ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

திருமணத்துக்கு தயாராகும் கியாரா அத்வானி - சித்தார்த் மல்ஹோத்ரா!

திருமணத்துக்கு தயாராகும் கியாரா அத்வானி - சித்தார்த் மல்ஹோத்ரா!

கியாரா அத்வானி - சித்தார்த் மல்ஹோத்ரா

கியாரா அத்வானி - சித்தார்த் மல்ஹோத்ரா

பாலிவுட்டில் இருந்து யாரும் திருமணத்திற்கு அழைக்கப்பட மாட்டார்கள்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  பாலிவுட் நடிகை கியாரா அத்வானியும், நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவும் அடுத்தாண்டு திருமணம் செய்துக் கொள்ளவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

  அதிகாரப்பூர்வமாக தங்கள் உறவை உறுதிப்படுத்தவில்லை என்றாலும், பாலிவுட் நடிகர்கள் சித்தார்த் மல்ஹோத்ரா மற்றும் கியாரா அத்வானி பல ஆண்டுகளாக காதலித்து வருவது அனைவரும் அறிந்ததே. இந்த ஜோடி அடுத்த ஆண்டு திருமணம் செய்து கொள்ளப் போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

  “சித்தார்த்தும் கியாராவும் ஒருவரையொருவர் காதலிக்கிறார்கள். அவர்கள் தங்கள் உறவின் ஒவ்வொரு கட்டத்தையும் அனுபவித்து வருகிறார்கள். இப்போது அவர்கள் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறார்கள். கரண் ஜோஹரின் நிகழ்ச்சியான காஃபி வித் கரண் 7 மூலம் அவர்களின் காதல் பெரிதாக வெளியில் வந்தது. அவர் திருமணத்திற்கு அழைக்கப்படுவார் என்று நாங்கள் நம்புகிறோம். அடுத்த ஆண்டு ஏப்ரலில் இருவரும் திருமணம் செய்துகொள்ளலாம்” என்று கியாரா - சித்தார்த்தின் நெருங்கிய வட்டாரங்கள் பாலிவுட் ஊடகத்திடம் தெரிவிக்கின்றன.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  15 வருட பயணம்... பரதநாட்டியம், வீணை வாசிப்பு என ஆச்சர்யப்படுத்தும் இந்திரஜா சங்கர்!

  அதோடு, ”சித்தார்த்தும் கியாராவும் ஒருவரையொருவர் உறுதியாக நம்புவதால் தங்கள் உறவைப் பற்றி வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை. இந்த ஜோடி அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் திருமணம் செய்துகொள்ளலாம். பாலிவுட்டில் இருந்து யாரும் திருமணத்திற்கு அழைக்கப்பட மாட்டார்கள். ஏனெனில் பெரும்பாலும் இது சித்தார்த் - கியாரா குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் டெல்லியில் நடைபெறும் குடும்ப விழாவாக இருக்கும்” என்றும் நெருங்கிய வட்டாரங்கள் கூறுகின்றன.

  Published by:Shalini C
  First published:

  Tags: Bollywood