விஜய் டிவியில் கலக்க போவது யாரு? mr and mrs சின்னத்திரை நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமான சரத் தனது இன்ஸ்டாவில் வெளியிட்டு இருக்கும் புகைப்படம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சின்னத்திரை மொட்டை ராஜேந்திரன் என அன்போடு அழைக்கப்படும் சரத், விஜய் டிவி ஷோக்களில் பல நகைச்சுவை காட்சிகளை நிகழ்த்தியுள்ளார். அதுமட்டுமில்லை இதே விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் தொடரில் அவர் நடித்திருக்கிறார்.விஜய் டிவியில் டி.ஆர்.பி மிஷினான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாகவும் கலந்து கொள்வார். இதுத்தவிர வெள்ளித்திரையில் காமெடி ரோல்களிலும் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு ஒளிப்பரப்பான mr and mrs சின்னத்திரை சீசன் 3ல் டைட்டில் வின்னராக கோப்பையை அடித்தார்.
கண்ணு பட போகுது ஆங்கர் ரக்ஷன்.. லைக்ஸ் அள்ளும் ஃபோட்டோஸ்!
இந்த நிகழ்ச்சியில் இவருடன் மனைவி கிருத்திகாவும் கலந்து கொண்டார். காதல் திருமணம் செய்து கொண்ட இவர்கள் இந்த நிகழ்ச்சிக்கு பிறகு வேற லெவலில் ரீச் ஆகினர். இன்ஸ்டாவில் இவர்கள் வெளியிடும் புகைப்படங்களுக்கு லைக்ஸ் குவிய தொடங்கியது. அந்த நம்பிக்கையுடன் இருவரும் யூடியூப்பில் தனியாக சேனல் தொடங்கி அதை வெற்றிக்கரமாக தற்போது நடத்தி வருகிறார்கள். இருவருக்கும் தனிப்பட்ட முறையில் நிறைய ஃபேன்ஸ் உண்டு.
சித்தி 2 முடிந்தாலும் சின்னத்திரையில் வெண்பா மவுசு இன்னும் குறையவில்லை!
இந்நிலையில், சரத் சில தினங்களுக்கு முன்பு தனது இன்ஸ்டா பக்கத்தில் ஆடை அணியாமல் படுக்கையில் படித்தப்படி புகைப்படம் ஒன்றை வெளியிட்டார். ஆரம்பத்தில் பலரும் அவருக்கு உடம்பு சரியில்லை என நினைத்து டேக் கேர் என ரிப்ளை செய்தனர். அதன் பின்பு தான் ரசிகர்களுக்கு தெரிய வந்தது இது, விஷ்ணு விஷால், ரன்வீர் சிங் வெளியிட்ட சர்ச்சை புகைப்படங்களை போலவே இருப்பது.
View this post on Instagram
இதனால் ரசிகர்கள் சரத்தை வசைப்பாட தொடங்கினர். இந்த புகைப்படத்தை இன்ஸ்டாவில் இருந்து நீக்கும் படியும் சிலர் கூறிவருகின்றனர். இன்னும் சிலர், இதுப்போன்ற புகைப்படங்களை பகிர்ந்தால் வழக்கு பாயும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.