’வாழ்க்கையை கணிக்க முடியவில்லை’ நடிகர் சித்தார்த் சுக்லா மறைவுக்கு திரைப்பிரபலங்கள் இரங்கல்!

சித்தார்த் சுக்லா

2005 ஆம் ஆண்டு மிஸ்டர் வேர்ல்டு ஆணழகன் பட்டத்தை வென்ற அவர், இந்தி பிக்பாஸ் சீசன் 13-ல் பங்கேற்று ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்று வாகையையும் சூடினார்.

  • Share this:
வாழ்க்கையை கணிக்க முடியவில்லை என இந்தி திரைப்பட நடிகர் சித்தார் சுக்லா மறைவுக்கு நடிகை குஷ்பூ உள்ளிட்ட திரைபிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இந்தியில் சின்னத்திரை தொடர்களில் இளம் நடிகராக வலம் இந்த சித்தார்த் சுக்லா, ஏராளமான தொடர்களில் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தி பிக்பாஸ் 13வது சீசனில் பங்கேற்றதன் மூலம் பிரபலமான அவருக்கு பெரும் ரசிகர் பட்டாளம் உண்டு. வெள்ளித்திரையில் 2 படங்களில் நடித்துள்ளார். அவர் நடித்த ‘பலிகா வாது’ என்ற தொடர் தமிழில் ‘மண் வாசனை’ என்ற பெயரில் டப்பிங் செய்யப்பட்டு ஒளிபரப்பானது. இதனைத் தொடர்ந்து ‘ஜலக் திக் லாஜா 6’ உள்ளிட்ட சில ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பிட்னஸிலும் கவனம் செலுத்தி வந்த அவருக்கு செப்டம்பர் 2ஆம் தேதி காலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. உடனடியாக மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இளம் வயதில் சித்தார்த் சுக்லா மறைவெய்தியது இந்தி திரையுலகை மட்டுமல்லாது, ஒட்டுமொத்த இந்திய திரையுலகையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக இருக்கும் குஷ்பு, நடிகர் சித்தார்த் சுக்லாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். டிவிட்டரில் பதிவிட்டுள்ள இரங்கல் குறிப்பில், வாழ்க்கையை கணிக்க முடியவில்லை எனத் தெரிவித்துள்ளார். சித்தார்த் சுக்லாவை தனிப்பட்ட முறையில் தெரியவில்லை என்றாலும், அவரின் இறப்பு தன்னை பாதித்துள்ளதாக கூறியுள்ளார். வைகா வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், சித்தார்த் சுக்லாவின் ஆன்மா சாந்தியடையட்டும் என கண்ணீருடன் பதிவிட்டுள்ளார்.

Also read... கலர்ஸ் தமிழ் சீரியல் மூலம் சின்னத்திரைக்கு என்ட்ரி கொடுத்துள்ள Mr,Chennai பிரபலம்.. எந்த சீரியல் தெரியுமா?

இதேபோல், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட திரையுலகைச் சேர்ந்த பிரபலங்களும் சித்தார்த் சுக்லாவின் மறைவுக்கு இ்ரங்கல் தெரிவித்து வருகின்றனர். 2005 ஆம் ஆண்டு மிஸ்டர் வேர்ல்டு ஆணழகன் பட்டத்தை வென்ற அவர், இந்தி பிக்பாஸ் சீசன் 13-ல் பங்கேற்று ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்று வாகையையும் சூடினார். பிக்பாஸ் போட்டிக்குப் பிறகு இந்தி திரையுலகில் அவருக்கு வாய்ப்புகள் வரத் தொடங்கின. தொடர்ச்சியாக சின்னத்திரைத் தொடர்களிலும் நடித்து வந்த சித்தார் சுக்லா, சவ்தான் இந்தியா, இந்தியா காட் டேலன்ட் என்ற ரியாலிட்டி ஷோக்களையும் தொகுத்து வழங்கியுள்ளார்.

திரையுலகைக் கடந்து ரசிகர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. சமூக வலைதளங்கள் மூலம் ரசிகர்கள் தொடர்ச்சியாக தங்களின் இரங்கல் பதிவுகளை பதிவிட்டு வருகின்றனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சித்தார்த் சுக்லாவின் பிரேத பரிசோதனை அறிக்கையும் வெளியாகியுள்ளது. அதில், அவரது உடலில் வெளிப்புற காயங்கள் எதுவும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மரணத்தில் ஏதேனும் சந்தேகம் இருக்குமோ? என பலர் நினைத்த நிலையில், அவரது மரணம் இயற்கையானது என பிரேத பரிசோதனை அறிக்கை நிரூபித்துள்ளது.
Published by:Vinothini Aandisamy
First published: