Home /News /entertainment /

சின்னத்திரையில் அட்ஜஸ்ட்மெண்ட் .. கயல் சீரியல் நடிகை அதிர்ச்சி தகவல்!

சின்னத்திரையில் அட்ஜஸ்ட்மெண்ட் .. கயல் சீரியல் நடிகை அதிர்ச்சி தகவல்!

கயல் சீரியல்

கயல் சீரியல்

சின்னத்திரையில் ஆடிஷன் பற்றி பேசுகையில் அபி நவ்யா அதிர்ச்சியூட்டும் தகவலைக் கூறினார்.

  திரைப்படங்கள் மட்டுமல்லாமல், சின்னத்திரையிலும் நடிகைகள் தங்களுக்கென்று ஒரு இடத்தைப் பிடிப்பது சுலபமானது அல்ல. நடிப்பில் ஆர்வம் கொண்ட பெண்களுக்கு அவ்வளவு எளிதாக சரியான வாய்ப்புகள் கிடைப்பதில்லை. அதே போல, நீடித்து நிலைப்பதும் அவ்வளவு சுலபம் இல்லை. போட்டி நிறைந்த உலகில், ‘அட்ஜஸ்ட்மென்ட்’ செய்வது பல ஆண்டுகளாக நடிகைகள் எதிர்கொண்டு வரும் பிரச்சனையாகும். அவ்வபோது தகாத முறையில் நடந்து கொள்வது பற்றி, பாலியல் துன்புறுத்தல் பற்றி எல்லாம் நடிகைகளிடம் இருந்து புகார் வந்தாலும், இந்த நிலை மாறவில்லை என்பதை உறுதிபடுத்தும் விதமாக, கயல் சீரியல் நடிகை அதிர்ச்சியூட்டும்  ஒரு பேட்டியை அளித்துள்ளார்.

  சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலில் நடித்து வரும் அபி நவ்யா, தன்னிடம் ‘அட்ஜஸ்ட்’ பண்ணச் சொல்லிக் கேட்டதாக கூறியுள்ளார்.

  அபி நவ்யா, சின்னத்திரை ரசிகர்களிடையே பரிச்சயமான முகம் தான். செய்திவாசிப்பாளராக பணியாற்றிய அபிநவ்யா, தற்போது முன்னணி சீரியல்களில் நடித்து வருகிறார். இவர் சன்டிவியில் ஒளிபரப்பான பிரியமானவள் தொடரில் ஸ்வாதி என்ற பாத்திரத்திலும், கண்மணி தொடரில் சினேகா என்ற பாத்திரத்திலும் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

  இதையும் படிங்க.. விஜய் டிவி சீரியல் உருட்டுகள்.. ஒரு நாள் இரவு போதுமாம் சிலம்பம் கத்துக்க!

  பலரது கவனத்தை ஈர்த்த அபி நவ்யா, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சித்திரம்பேசுதடி தொடரில் கயல் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அதே போல, சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலிலும் நடித்து வருகிறார்.

  சமீபத்தில் ஒரு சேனலுக்கு பேட்டி அளித்த போது, காஸ்டிங் கவுச் சின்னத்திரையிலும் இருக்கிறது என்ற கூறியிருந்தார். செய்தி வாசிப்பில் இருந்து சின்னத்திரை நடிகையாக மாறியது பற்றி பேசுகையில், சீரியலில் நடிக்க விரும்பினால், தெரிந்தவர்கள் சிபாரிசு வேண்டும். இல்லையென்றால் மிகவும் கடினமாக இருக்கும் என்றும், வாய்ப்புத் தேடி சென்றால் பல்வேறு அதிர்ச்சியை எதிர்கொள்ள நேரிடும் என்றும் கூறினார்.

  இதையும் படிங்க. சன் டிவி சீரியலில் மீண்டும் கோலங்கள் சீரியல் தொல்ஸ்!

  சின்னத்திரையில் ஆடிஷன் பற்றி பேசுகையில் அபி நவ்யா அதிர்ச்சியூட்டும் தகவலைக் கூறினார். 250 க்கும் மேற்பட்ட ஆடிஷனுக்கு சென்றதாகவும், சீரியலில் நடிக்க வாய்ப்பு வேண்டுமானால் நேரடியாகவே அட்ஜஸ்ட் செய்து கொள்ளுமாறும் பலர் கூறியதாக தெரிவித்துள்ளார்.

  அதே போல, இன்ஸ்டாகிராமில் போலி காஸ்டிங் நபர் ஒருவர் தொடர்பு கொண்டு தகாத முறையில் பேசியதாகத் தெரிவித்தார். புதிதாக நடிக்க வரும் பல பெண்களும் இதைப் போல பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். எனவே, மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்றும் அவர் எச்சரித்தார்.   
  View this post on Instagram

   

  A post shared by abi navya (@abinavya)


  கலர்ஸ் தமிழ் சேனலில் திருமணம் என்ற சீரியலில் நவீன் பாத்திரத்தில் நடித்து பெரும் வரவேற்பை பெற்றிருந்த நடிகர் தீபக்குமாரும், அபி நவ்யாவும் நீண்ட காலமாக காதலித்து வந்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு இருவரின் நிச்சயத்தார்த்தமும் நடந்துள்ளது. தீபக்குமார் தற்போது என்றென்றும் புன்னகை சீரியலில் சித்தார்த் கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Sreeja
  First published:

  Tags: Sun TV, TV Serial

  அடுத்த செய்தி