ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

அவர்கள் விட்ட எந்த சாபமும் பலிக்கவில்லை.. மகள் பிறந்த மகிழ்ச்சியில் விஜய் டிவி நவீன்!

அவர்கள் விட்ட எந்த சாபமும் பலிக்கவில்லை.. மகள் பிறந்த மகிழ்ச்சியில் விஜய் டிவி நவீன்!

நவீன் - கிருஷ்ணகுமாரி

நவீன் - கிருஷ்ணகுமாரி

நவீன் - கிருஷ்ணகுமாரி ஜோடிக்கு அழகான பென் குழந்தை பிறந்துள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  விஜய் டிவி கலக்க போவது யாரு புகழ் நவீனுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த தகவலை அவரின் மனைவி இன்ஸ்டாவில் ஷேர் செய்துள்லார்.

  கலக்க போவது யாரு நிகழ்ச்சி மூலம் பட்டித்தொட்டி எங்கும் ஃபேமஸ் ஆனவர் நவீன். இப்போது விஜய் டிவியின் பாவம் கணேசன் சீரியலில், கணேசனாக நடித்துக் கொண்டிருக்கிறார். விஜய் டிவியில் ஒரு சாதரண போட்டியாளராக அறிமுகமாகி, இன்று அதே சேனலில், சீரியலில் கதாநாயகனாக நடிக்கும் அளவுக்கு உயர்ந்திருக்கிறார் நவீன்.தனிப்பட்ட வாழ்க்கை பொறுத்தவரையில் நவீனுக்கு ஏற்கெனவே திருமணமாகி விட்டதாக கூறப்படுகிறது. அவரின் மனைவி கொடுத்த புகாரின் பேரில்  நவீன் விவகாரம் காவல் துறை வரை சென்றது.

  மனைவியுடன் வெளிநாட்டு பயணம்.. வாவ் சொல்ல வைக்கும் பிக் பாஸ் ராஜூ!

  ஆனால் நவீன் இதை மறுத்தார். காதல் மட்டும் தான்  திருமணம் ஆகவில்லை என்றார். அதன் பின்பு நவீனுக்கும் மலேசியாவை சேர்ந்த கிருஷ்ணகுமாரிக்கும் காதல் மலர்ந்தது. இருவரும்  திருமணம் செய்து கொண்டனர். இப்போது நவீன், கிருஷ்ணகுமாரியுடன் வாழ்ந்து வருகிறார். இன்ஸ்டாவில் ஆக்டிவாக இருக்கும் நவீன் அவ்வப்போது மனைவியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் வீடியோக்களை ஷேர் செய்வார்.

  சில மாதங்களுக்கு முன்பு விஜய் டிவி நிகழ்ச்சி ஒன்றுக்கு நவீனின் மனைவி அவருக்கு சர்ப்ரைஸ் கொடுக்க வந்து இருந்தார். அப்போது மேடையில் எமோஷ்னலாக பேசிய அவர், ”எங்கள் கல்யாணத்திற்கு பிறகு பலரும் சாபம் விட்டனர். எங்களுக்கு குழந்தை பிறக்காது, நாங்கள் பிரிந்து விடுவோம் என்றனர்” என கூறி கண்கலங்கினார். சாபம் விட்ட அனைவருக்கும் நன்றி இப்போது நான் கர்ப்பமாக இருக்கிறேன் என்று கூறி இருந்தார்.

  கோபி - ராதிகா கல்யாணத்தை நிறுத்த வரும் ராமமூர்த்தி.. கண்ணீரில் பாக்கியா!

  அதனைத்தொடர்ந்து மனைவியின் வளைக்காப்பு படங்களை நவீன் இன்ஸ்டாவில் ஷேர் செய்து இருந்தார். பலரும் இதற்கு வாழ்த்துக்களை கூறி இருந்தனர். இந்நிலையில் நவீன் - கிருஷ்ணகுமாரி ஜோடிக்கு அழகான பென் குழந்தை பிறந்துள்ளது.


  குழந்தையின் முகத்தை மட்டும் மறைத்து நவீனின் மனைவி புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாவில் ஷேர் செய்துள்ளார். அதில் “நீ இந்த பூமிக்கு வருவது அவ்வளவு எளிதாக நடந்திடவில்லை செல்லமே, எங்களின் இறுதி மூச்சு வரை உன்னை நேசிப்போம்” என்ற  கேப்ஷனையும் கிருஷ்ணகுமாரி கொடுத்துள்ளார். இதற்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Sreeja
  First published:

  Tags: TV Serial, Vijay tv