பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை விஜய் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. கலக்கப் போவது யாரு என்ற காமெடி ஷோ விஜய் தொலைக்காட்சியில் 2005 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் வெற்றி பெறுபவர்களுக்கு
காமெடி கிங் என்ற பட்டத்துடன் பணமும் பரிசாக வழங்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற சிவகார்த்திகேயன், ரோபோ சங்கர் ஆகியோர் முன்னணி நடிகர்களாக வலம் வந்து கொண்டிருக்கின்றனர்.
இதையும் படிங்க.. கணவரை பிரிந்து வாழ்கிறாரா விஜய் டிவி சீரியல் நடிகை? காதலர் தினத்தில் பரவிய தகவல்!
இந்த நிகழ்ச்சியில் தாடி பாலாஜி, ஈரோடு மகேஷ், சேது, பிரியங்கா, ஆர்த்தி, கோவை சரளா, ராதா, வனிதா விஜயகுமார், ஆதவன், ரம்யா பாண்டியன் என பலரும் நடுவர்களாக பங்கேற்றுள்ளனர். இந்த ஷோ தனது 9வது சீசனை வெற்றிகரமாக 2020ம் ஆண்டு நிறைவு செய்தது. இதனிடையே ‘கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ்’ என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பானது, இதற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்ததை அடுத்து மொத்தம் 2 சீசன்கள் அடுத்தடுத்து ஒளிபரப்பானது. இந்த நிகழ்ச்சியில்
கலகப்போவது யாரு மற்றும் அது, இது எது நிகழ்ச்சியில் பங்கேற்று காமெடியில் பின்னிபெடலெடுத்த பிரபலங்கள் பங்கேற்றனர்.
இதையும் படிங்க.. முடிவில் உறுதியாக இருக்கும் டாக்டர் பாரதி… என்ன செய்ய போகிறார் கண்ணம்மா?
குக் வித் கோமாளி நிகழ்ச்சியைப் போலவே அதிக ரசிகர்கள் பட்டாளத்தைக் கொண்ட இந்நிகழ்ச்சி குறித்த அதிரடி அறிவிப்பு ஒன்றை விஜய் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ் சீசன் 3 நிகழ்ச்சி வரும் 20ம் தேதி முதல் விஜய் டி.வி.யில் ஒளிபரப்பாக உள்ளது. இதற்கான புரோமோ வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள விஜய் டி.வி., இனி ‘ஹேப்பி ஹவர்ஸ் டபுள்’ என அறிவித்துள்ளது.
விஜய் தொலைக்காட்சி வெளியிட்டுள்ள புரோமோ வீடியோவில், ரோபோ சங்கர்,
மதுரை முத்து, பிக்பாஸ் அர்ச்சனா ஆகியோர் நடுவர்களாக பங்கேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ் நிகழ்ச்சியில் சிங்கிளாக வந்து காமெடி செய்வார்கள், ஆனால் இந்த முறை இரண்டு, இரண்டு பேராக ஜோடியாக வந்து நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைக்கப்போறாங்க என்பது தெரிகிறது. இதில் ஆதித்யா டிவி புகழ் லோகேஷ், குட்டி கோபி, ஆதவன், கலக்கப்போவது யாரு புகழ் சரத், பாலா, நவீன், அமுதவாணன் உள்ளிட்ட பலரும் பங்கேற்க உள்ளனர். இந்த புரோமோ வீடியோ வைரலாகி வருவதோடு, நிகழ்ச்சியை காண ரசிகர்களின் எதிர்பார்ப்பும் அதிகரித்து வருகிறது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.