ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

கர்ப்பமான கயல் சீரியல் நடிகை.. கணவருடன் சேர்ந்து வெளியிட்ட புகைப்படம்!

கர்ப்பமான கயல் சீரியல் நடிகை.. கணவருடன் சேர்ந்து வெளியிட்ட புகைப்படம்!

அபிநவ்யா - தீபக்

அபிநவ்யா - தீபக்

அபி நவ்யா தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை இன்ஸ்டாவில் புகைப்படத்துடன் ஷேர் செய்துள்ளார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  கயல் சீரியலில் ஆனந்தி ரோலில் நடிக்கும் நடிகை அபி நவ்யா கர்ப்பகால புகைப்படத்தை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார்.

  சன் டிவியில் ஒளிப்பரப்பான பிரியமானவள் தொடரில் ஸ்வாதியாகவும், கண்மணி தொடரில் சினேகா கதாப்பாத்திரங்களிலும் நடித்தவர் செய்தி வாசிப்பாளர் அபி நவ்யா. தற்போது சன் டிவி கயல் சீரியலில் ஆனந்தி ரோலில் நடித்து வருகிறார். தனது நடிப்பு திறமையால் பலரது கவனத்தை ஈர்த்த அபி நவ்யா தனது ரசிகர்களுக்கு குட் நியூஸ் ஒன்றை ஷேர் செய்துள்ளார். இவருக்கு கடந்த ஆண்டு சீரியல் நடிகர் தீபக்குமாருடன் திருமணம் நடைப்பெற்றது.

  பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து விலகிய நடிகை.. நன்றியுடன் புறப்பட்டார்!

  அபி நவ்யா - தீபக்குமார் ஜோடி சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். தீபக்கை பொறுத்தவரை கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான திருமணம் சீரியலில் நவீன் கதாப்பாத்திரத்தில் நடித்து பெரும் வரவேற்பை பெற்றார். பின்னர், என்றென்றும் புன்னகை சீரியலில் லீட் ரோலில் நடித்தார். இப்போது ஈரமான ரோஜாவே 2 சீரியலில் நடித்து வருகிறார். அவரின் நடிப்பு சின்னத்திரையில் பெரும் கவனத்தையும் வரவேற்பையும் பெற்றுள்ளது.

  இந்நிலையில் கடந்த வருடம் பிரம்மாண்டமாக தீபக் - அபி நவ்யா திருமணம் நடைப்பெற்று முடிந்தது. திருமணத்திற்கு பிறகு இருவரும் தங்களது கெரியரில் கவனம் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் அபி நவ்யா தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை இன்ஸ்டாவில் புகைப்படத்துடன் ஷேர் செய்துள்ளார். கணவர் தீபக்குடன் சேர்ந்து க்யூட்டன மெட்டர்னிட்டி ஃபோட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை இன்ஸ்டாவில் ஷேர் செய்துள்ளார்.

  கூடவே குட்டி இளவரசன், இளவரசிக்காக காத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்
   
  View this post on Instagram

   

  A post shared by Deepak kumar (@d_chinky)  இந்த ஜோடிக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை கூறியுள்ளனர். அதே போல் கயல் சீரியல் நடிகர், நடிகைகளும் அபி நவ்யாவுக்கு வாழ்த்துக்களை கூறியுள்ளனர். சீரியலில் அபிநவ்யா தொடர்ந்து நடிப்பாரா? அல்லது அவரின் ரோலுக்கு ரீப்ளேஸ்மெண்ட் நடக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Sreeja
  First published:

  Tags: Sun TV, TV Serial, Vijay tv