தெருக்கூத்து அல்லது மேடை நாடங்களாக இருந்தாலும் சரி, வெள்ளித்திரை அல்லது சின்னத்திரையாக இருந்தாலும் சரி, காமெடியன்கள் அதாவது நகைச்சுவை நடிகர்களின் பங்களிப்பு ஒப்பீட்டளவில் மிகவும் குறைவாகவே இருக்கும். ஆனால் அவர்கள் - ஒரு கதைக்கு, ஒரு நிகழ்ச்சிக்கு - எவ்வளவு முக்கியமானவர்கள் என்பது பற்றி நம்மில் பலருக்கும் தெரியாது.
இன்னும் புரியும்படி, எளிமையாக சொல்லவேண்டும் என்றால், 'சந்திரமுகி' திரைப்படத்தில் வடிவேலுவின் கதாபாத்திரத்தை எடுத்துக்கொள்வோம். என்ன, வடிவேலுவின் காமெடி ட்ராக்கின் கீழ் ஒரு 8 முதல் 10 சீன்கள் இருக்குமா? சரி, இப்போது சந்திரமுகி திரைப்படத்தில் இடம்பெறும் வடிவேலுவின் நகைச்சுவை காட்சிகள் அனைத்தையும் நீக்கிவிடுவது போல் கற்பனை செய்து கொள்ளுங்கள்.
இப்போது சொல்லுங்கள் வடிவேலுவின் பங்களிப்பு, அதாவது ஒரு காமெடியனின் பங்களிப்பு இல்லாமல் 'சந்திரமுகி' திரைப்படம் எப்படி இருக்கும்? கதை மாறாது, சுவாரசியம் குறையாது, வசூலுக்கு பஞ்சம் இருந்திருக்காது தான், ஆனால் "ஏதோவொன்று" குறைவாக இருப்பது போல் தோன்றி இருக்கும்! அந்த குறையை நிரப்புபவர்கள் தான் - நகைச்சுவை நடிகர்கள். இது சினிமாவிற்கு மட்டுமல்ல, டிவி நிகழ்ச்சிகளுக்கும் பொருந்தும்.
"இந்த நிகழ்ச்சிக்கு காமெடி / காமெடியன்கள் தேவையா?!" என்று நீங்கள் யோசிக்கலாம்; கேட்கலாம். ஆனால் அதே நிகழ்ச்சியை குறிப்பிட்ட காமெடியன்கள் இல்லாமல் பார்த்தால் தான், அவர்களின் அருமை-பெருமை தெரியும். அப்படியான காமெடியன்களில் ஒருவர் தான் - கலக்க போவது யார் 'KPY' பாலா!
விஜய் டிவியின் பிரபலமான ஷோக்களில் ஒன்றான கலக்க போவது யார் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர்களில் ஒருவரான பாலா, குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி வழியாக தனெக்கென ஒரு ரசிகர் கூட்டத்தையே உருவாக்கி கொண்டார். நடிகர் சிவகார்த்திகேயன் உட்பட, விஜய் டிவியின் 'காமெடியன் ப்ராடெக்ட்' என்றாலே அவர்கள் டைமிங்-இல் பலே கில்லாடியாக இருப்பார்கள். ஆனால் பாலாவோ ரைமிங் ஆன டைமிங்-கிற்கு பெயர் போனவர்!
also read : பர்சனல் வாழ்க்கை பற்றி கேட்ட நெட்டிசன்களின் கேள்விக்கு பதிலடி கொடுத்த நடிகை சாந்தினி!
எந்த அளவிற்கு பெயர் போனவர் என்றால், தன் வாழ்வில் நடந்த ஒரு சோகமான காதல் தோல்வியை பற்றி 'நீயா நானா' நிகழ்ச்சியில் பேசும்போது கூட தனது "டைமிங் - ரைமிங் ஸ்டைலை" பயன்படுத்த தவறவில்லை!
விஜய் டிவியின் பிரபலமான டால்க் ஷோவான 'நீயா நானா' நிகழ்ச்சியில் பங்கு கொண்டு பேசிய போது, இதுவரை தன் வாழ்வில் நான்கு முறை காதல் தோல்விகளை சந்தித்து இருப்பதாக பாலா கூறி இருக்கிறார்.
also read : நிஜத்தில் நான் இப்படித்தான்- மனம் திறந்த சுந்தரி
"2019-ல ஒரு சரியான லவ்; ஒரு பெண்ணை பார்த்ததுமே சரியான ஸ்பார்க் அடிச்சது! அந்த பொண்ணும் ஜாலியா பேசுது, நானும் பேசுறேன்.. அந்த பொண்ணுகிட்ட உங்கள பிடிச்சு இருக்கு... வாழ்க்கையில 2, 3 லவ் பண்ணி இருக்கேன்.. ஆனா எதுவுமே சக்ஸஸ் ஆனது இல்ல.. உங்ககிட்ட பேசுறத வச்சி சொல்றேன் அப்டினு.. பயப்படாம சொல்லிட்டேன்.. அதுக்கு அந்த பொண்ணு அழுதுகிட்டே உங்களை நான் என் அண்ணன் மாதிரி நினைச்சேன்னு சொல்லிட்டா.. ஹார்ட் அப்டியே இறங்கிடுச்சு!" என்று பாலா தன் காதல் தோல்வி குறித்து உருக்கமாக பேசி உள்ளார்.
இப்படி சீரியஸ் ஆக பேசினாலும் கூட "தொடர்ந்து 4 லவ் ஃபெயிலியர்.. என் வாழ்க்கையில் கிட்னி மட்டும் தான் இன்னும் ஃபெயிலியர் ஆகல.. அது தவிர்த்து எல்லாமே ஃபெயிலியர் ஆகிடுச்சு!" என்று சொல்லி நிகழ்ச்சியில் பங்குகொண்டவர்களை சிரிக்கவும் வைத்துள்ளார் பாலா, அதுதான் பாலா!
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Vijay tv