பிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறாரா விஜய் டிவி ரக்‌ஷன்?

பிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் யாரெல்லாம் கலந்து கொள்ளப் போகிறார்கள் என்று பார்வையாளர்கள் யூகிக்குமாறு விஜய் டிவி தெரிவித்துள்ளது.

பிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறாரா விஜய் டிவி ரக்‌ஷன்?
ரக்‌ஷன்
  • News18 Tamil
  • Last Updated: September 16, 2020, 12:45 PM IST
  • Share this:
விஜய் டிவியில் கடந்த 3 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி இந்த ஆண்டு விரைவில் தொடங்கப்படும் என்று சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அத்துடன் நிகழ்ச்சிக்கான புரமோஷன் வீடியோக்களும் வெளியிடப்பட்டன. அன்று முதலே நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரபலங்கள் குறித்த தகவல்கள் கசியத் தொடங்கின.

ஆரம்பத்தில் ரம்யா பாண்டியன், சுனைனா உள்ளிட்டோர் இந்தமுறை பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியான நிலையில் சம்பந்தப்பட்டவர்கள் அத்தகவலை மறுத்தனர்.

சமீபத்தில்‘டைசன்’ பட வில்லன் நடிகர் பாலாஜி முருகதாஸ், சனம் ஷெட்டி, ரியோ ராஜ், ஷாலு ஷம்மு, அம்ரிதா ஐயர் ஆகியோரது பெயர்களும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ள போட்டியாளர்கள் பட்டியலில் இணைந்துள்ளன. அதேவேளையில் இவர்கள் யாரும் இத்தகவலுக்கு இதுவரை மறுப்பு தெரிவிக்கவில்லை.


படிக்க: ‘பிக்பாஸ் 4’ போட்டியாளர்கள் பற்றி விஜய் டிவி வெளியிட்ட அறிவிப்பு

இந்நிலையில் ‘கலக்கப்போவது யாரு’ தொகுப்பாளரும் நடிகருமான ரக்‌ஷன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.

தனது சமூகவலைதள பக்கத்தில் புகைப்படங்களை பதிவிட்ட ரக்‌ஷனிடம், என்ன இப்போதெல்லாம் உங்கள் விஜய் டிவி நிகழ்ச்சிகளில் பார்க்கமுடியவில்லையே என்று நெட்டிசன் ஒருவர் கேட்க, அதற்கு பதிலளித்த ரக்‌ஷன், ‘விரைவில் ஸ்பெஷலான ஒன்றில் வருகிறேன்’ என்று பதிலளித்துள்ளார். இந்த ரிப்ளையின் மூலம் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குத் தான் வரப்போவதாக நெட்டிசன்கள் பேசத் தொடங்கிவிட்டனர்.
First published: September 16, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading