தமிழகத்தில் சினிமா நட்சத்திரங்களுக்கு இருப்பது போல சின்னத்திரை நட்சத்திரங்களுக்கும் பெரிய ரசிகர் வட்டம் உள்ளது. நல்ல திறமையான நடிகர்கள் என்றால் தமிழ் ரசிகர்களும் வெள்ளித்திரை அல்லது சின்னதிரை என்ற பேதம் பார்ப்பதில்லை.
வெள்ளித்திரை நடிகர்களை விட டிவி நடிகர்கள் சோஷியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருந்து வருகின்றனர். மேலும் ரசிகர்களுடன் தொடர்ந்து உரையாடியும் வருகின்றனர். தமிழகத்தின் முன்னணி சேனல்கள் அனைத்திலுமே தவறாமல் ஒளிபரப்பாகி வருகின்றன சீரியல்கள். பிரபல சேனல்களில் மதிய நேரங்களில் டெலிகாஸ்ட் செய்யப்பட்டு வரும் சீரியல்கள் இல்லத்தரசிகளையும், மாலை பிரைம் டைமிங்கில் டெலிகாஸ்ட் செய்யப்பட்டு வரும் சீரியல்கள் இளைஞர்கள் உட்பட அனைத்து தரப்பினரையும் கவர்ந்து TRP ரேட்டிங் லிஸிட்டில் இடம்பிடித்து வருகின்றன.
குறிப்பாக சன் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்கள் ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளன. இதில் கடந்த ஆண்டு அக்டோபர் 25-ஆம் தேதி முதல் இரவு 7.30 மணிக்கு ஒளிப்பரப்பாகி வரும் சூப்பர் ஹிட்
சீரியல் கயல். கடின உழைப்பாளியான ஹீரோயின் கயல், தன் குடும்பத்தில் ஒரே வருமானம் ஈட்டும் நபராக இருந்து கஷ்டப்பட்டு குடும்பத்தை காப்பாற்றி வருகிறார். கயல் மற்றும் அவளுடைய குடும்ப உறுப்பினர்களை சுற்றியும் மற்றும் அவரை காதலிக்கும் எழிலை சுற்றியும் கயல் சீரியலின்
கதை நகர்கிறது. இந்த சீரியலில் கயலாக பிரபல சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி நடித்து வருகிறார். ஹீரோ எழிலரசனாக ராஜா ராணி சீரியல் புகழ் சஞ்சீவ் நடித்து வருகிறார்.
மனைவி திருமணத்திற்கு வந்த கணவன் முத்துராசு... விறுவிறுப்பாகும் நாம் இருவர் நமக்கு இருவர் 2!
தற்போது சன் டிவி சீரியல்களில் அதிக TRP ரேட்டிங் பெற்று டாப்பில் இருப்பது கயல் சீரியல் தான். விறுவிறுப்பான கதையும், நடிகை சைத்ரா ரெட்டியின் இயல்பான நடிப்பும் இதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. கன்னட சீரியல்களில் நடித்து கிடைத்த புகழ் வெளிச்சம் மூலம் கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில் ப்ரியா பவானி சங்கருக்கு பதிலாக நடித்து தமிழில் அறிமுகமானார். பின் யாரடி நீ மோகினி சீரியலில் நெகட்டிவ் கேரக்டரில் தனது மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை பெரிதும் கவர்ந்தார்.
ஐஸ்வர்யாவை பத்தி பேச எனக்கு உரிமை இல்ல, என் தங்கச்சி எப்போவும் நல்லாருக்கணும் - ராகவா லாரன்ஸ்
இதனால் இவருக்கு ரசிகர் வட்டம் பெருகியது. தற்போது கயல் சீரியல் மூலம் அபார நடிப்பை வெளிப்படுத்தி வரும் நடிகை சைத்ரா ரெட்டி நாளொன்றுக்கு வாங்கும் சம்பளம் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. சமீபத்தில் வெளியாகி இருக்கும் தகவலின் படி கயல் ரோலில் நடிக்க சைத்ரா ரெட்டி ஒரு நாளைக்கு ரூ.25,000 சம்பளம் பெறுகிறாராம். அதுமட்டுமின்றி கயல் சீரியலில் நடிக்கும் நடிகர்களில் இவருக்கு தான் இவ்வளவு அதிக சம்பளம் என்றும் கூறப்படுகிறது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.