ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

ஏர்போர்டில் நடந்த ஸ்வீட் மீட்டிங்.. கீர்த்தி சுரேஷூடன் ஸ்ரீதேவி மகள் ஜான்வி !

ஏர்போர்டில் நடந்த ஸ்வீட் மீட்டிங்.. கீர்த்தி சுரேஷூடன் ஸ்ரீதேவி மகள் ஜான்வி !

கீர்த்தி சுரேஷ் - ஜான்வி

கீர்த்தி சுரேஷ் - ஜான்வி

இந்த புகைப்படத்தை இன்ஸ்டா ஸ்டோரியில் கீர்த்தி சுரேஷ் ஷேர் செய்து, ஜான்விக்கு வாழ்த்துக்களை கூறியுள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  ஐதராபாத் ஏர்போர்டில் ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூரை சந்தித்த நடிகை கீர்த்தி சுரேஷ் அவருடன் செல்பி எடுத்து அதை இன்ஸ்டாவில் போஸ்ட் செய்துள்ளார்.

  தென்னிந்திய சினிமாவில் குறுகிய காலத்திலே மிகப் பெரிய இடத்தை பிடித்து இருக்கும் கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு , மலையாளம் என மாறி மாறி பிஸியாக நடித்து வருகிறார். மலையாளத்தில் டோவினோ தாமஸ் உடன் இவர் நடித்த வாஷி படம் தெலுங்கில் டப் செய்யப்பட்டு வெளியாகிறது. அதே போல் தமிழில் உதயநிதியுடன் மாமன்னன் படத்திலும் கீர்த்தி நடித்து முடித்து இருக்கிறார். ஐதராபாத், சென்னை என பறந்து கொண்டிருக்கும் கீர்த்தி நேற்றைய தினம் ஏர்போர்டில் ஸ்ரீதேவி மகள் ஜான்வியை சந்தித்து இருக்கிறார்.

  ஆஸ்திரேலியாவுக்கு பறந்த குக் வித் கோமாளி மணிமேகலை.. குவியும் வாழ்த்து!

  ஜான்வியும் ஸ்ரீதேவியும் பயங்கர க்ளோஸ் ஃபிரண்ட்ஸ். இவர்கள் அடிக்கடி மீட் செய்து சேட் செய்வார்கள் அண்மையில் கூட ஜான்வி, கீர்த்தி, போனி கபூர் சந்தித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி இருந்தன. இந்நிலையில் ஐதராபாத் ஏர்போர்டில் தற்செயலாக ஜான்வியை பார்த்து பின்பு அவருடன் செல்பி எடுத்து மகிழ்ந்துள்ளார் கீர்த்தி. இருவரும் வெள்ளை நிற ட்ரெஸில் செம்ம க்யூட்டாக கேஷ்வல் லுக்கில் ஜொலிக்கின்றனர்.

  கீர்த்தி சுரேஷ் ஷேர் செய்த செல்பி

  இந்த புகைப்படத்தை இன்ஸ்டா ஸ்டோரியில் கீர்த்தி சுரேஷ் ஷேர் செய்து, ஜான்விக்கு வாழ்த்துக்களை கூறியுள்ளார். இந்த புகைப்படத்துக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது. ஜான்வி கபூரும் தெலுங்கு படம் மூலம் அறிமுகம் ஆகவுள்ளதாக  இணையத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜூனியர் என்.டி.ஆர் படத்தில் ஜான்வி லீட் ரோலில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Sreeja
  First published:

  Tags: Actress Keerthi Suresh, Bollywood