விஜய் டிவி புகழ் அமுதவாணன் காமெடி நிகழ்ச்சியில் கண்ணீர் விட்டு அழுத வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
விஜய் டிவியில் சீரியல்களை காட்டிலும் ரியாலிட்டி ஷோக்கள் மக்கள் மத்தியில் பயங்கர ஃபேம்ஸ். அது இது எது, கலக்க போவது யாரு, ஜோடி நம்பர் 1 போன்ற நிகழ்ச்சிகள் விஜய் டிவியின் ரீச்சுக்கு மிகப்பெரிய அளவில் கைக்கொடுத்தன. கலக்க போவது யாரு, சிரிச்சா போச்சு நிகழ்ச்சியில் காமெடி நடிகர்களாக கலக்கியவர்கள் அமுதவாணன், உடுமலை ரவி, பாலாஜி, தங்கத்துரை, ராமர் , நாஞ்சில் விஜயன் ஆகியோரின் காமெடி வீடியோக்கள் இப்போதும் யூடியூப்பில் பார்வையாளர்களால் ரசிக்கப்படுகின்றன. இந்நிலையில் தற்போது விஜய் டிவியில் கலக்க போவது யாரு சாம்பியன்ஸ் டபுள்ஸ் நிகழ்ச்சி ஒளிப்பரப்பாகி வருகிறது.
அண்ணனை பார்க்க ஓடி வந்த கதிர்.. அதிர்ச்சி தந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்!
இந்த நிகழ்ச்சியை ஈரோடு மகேஷ் மற்றும் மைனா நந்தினி தொகுத்து வழங்குகின்றனர். ரோபோ ஷங்கர், மதுரை முத்து, அர்ச்சனா நடுவர்களாக உள்ளனர். இந்த வாரம் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ‘வீட்ல விசேஷம் ‘ படக்குழுவினர் வருகை தருகின்றனர். நடிகர் சத்யராஜ் மற்றும் ஆர். ஜே பாலாஜி ஆகியோர் வருகின்றனர். இதில் சத்யராஜின் அமைதிப்படை கெட்டப், அமாவாசை ரோலை மிமிக்ரி செய்கிறார் அமுதவாணன்.
7 மில்லியன் என்றால் சும்மாவா.. செம்ம ஹாப்பியில் விஜய் டிவி மைனா நந்தினி!
அமுதவாணன், சத்யராஜை போல் நடித்து காட்டுவதில் பேசுவதில், டான்ஸ் ஆடுவதில் வல்லவர். அவர் முன்னாடி முதல் முறையாக நடித்து காட்டுகிறார். அதன் பின்பு இந்த தருணத்தை மிகவும் உருக்கமாக பதிவு செய்கிறார். ”15 வருட உழைப்பில் எத்தனையோ முறை சத்யராஜ் சார் போல் நடித்து காட்டி இருந்தாலும் இன்றுதான் அவரை முதன்முறையாக நேரில் பார்க்கிறேன். காமெடி நடிகர்கள் லைஃப் அவ்வளவு ஈஸி இல்லை, கைத்தட்டல்கள் வாங்க அவர்களின் செய்யும் அர்ப்பணிப்பு மிக மிக அதிகம். அவர்களின் உழைப்புக்கு அங்கீகாரம் கொடுங்கள், மரியாதையாக நடத்துங்கள்” என்று அமுதவாணன் கலங்குகிறார்.
அந்த சமயம், மைக்கை வாங்கி பேசும் நடிகர் சத்யராஜ், அமுதவாணன் போல் மிமிக்ரி செய்யும் ரோலில் நான் நடிக்க ஆசைப்படுகிறேன் என் கூறி மொத்த அரங்கத்தையும் நெகிழ வைக்கிறார். இந்த நிகழ்ச்சியை வரும் ஞாயிறு மதியம் 1.30 மணிக்கு விஜய் டிவியில் பார்க்கலாம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Actor sathyaraj, Vijay tv