முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / கோலங்கள் 2 ரெடி... ரசிகர்களை குஷிப்படுத்திய சீரியல் இயக்குநர்!

கோலங்கள் 2 ரெடி... ரசிகர்களை குஷிப்படுத்திய சீரியல் இயக்குநர்!

திருச்செல்வம் - தேவயானி

திருச்செல்வம் - தேவயானி

கோலங்கள் 2 சீரியல் கண்டிப்பாக வரும், இரண்டாம் பாகம் வருவதற்கு அதிக வாய்ப்புள்ள சீரியல் அது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

கோலங்கள் 2 சீரியலுக்கான வேலைகள் அனைத்தும் முடிந்துவிட்டதாக இயக்குநர் திருச்செல்வம் கூறியுள்ளார்.

சன் தொலைக்காட்சியில் பலவகையான சீரியல்கள் ஒளிபரப்பாகி வந்தாலும், இன்று வரையிலும் பலரது நினைவை விட்டு நீங்காத சீரியலாக பார்வையாளர்கள் மனதில் இடம் பெற்றிருக்கிறது கோலங்கள் சீரியல். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த தேவயாணி நடிப்பில் வெளியான கோலங்கள் சீரியல் 2003-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரை வெற்றிகரமாக ஒளிபரப்பானது.

கோலங்கள் சீரியலை இயக்கியது மட்டுமில்லாமல் அதில் முக்கிய கதாபாத்திரத்திலும் திருச்செல்வம் நடித்திருந்தார். அபி என்கிற கதாபாத்திரத்தில் தேவயானியும், தொல்காப்பியம் என்ற கதாபாத்திரத்தில் திருச்செல்வமும் நடித்திருந்தனர். இவர்களுடன் சத்யபிரியா, நளினி, பொன்வண்ணன், விஜி சந்திரசேகர், தீபா வெங்கட் உள்ளிட்டோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

விபரீத முடிவெடுத்த ஆதிரை... இரக்கம் இல்லாத குணசேகரன் - பரபரப்பான எதிர்நீச்சல் சீரியல்!

இந்நிலையில் தற்போது, ”கோலங்கள் 2 சீரியல் கண்டிப்பாக வரும், இரண்டாம் பாகம் வருவதற்கு அதிக வாய்ப்புள்ள சீரியல் அது. அதற்கான கதையெல்லாம் தயார் செய்து வைத்துவிட்டேன். ஆனால் அது வேறொரு தயாரிப்பு நிறுவனம் என்பதால் அதற்கான காலம் வரும்போது சன் டிவி-யில் வரும், சன் டிவி-யில் மட்டும் தான் வரணும்” எனத் தெரிவித்துள்ளார் இயக்குநர் திருச்செல்வம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Sun TV, TV Serial