Khushbu Sundar: சன் டிவி வேண்டாம்... வேறு சேனலுக்கு தாவிய குஷ்பு

குஷ்பு

மீண்டும் சின்னத்திரை சீரியலில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார் குஷ்பு. புதிய சீரியல் ஒன்றைத் தயாரித்து அதில் நடிக்க இருப்பதாக ஏற்கனவே கூறப்பட்டு வந்தது.

  • Share this:
    நடிகை குஷ்பு மீண்டும் சீரியலில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

    தமிழ் சினிமாவில் 90-களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் குஷ்பு. அதன் பின்னர் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர் சின்னத்திரை சீரியல்களிலும் நடித்து வந்தார். அதோடு சின்னத்திரை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியும் உள்ளார்.

    திமுக-வில் இணைந்து தனது அரசியல் பயணத்தைத் தொடங்கிய குஷ்பு, அதன் பின்னர் காங்கிரஸில் சேர்ந்தார். அப்போது ஆளுங்கட்சியான பாஜக-வை கடுமையாக தாக்கி, ட்விட்டரில் களமாடினார். இந்நிலையில் கடந்த வருடம் அவரே காங்கிரஸில் இருந்து விலகி பாஜக-வில் இணைந்தார்.

    Khushbu Sundar re-entry in Zee Tamil Gokulathil Seethai, Khushbu Sundar Twitter, khushbu sundar, khushbu sundar twitter id, khushbu sundar serial, khushbu sundar bjp, khushbu sundar new serial, khushbu sundar upcoming serial, khushbu sundar zee tamil, khushbu sundar zee tamil serial, khushbu sundar gokulathil seethai, khushbu sundar gokulathil seethai serial, குஷ்பு சுந்தர், குஷ்பு சுந்தர் ட்விட்டர், குஷ்பூ சுந்தர் சீரியல், குஷ்பு பாஜக, குஷ்பு சீரியல், குஷ்பு புதிய சீரியல், குஷ்பு ஜீ தமிழ் சீரியல், குஷ்பு சன் டிவி
    குஷ்பு


    அதோடு நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு, திமுக வேட்பாளர் மருத்துவர் எழிலனிடம் தோல்வியை தழுவினார். இதையடுத்து மீண்டும் சின்னத்திரை சீரியலில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார் குஷ்பு. புதிய சீரியல் ஒன்றைத் தயாரித்து அதில் நடிக்க இருப்பதாக ஏற்கனவே கூறப்பட்டு வந்தது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்நிலையில் நடிகை குஷ்பு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியலான கோகுலத்தின் சீதை ஷூட்டிங்கில் கலந்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன. இந்த சீரியலில் அவர் நாயகியின் அம்மா கதாபாத்திரத்தில் நடிக்கிறாரா? அல்லது கெஸ்ட் ரோலா என்பது தெளிவாக தெரியவில்லை. இது பற்றிய தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: