ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

கயல் சீரியல் நடிகைக்கு வளைகாப்பு.. சீரியலில் இருந்து விலகல்?

கயல் சீரியல் நடிகைக்கு வளைகாப்பு.. சீரியலில் இருந்து விலகல்?

கயல் சீரியல்

கயல் சீரியல்

அபிநவ்யாவுக்கு சில நாட்களுக்கு முன்பு வளைகாப்பு நடந்து முடிந்துள்ளது. இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    கயல் சீரியலில் ஆனந்தி ரோலில் நடிக்கும் நடிகை அபிநவ்யாவுக்கு சமீபத்தில் பிரம்மாண்டமாக வளைகாப்பு நடந்து முடிந்துள்ளது.

    சைத்ரா ரெட்டி - சஞ்சீவ் லீட் ரோலில் நடிக்கும் கயல் சீரியல் சன் டிவியின் பிரைம் டைம் சீரியல் லிஸ்டில் உள்ளது. இந்த சீரியலுக்கு ரசிகர்கள் கொடுத்திருக்கும் வரவேற்பு மற்ற சேனல்களை திரும்பி பார்க்க வைத்துள்ளது. டெலிகாஸ்ட் ஆன நாளிலிருந்து டி.ஆர்.பி ரேட்டிங்கில் கலக்கி வரும் கயல் சீரியல் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் ஒளிப்பரப்பாகி வருகிறது. இதில் நடிக்கும் நடிகர், நடிகைகள் அனைவருக்கும் தனிப்பட்ட முறையில் ஃபேன்ஸ் கூட்டம் உண்டு. அந்த வகையில் இந்த சீரியலில் கயலின் கடைசி தங்கையாக ஆனந்தி ரோலில் நடிக்கும் நடிகை அபிநவ்யாவுக்கு  சமூகவலைத்தளங்களில் பயங்கர ஃபேன்ஸ்.

    பல கஷ்டங்களுக்கு பிறகு வாடகை வீட்டிலிருந்து சொந்த வீடு.. சந்தோஷத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா!

    நியூஸ் ரீடராக இருந்து இன்று சின்னத்திரை நடிகையாக உயர்ந்து நிற்கும் அபி, சீரியல் நடிகர் தீபக் குமாரை காதலித்து திருமணம் செய்தார். தீபக், தற்போது விஜய் டிவி ஈரமான ரோஜாவே தொடரில் நடித்து வருகிறார். இவர் கலர்ஸ் தமிழில் ஒளிப்பரப்பான திருமணம் சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகம் ஆனார். அதனைத்தொடர்ந்து ஜீ தமிழ் சீரியலிலும் நடித்தார். தீபக் - அபிநவ்யா இருவரும் சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இதனைத்தொடர்ந்து இருவரும் இந்த ஆண்டு தொடக்கத்தில் திருமணம் செய்துக் கொண்டனர்.

    கஷ்டத்தில் காரை விற்ற ஆல்யா கணவர் சஞ்சீவ்.. பலருக்கும் தெரியாத உண்மை!

    திருமணத்திற்கு பிறகும் இருவரும் தங்களது கெரியரில் கவனம் செலுத்தி வந்தனர். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு அபிநவ்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மெட்டர்னிட்டி புகைப்படத்தை பகிர்ந்து தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை ரசிகர்களுடன் ஷேர் செய்தார். அப்போது தான் இத்தனை நாட்களாக் அபிநவ்யா கயல் சீரியலில் வயிறை மறைத்துக் கொண்டு நடித்தார் என்பது பலருக்கும் தெரிய  வந்தது. ஆல்யா, ஃபரீனா வரிசையில் அபிநவ்யாவும் கர்ப்பமாக இருந்துக் கொண்டே சீரியலில் நடித்தார்.





     




    View this post on Instagram





     

    A post shared by Golden bar (@golden_bar___)



    இந்நிலையில் அபிநவ்யாவுக்கு சில நாட்களுக்கு முன்பு வளைகாப்பு நடந்து முடிந்துள்ளது. இதை புகைப்படங்கள் இணையத்தில் தற்போது வெளியாகியுள்ளன. வளைகாப்பை தொடர்ந்து அபிநவ்யா தொடர்ந்து சீரியலில் நடிப்பாரா? என்ர கேள்வியும் தற்போது எழுந்துள்ளது. அவரின் உடல் நலத்தை கருத்தில் கொண்டு அபிநவ்யா சீரியலில் இருந்து விலகலாம் என்ற தகவலும் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Published by:Sreeja
    First published:

    Tags: Sun TV, TV Serial