Home /News /entertainment /

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் திடீரென ஆப்சென்ட் ஆன பாலா.. இது தான் காரணமாம்!

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் திடீரென ஆப்சென்ட் ஆன பாலா.. இது தான் காரணமாம்!

குக் வித் கோமாளி பாலா

குக் வித் கோமாளி பாலா

Cooku With Comali : குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியில் கடந்த வாரம் பாலா பங்கேற்கவில்லை.

விஜய் தொலைக்காட்சியில் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி டி.ஆர்.பி. ரேட்டிங்கில் பின்னி பெடலெடுக்கும் ஷோவாக வலம் வருகிறது. இதன் முதல் மற்றும் இரண்டாவது சீசனுக்கு கிடைத்த ஏகபோக வரவேற்பை அடுத்து ‘குக் வித் கோமாளி சீசன் 3’ ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீசனில் அம்மு அமிராமி, கிரேஸ் கருணாஸ், தர்ஷன், பாரதி கண்ணம்மா புகழ் ரோஷினி ஹரிப்பிரியன், சந்தோஷ் பிரதாப், ஸ்ருத்திகா அர்ஜுன், வித்யுலேகா ராமன், ஆகியோரும், கோமாளிகளாக பாலா, குரேஷி, மணிமேகலை, சிவாங்கி, மூக்குத்தி முருகன், சுனிதா, அதிர்ச்சி அருண், சக்தி ராஜ், பரத் கே ராஜேஷ் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

இந்த ஷோவிற்கே பலமாக இருப்பது கோமாளிகள் தான் விதவிதமாக கெட்டப் போட்டு, செஃப்களிடம் அடிவாங்கி, குக்குகளிடம் திட்டு வாங்கி நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைக்கின்றனர். அதுமட்டுமின்றி குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கிடைக்கும் பிரபலம் மூலமாக பலரும் வெள்ளித்திரையில் கலக்கி வருகின்றனர். சமீபத்தில் ‘வலிமை’, ‘எதற்கும் துணிந்தவன்’ ஆகிய படங்களில் நடித்த புகழ், தற்போது ஹீரோவாக ‘மிஸ்டர் ஜூ கீப்பர்' என்ற படத்தில் நடித்து வருகிறார்.

ஷிவாங்கி சிவகார்த்திகேயனின் ‘டான்’ படத்தில் நடித்துள்ளார். இதேபோல் பலரும் வெள்ளித்திரையில் பிசியாக நடித்து வருவதால் சில சமயங்களில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாமல் போகிறது. இந்நிலையில் கடந்த வாரம் நடந்து முடிந்த குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியில் கோமாளி பாலா பங்கேற்கவில்லை. பாலா இருந்தால் தானே காமெடிக்கு பஞ்சமே இருக்காது, அவர் எங்கப்பா போனாரு என ரசிகர்கள் கேள்வி மேல் கேள்வி எழுப்பி வந்தனர்.

என்டர்டெயின்மென்டுக்கு பஞ்சம் இல்லாமல் பார்த்துக்கொள்ளும் பாலா, ஏன் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை என குக் வித் கோமாளி டீம் விளக்கமளித்துள்ளனர். அதாவது பாலா எதிர்பாராதவிதமாக வெளியூரில் சிக்கிக்கொண்டதாகவும், அதனால் தான் அவர் ஷோவிற்கு வரவில்லை என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. கண்டிப்பாக அடுத்த வாரம் பாலாவை ஷோவில் பார்க்கலாம் என நம்பிக்கை கொடுத்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளனர்.

also read : கோயிலில் குக் வித் கோமளி புகழ்.. அதுவும் யாருடன் தெரியுமா?

 கடந்த  வாரம் குக் வித் கோமாளி சீசன் 3 எபிசோட்டி எலிமினேஷன் ரவுண்ட் நடைபெற்றது. கோமாளிகள் அனைவரும் செஃப் மற்றும் குக்குகள் கெட்டப்பில் வந்து அசத்தினர். பாலா இல்லையே என்ற குறையை தவிர நிகழ்ச்சி எப்போதும் போல் செம்ம கலகலப்பாக சென்றது. பாலா இல்லாத இடத்தை ஷிவாங்கியும், மணிமேகலையும் எடுத்துக்கொண்டனர். ஷிவாங்கி தாமு வேடத்திலும், மணிமேகலை வெங்கட் பட் வேடத்திலும் வந்து காமெடி செய்து அசத்தினர்.

முதல் ரவுண்டில் நன்றாக சமைத்ததற்காக தர்ஷன் சிறந்த குக் என அறிவிக்கப்பட்டு அவருக்கு பரிசு வழக்கப்பட்டது. மேலும் அவருடன் கோமாளியாக இருந்த மணிமேகலைக்கும் ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள பரிசு வழங்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொள்ள மறுத்த ஷிவாங்கி, ‘நான் கோமாளியா இருக்கும் போது மட்டும் சமையலில் உப்பு போடுறீங்க’ என கோபித்துக்கொண்டார்.also read : விஜய் டிவி மாகாபா ஆனந்துக்கு இவ்வளவு சம்பளமா?

அதனை சமாதானப்படுத்த தர்ஷன் தனது பரிசை ஷிவாங்கிக்கு தருவதாக சொல்ல, உடனே மணிமேகலை  நீங்க ஜெயிக்க காரணம் நான் தான், பரிசும் எனக்குத் தான் என ஷிவாங்கியுடன் சண்டை போட்டார். இதைப் பார்த்து செஃப்கள் வெங்கட் பட், தாமு இருவரும் அழுவது போல் ஆக்டிங் செய்தனர், உடனே ரக்‌ஷன் ‘ட்ரெண்டிங் ஜோடியோட கெட்டைப் போட்டுக்கொண்டு இப்படி சண்டை போடுறீங்களே’ என சொல்லி சமாதானப்படுத்தி வைத்தார். இப்படி பல சேட்டைகளை செய்து ஷிவாங்கி, மணிமேகலை இருவரும் எபிசோட்டை கலகலப்பாக்கினர்.மேலும் சந்தோஷ் கடந்த வாரம் எலிமினேட் செய்யப்பட்டது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.ஆனால் wild card-ல் சந்தோஷ் மாஸாக எண்ட்ரி கொடுப்பார் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

மேலும் இந்த வாரம் பாலா நிச்சயமாக குக் வித் நிகழ்ச்சியில் கலந்துக்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Published by:Tamilmalar Natarajan
First published:

Tags: Vijay tv

அடுத்த செய்தி