நடிகர் சிவகார்த்திகேயன் குறித்து விஜய் டிவி பிரபலம் நாஞ்சில் விஜயன் தனது இன்ஸ்டாவில் வெளியிட்டு இருக்கும் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
விஜய் டிவிபிரபலங்களுக்கு எப்போதுமே மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைப்பதை பார்க்க முடிகிறது. அது சீரியல் பிரபலங்களாக இருந்தாலும் சரி, ரியாலிட்டி ஷோ பிரபலங்களாக இருந்தாலும் சரி அவர்களுக்கு பிடித்து விட்டால் போதும், தூக்கி கொண்டாட தொடங்கி விடுவார்கள். அந்த வகையில் விஜய் டிவியின் முக்கியமான மற்றும் வெற்றிகரமான நிகழ்ச்சிகளில் ஒன்றாக கலக்கப் போவது யாரு நிகழ்ச்சி பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமாகி தற்போது வெள்ளித்திரையில் சிவகார்த்திகேயன், அருண்ராஜா காமராஜ், ரோபோ சங்கர் உள்ளிட்டோர் கலக்கி கொண்டிருக்கின்றனர். இந்த நிகழ்ச்சி கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வருகிறது.
மிஸ் செய்த ஆல்யா மானசா.. தட்டி தூக்கிய ராஜா ராணி அர்ச்சனா -ரியா !
இதுப்போன்ற விஜய் டிவி காமெடி நிகழ்ச்சிகளுக்கு ரசிகர்கள் எப்போதுமே தொடர்ந்து தங்களது ஆதரவினை கொடுக்கின்றனர். இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் காமெடியன்களும் ரசிகர்களுக்கு நெருக்கமாகி விடுகின்றனர்.அவர்கள் பொதுவெளியில் சென்றால் கூட ரசிகர்கள் ஓடி சென்று அந்த காமெடி பற்றி பேசி வாழ்த்துகிறார்கள்.அந்த வரிசையில் விஜய் டிவி ராமர், அமுதவாணன், பாலாஜி, நாஞ்சில் விஜயன், தீனா போன்றவர்கள் மக்களின் ஃபேவரெட். இதில் பலரும் சிவாகார்த்திகேயனை ரோல் மாடலாக எடுத்துக் கொண்டு விஜய் டிவி பக்கம் வந்தவர்கள்.
பிக் பாஸ் பிரபலத்தை கரம் பிடிக்கும் விஜய் டிவி சீரியல் நடிகை! குவியும் வாழ்த்துக்கள்!
வெள்ளித்திரையில் சிவகார்த்திகேயன் பெரிய ஸ்டார் ஆகிவிட்டாலும் அவர் தன்னை வளர்த்து விட்ட விஜய் டிவியை மறக்கவில்லை. முடிந்தவரை தன்னுடன் டிவியில் பணியாற்றிய பலருக்கும் தனது படங்களில் வாய்ப்பு தருவதை பார்க்க முடிகிறது. அதே போல் சிவகார்த்திகேயன் படங்களில் கட்டாயம் ஒரு விஜய் டிவி பிரபலம் இருப்பார். அந்த அளவுக்கு தன்னை வளர்த்து விட்ட சின்னத்திரைக்கு சிவா நிறைய இடங்களில் முக்கியத்துவம் தருவதை பார்க்கலாம். குக் வித் கோமாளி, சூப்பர் சிங்கர், கலக்க போவது யாரு? பிக் பாஸ் ஃபைனல்ஸ் என எல்லா நிகழ்ச்சியின் ஃபைனல்ஸிலும் சிறப்பு விருந்தினராக கட்டாயம் சிவா அழைக்கப்படுகிறார்.
View this post on Instagram
அப்படித்தான் சமீபத்தில் நடந்து முடிந்த கலக்க போவது யாரு? சாம்பியன்ஸ் ஃபைனல்ஸ் நிகழ்ச்சிக்கும் சிவகார்த்திகேயன் சென்று இருக்கிறார். அவருடன் ஃபோட்டோ எடுத்துக் கொண்ட நாஞ்சில் விஜயன் அந்த புகைப்படத்தை இன்ஸ்டாவில் ஷேர் செய்து, சிவகார்த்திகேயன் குறித்து ஒரு பதிவை வெளியிட்டு இருக்கிறார். அதில் “ உண்மையான ஹீரோ எவ்வளவு உயரத்திற்கு போனாலும் பழைய நண்பர்களையும் பழகியவர்களையும் மறக்காமல் தொடர்ந்து கவனித்து அன்பு பாராட்டும் டான்
View this post on Instagram
தன் திறமையை மூலதனமாக வைத்து உழைத்துக்கொண்டே இருந்தால் வாழ்வில் உச்சத்தை அடையலாம் என்று முன்னேற துடிக்கிற பல இளைஞர்களுக்கு ரோல் மாடலாக இருக்கும் சீமராஜா, மக்களை மகிழ்விப்பதில் இவர் எப்போதுமே ஒரு டாக்டர், எப்போதுமே நீங்கள் தான் எங்கள் இன்ஸ்ப்ரேஷன்” என குறிப்பிட்டுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Sivakarthikeyan, Vijay tv