Home /News /entertainment /

சின்னத்திரையில் பிரபல சீரியல் ஜோடிக்கு திருமணம்.. குவியும் வாழ்த்துக்கள்!

சின்னத்திரையில் பிரபல சீரியல் ஜோடிக்கு திருமணம்.. குவியும் வாழ்த்துக்கள்!

அபி நவ்யா தீபக்

அபி நவ்யா தீபக்

திருமண சடங்குகள் தற்போது தொடங்கி விட்டன. நலங்கு, ப்ரீ வெட்டிங் கொண்டாட்ட புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகியுள்ளன.

    கயல் சீரியல் நடிகை அபி நவ்யாவுக்கும்,திருமணம் சீரியல் நடிகர்  தீபக்குமாருக்கும் கூடிய விரைவில் திருமணம் நடக்கவுள்ளது.இவர்களின் ப்ரீ வெட்டிங்க் கொண்டாட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.

    சன் டிவியில் ஒளிபரப்பான பிரியமானவள் தொடரில் ஸ்வாதியாகவும், கண்மணி தொடரில் சினேகா கதாப்பாத்திரங்களிலும் நடித்தவர் செய்தி வாசிப்பாளர் அபி நவ்யா. தற்போது சன் டிவி கயல் சீரியலில் ஆனந்தி ரோலில் நடித்து வருகிறார். தனது நடிப்பு திறமையால் பலரது கவனத்தை ஈர்த்த அபி நவ்யா, ஜீ தமிழ் தொலைக்காட்சி சீரியலில் நடிக்கும் தீபக்குமாரை கடந்த ஓராண்டாக காதலித்து வந்தார். சில மாதங்களுக்கு முன்பு தங்களது காதல் குறித்து இன்ஸ்டாகிராமில் அபி நவ்யா பதிவிட்டிருந்தார்.அப்போது தான் இவர்களின் காதல் அனைவருக்கும் தெரியவந்தது.

    இதையும் படிங்க... யாஷிகாவுடன் பிரேக்கப் ஆனது உண்மையா? பிக் பாஸ் நிரூப் சொன்ன அதிர்ச்சி கலந்த உண்மை!-

    பின்பு இருவரின் காதலுக்கும் குடும்பத்தார் ஓகே சொல்ல, கடந்த செப்டம்பர் மாதம் 8 ஆம் தேதி இருவருக்கு இரு வீட்டார் சம்மதத்துடன் பிரம்மாண்டமாக நிச்சயதார்த்தம் நடைப்பெற்றது. அந்த வீடியோவை அபிநவ்யா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார் திருமண தேதியும் முடிவாகிவிட்டதால், விரைவில் டும் டும் என கூறி இருந்த அவருக்கு ரசிகர்கள் அப்போதே வாழ்த்துக்களை தெறிக்க விட்டிருந்தனர்.இந்நிலையில் இன்னும் சில வாரங்களில் இருவருக்கும் திருமணம் நடைப்பெறவுள்ளது. திருமண சடங்குகள் தற்போது தொடங்கி விட்டன. நலங்கு, ப்ரீ வெட்டிங் கொண்டாட்ட புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகியுள்ளன.

    மாப்பிள்ளை தீபக் குமாருக்கு வீட்டில் நலங்கு வைக்கும் வீடியோ இன்ஸ்டாவில் வெளியாகியுள்ளது. தீபக்கைப் பொறுத்தவரை கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான திருமணம் சீரியலில் நவீன் கதாப்பாத்திரத்தில் நடித்து பெரும் வரவேற்பை பெற்றார். பின்னர், என்றென்றும் புன்னகை சீரியலில் லீட் ரோலில் நடித்தார். அவரின் நடிப்பு சின்னத்திரையில் பெரும் கவனத்தையும் வரவேற்பையும் பெற்றுள்ளது.

     



     




    View this post on Instagram





     

    A post shared by Tamil Serials (@tamilserialexpress)






    அதே போல் பாத்திமா பாபு, நிர்மலா பெரியசாமி, அனிதா சம்பத், திவ்யா துரைசாமி என செய்திவாசிப்பாளராக பணியைத் தொடங்கி சின்னத்திரை மற்றும் வெள்ளிதிரையில் நுழைந்தவர்கள் வரிசையில் தற்போது அபி நவ்யாவும் இடம்பிடித்துள்ளார். சமீபத்தில் கூட இவர் அஜெஸ்மெண்ட் குறித்த பேசிய வீடியோ இணையத்தில் படு வைரலானது. மிகவும் துணிச்சலாக தன்னுடைய கருத்துக்களை அந்த வீடியோவில் அபி நவ்யா பகிர்ந்து இருந்தார்.

    இதையும் படிங்க.. விஜய் டிவி குக் வித் கோமாளியில் சூர்யா பட ஹீரோயினா? சொல்லவே இல்லை!

    இப்போது இருவரும் கல்யாண சடங்குகளில் பிஸியாக உள்ளனர். ப்ரீ வெட்டிங் புகைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடம் காத்துக் கொண்டிருக்கின்றனர்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: Sun TV, TV Serial, Zee tamil

    அடுத்த செய்தி