ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

6 சீரியல்களில் நடித்து இருக்கும் பிரபல நடிகர்.. யாருன்னு கெஸ் பண்ண முடியுதா?

6 சீரியல்களில் நடித்து இருக்கும் பிரபல நடிகர்.. யாருன்னு கெஸ் பண்ண முடியுதா?

கேஜிஎப் யாஷ்

கேஜிஎப் யாஷ்

2004ஆம் ஆண்டு சின்னத்திரைக்குள் நுழைந்தவர் 2007 ஆம் ஆண்டு வரை சின்னத்திரையிலே கவனம் செலுத்தி வந்தார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  மிகப்பெரிய வசூல் சாதனையை பொழிந்து கொண்டிருக்கும் கே.ஜி.எப் படத்தின் ஹீரோ யாஷ் தான் அந்த நடிகர். இதுவரை யாஷ் 6 கன்னட சீரியல்களில் நடித்துள்ளார்.

  கன்னட சினிமாவின் ராக்கிங் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நடிகர் யாஷ் இன்று பான் இந்தியா ஸ்டார். ஒட்டுமொத்த இந்தியன் சினிமாவும் அவரை கொண்டாடிக் கொண்டிருக்கிறது. மேடை நாடக கலைஞராக தனது பயணத்தை தொடங்கியவர்  சீரியல்களில் நடித்து பின்பு துணை நடிகராக நிமிர்ந்து, கடைசியில் ‘ஜம்பட ஹுகுடி’ என்ற கன்னட படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகம் ஆனார். கே.பி.எஃப் திரைப்படம் யாஷை அடுத்த பரிமாணத்திற்கு எடுத்து சென்றது. முதல் பாகத்திற்கு மிகப் பெரிய அளவில் வரவேற்பு கிடைத்தது. ஐந்து மொழிகளில் டப் செய்யப்பட்டு உலகம் முழுவதும் வெளியிடப்பட்டு இருந்தது.

  Actor Yash | விஜயை விட நான் பெரிய நடிகர் இல்லை – நடிகர் யாஷ்

  இந்த படம் கன்னட சினிமா வரலாற்றிலேயே அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையை செய்தது. இதனை தொடர்ந்து சமீபத்தில் கே ஜி எஃப் 2  வெளியாகி இருந்தது. கேங்க்ஸ்டர் இல்லை மான்ஸ்டர் என்பது போல் வசூலில் மிகப் பெரிய அளவில் வெற்றி.‘யாஷ்’ என்று அறியப்பட்டு வரும் ராக்கி பாயின் நிஜப் பெயர்  “நவீன் குமார் கவுடா”. சாதாரணமாக  இந்த உயரத்தை யாஷ் அடைந்திடவில்லை.  மிடில் கிளாஸ் குடும்பத்தில் பிறந்து, வெறும் ரூ. 300 பணத்துடன் சினிமா கனவுக்காக வீட்டை விட்டு வந்தவரின்  படம் இன்று 300 கோடிக்கும் மேல் வசூலை தந்துக் கொண்டிருக்கிறது.

  இன்ஸ்டாகிராமில் 10 மில்லியன் ஃபாலோயர்ஸை பெற்ற நடிகர் யாஷ்… கன்னட திரையுலகில் சாதனை

  இந்த நேரத்தில் தான் யாஷ் நடித்த சீரியல்கள் மீண்டும் கன்னட சேனல்களில் ரீடெலிகாஸ்ட் செய்யப்படுகின்றன. அவர் நடித்த சீரியல் சீன்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன. ஒன்று, இரண்டு இல்லை. கிட்டத்தட்ட யாஷ் 6 சீரியல்களில் நடித்துள்ளார்.
   
  View this post on Instagram

   

  A post shared by Yash (@thenameisyash)  2004ஆம் ஆண்டு சின்னத்திரைக்குள் நுழைந்த யாஷ், 2007 ஆம் ஆண்டு வரை சின்னத்திரையிலே கவனம் செலுத்தி வந்தார். உத்ராயணா, சில்லி லலி, மேல் பில்லும், சிவா, நந்த கோகுலா, பீர்த்தி இல்லாட்டி மீலி இந்த 6 சீரியல்களும் யாஷ் நடித்தவை தான்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Sreeja
  First published:

  Tags: KGF, TV Serial