ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

அம்மன் பால் குடித்ததை நேரில் பார்த்த கயல் சீரியல் நடிகை!

அம்மன் பால் குடித்ததை நேரில் பார்த்த கயல் சீரியல் நடிகை!

கயல் சீரியல் நடிகை

கயல் சீரியல் நடிகை

அம்மன் குழந்தை கொடுத்த பாலை உறிஞ்சி குடித்ததாக ஜானகி தெரிவித்துள்ளார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலில் தனம் ரோலில் நடிக்கும் நடிகை ஜானகி தனது வீட்டில் வாராஹி அம்மன் பால் குடிப்பதை நேரில் கண்டு  கண்ணீர் விட்டதாக கூறியுள்ளார்.

  சன் டிவியில் ஒளிப்பரப்பாகும் கயல் சீரியல் டி.ஆர்.பி ரேட்டிங்கில் கலக்கி வருகிறது. இந்த சீரியலில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கு மிகப் பெரிய ஃபேன்ஸ் கூட்டம் உருவாகியுள்ளது. கயலாக சைத்ரா ரெட்டி நடித்து வருகிறார். சைத்ரா வெறும் சீரியல் நடிகை மட்டுமில்லை இப்போது வெள்ளித்திரை நடிகையாகவும் வலம் வருகிறார். வலிமை, வட்டம் படங்களில் இவரின் நடிப்பு பலரின் கவனத்தையும் பெற்றுள்ளது. இவரை தவிர இந்த சீரியலில் ராஜா ராணி புகழ் சஞ்சீவ், கனா காணும் காலங்கள் ஐயப்பன், நியூஸ் ரீடர் அபிநயா, உமா ரியாஸ் ஆகியோர் லீட் ரோலில் நடித்து வருகின்றனர்.

  அட இவரா! விஜய் டிவி சீரியலில் என்ட்ரி கொடுத்த பிரபல நடிகர்!

  இந்த சீரியலில் கயலின் அண்ணியாக தனம் ரோலில் நடிப்பவர் நடிகை ஜானகி தேவி. இவர் இதற்கு முன்பு பல படங்களில் நடித்துள்ளார். காவலன், சுந்தர பாண்டியன், முத்துக்கு முத்தாக, றெக்க, புலிக்குத்தி பாண்டி போன்ற படங்களில் நடித்து குணசித்திர நடிகையாக வலம் வருகிறார். இந்நிலையில் ஜானகி தேவி கடவுள் பக்தி அதிகம் உள்ளவர். சமீபத்தில் ஆன்மீகம் தொடர்பாக இவர் அளித்த பேட்டி யூடியூப்பில் வெளியாகியுள்ளது.

  8 வருடமாக சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு உதவி செய்து வரும் லட்சுமி ராமகிருஷ்ணன்!

  அதில் வாராஹி அம்மனின் தீவிர பக்தையாக மாறிய காரணத்தை ஜானகி அதில் ஷேர் செய்துள்ளார். அப்போது பஞ்சமி அன்று நைட் ஷூட்டிங் சென்று வந்த பின்பு வீட்டில் புதியதாக வாங்கிய வாராஹி அம்மன் சிலையை வைத்து ஜானகி பூஜை செய்துள்ளார். அப்போது அவரின் மகளிடம் சொல்லி சாமிக்கு பாலை எடுத்து ஒரு ஸ்பூனில் கொடுக்க சொல்லி இருக்கிறார்.

  அப்போது அம்மன்,  குழந்தை கொடுத்த பாலை உறிஞ்சி குடித்ததாக ஜானகி தெரிவித்துள்ளார். இந்த தருணத்தின் போது உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கி அழுது விட்டதாகவும் ஜானகி தெரிவித்துள்ளார். அதுமட்டுமில்லை இதை வீடியோவாகவும் ஜானகி காண்பித்துள்ளார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Sreeja
  First published:

  Tags: Sun TV, TV Serial