வெள்ளித்திரையில் பல ஆண்டுகள் போட்டியே இல்லாமல் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை குஷ்பு. தமிழகத்தில் முதல் முறையாக ஒரு நடிகைக்கு கோயில் கட்டப்பட்டது என்றால் அதுவும் இவருக்காக தான்.
அந்த அளவிற்கு பேரன்பு கொண்ட ரசிகர்களை பெற்று அப்போது முன்னணியில் இருந்த அனைத்து ஹீரோக்களுடனும் ஜோடியாக நடித்து வந்தார் நடிகை குஷ்பு. வெள்ளித்திரையை போலவே சின்னத்திரையும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருக்கிறது. எனவே திரைப்படங்களில் கோலோச்சிய பல நடிகர், நடிகைகள் தற்போது சின்னத்திரை சீரியல்களில் தோன்றி நடித்து வருகின்றனர். சின்னத்திரையில் பல ஆண்டுகளுக்கு முன்பே அறிமுகமான குஷ்பு நடிகையாக் மட்டுமின்றி திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளர், சின்னத்திரை நடிகை, கதாசிரியர் மற்றும் அரசியல்வாதி என பன்முகங்களை கொண்டவராக இருந்து வருகிறார்.
கோபிக்கு காத்திருக்கும் மிகப் பெரிய அதிர்ச்சி... பாக்கியாவுக்கு உண்மை தெரிந்து விட்டதா?
தற்போது கலர்ஸ் தமிழ் சேனலில் மீரா என்ற சீரியலை இயக்கி நடித்து வரும் குஷ்பு தனது சமீபத்திய பேட்டி ஒன்றில் பல விஷயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார். ஒரே நேரத்தில் நடிகை, தயாரிப்பாளர், கதாசிரியர், அரசியல் என பல துறைகளில் பயணிப்பது குறித்த கேள்விக்கு எனக்கும், என் கணவர் சுந்தர் சி-க்கும் "முடியாதது எதுவும் இல்லை" என்ற எண்ணம் அதிகம். அதே சமயம் இதை செய்ய வேண்டாம் என்று மனதில் லேசாக தோன்றினால் கூட அதை நாங்கள் செய்ய மாட்டோம். எனக்கு ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்யும் மல்டிடாஸ்கிங் மிகவும் பிடித்தமான ஒன்று என்றார்.
சின்னத்திரையை பொறுத்த வரை பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் இருக்கிறது. ஏரளமான பெண் தயாரிப்பாளர்கள் இருக்கிறார்கள். அதேபோல முன்பெல்லாம் சின்னத்திரைக்கு ஒரு நடிகை வந்து விட்டால் சினிமாவில் மார்க்கெட் போய்விட்டதால் இங்கு வந்துவிட்டார்கள் என்று விமர்சிப்பார்கள். ஆனால் பெரிய பெரிய நடிகர்களே இன்று சினிமா மற்றும் சின்னத்திரையில் இருக்கிறார்கள். எனவே இரண்டு திரைக்கும் இனி வேறுபாடில்லை என்று கூறி உள்ளார் குஷ்பு.
பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்திற்கு இப்படியொரு நிலைமையா?
இன்றைய இளைஞர்கள் சாதிக்க வேண்டும் என்று நினைத்தாலும் வெற்றியை சீக்கிரமே எதிர்பார்க்கிறார்கள். கொஞ்சம் பொறுமை, பொறுப்பு, தைரியம் எல்லாமே இருந்தால் தான் சாதிக்க முடியும். பல இடங்களில் பெண்களுக்கு அங்கீகாரம் கிடைக்காமல் இருக்க ஈகோ பார்க்கும் ஆண்களே காரணமாக இருக்கிறார்கள். அதே போல வீட்டில் தங்களுக்கு நடக்கும் பிரச்னைகளை சகித்து கொண்டு அது பற்றி வெளியில் பேசாமல் பல பெண்கள் இருக்கிறார்கள். ஆனால் பிரச்சனைகளை கண்டு தயக்கம் மற்றும் பயம் கொள்ளாமல் தைரியமாக குரல் உயர்த்தி பேசுவதால் மட்டுமே தீர்வு கிடைக்கும். மீரா சீரியல் எனது இந்த கருத்தை தான் பிரதிபலிக்கும் என்று கூறி உள்ளார் குஷ்பு.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.