Home /News /entertainment /

சூப்பர் ஸ்டாருடன் சேர்ந்து நடித்த சீரியல் நடிகை.. ஃபோட்டோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!

சூப்பர் ஸ்டாருடன் சேர்ந்து நடித்த சீரியல் நடிகை.. ஃபோட்டோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!

கயல் சீரியல் சைத்ரா

கயல் சீரியல் சைத்ரா

தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுடன் சேர்ந்து விளம்பரம் ஒன்றில் நடித்துள்ளார் சைத்ரா.

    கயல் சீரியல் புகழ் சைத்ரா ரெட்டி, தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவுடன் சேர்ந்து நடித்துள்ளார்.மகேஷ் பாபுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் இன்ஸ்டாவில் ஷேர் செய்துள்ளார்.

    டாப் சின்னத்திரை நாயகி வரிசையில் இருக்கிறார் கயல் புகழ் சைத்ரா ரெட்டி. வலிமை படத்திற்கு பிறகு இவரின் புகழ் வெள்ளித்திரையிலும் பரவ தொடங்கிவிட்டது. விஜய் டிவியில் ஒளிப்பரப்பான ’கல்யாணம் முதல் காதல் வரை’ சீரியல் மூலம் தமிழ் சின்னத்திரையில் என ட்ரி கொடுத்தவர் சைத்ரா ரெட்டி. ஆனால் அவர்  பிரபலமானது என்னவோ ஜீ தமிழில் ஒளிபரப்பாகிய ‘யாரடி நீ மோகினி’ சீரியல் மூலம் தான். ‘ஸ்வேதா’ எனும் வில்லி கேரக்டரில் முத்துராசுவை விரட்டி விரட்டி காதலித்து ரசிகர்கள் வெறுக்கும் அழகு வில்லியானார். அதன் பின்பு சன் டிவியில் தற்போது கயல் சீரியலில் மொத்த குடும்பத்தையும் தாங்கும் சுமைதாங்கியாக ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

    வள்ளி திருமணத்தில் கடைசி நேர திருப்பம்.. வள்ளிக்கு தாலி கட்டினார் கார்த்திக்!

    இந்த சீரியலில் இவருக்கு ஜோடியாக ராஜா ராணி புகழ் சஞ்சீவ் நடித்து வருகிறார். கயல் சீரியல் டி.ஆர்.பி ரேட்டிங்கில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. இதற்கு காரணம் விறுவிறுப்பான கதையும், கயலின் இயல்பான நடிப்பும் என்றால் மிகையாகாது. இந்த சீரியலில் பிஸியாக நடித்துக் கொடிருக்கும் போதே அஜித்தின் வலைமை படத்தில் லதா என்ற ரோலில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. படத்தில் அஜித்துடன் நிறைய சீன்களில் சைத்ரா திரையில் தோன்றினார். அதன் பின்பு அவரின் புகழ் சின்னத்திரை, வெள்ளித்திரையில் கொடி கட்டி பறக்க தொடங்கியது. ஷூட்டிங் இல்லாத நேரங்களில் போட்டோஷூட் எடுத்து தனது இன்ஸ்டாவில் பதிவிடுவதை சைத்ரா வழக்கமாக வைத்துள்ளார். சமூக வலைதள பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் சமீபத்தில் வெளியிட்ட புகைப்படம் ரசிகர்களின் வாயை பிளக்க வைத்துள்ளது.




    தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுடன் சேர்ந்து விளம்பரம் ஒன்றில் நடித்துள்ளார் சைத்ரா. அப்போது அவருடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை மகிழ்ச்சியுடன் ஷேர் செய்து தனது சந்தோஷத்தை வெளிப்படுத்தியுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் அடுத்து வெள்ளித்திரையில்  ஹீரோயினாகும் அனைத்து அம்சங்களும் சைத்ராவுக்கு இருப்பதாக கூறி வாழ்த்தியுள்ளனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: Mahesh babu, Sun TV, TV Serial

    அடுத்த செய்தி