Home /News /entertainment /

குடும்பத்தை பிரிக்க சபதமெடுக்கும் தர்மலிங்கம்.. எழிலுக்கு குட்பை சொல்லும் Kayal - பரபரப்பான Promo!

குடும்பத்தை பிரிக்க சபதமெடுக்கும் தர்மலிங்கம்.. எழிலுக்கு குட்பை சொல்லும் Kayal - பரபரப்பான Promo!

Kayal

Kayal

Kayal Serial Update | திங்கள் - சனி வரை தினமும் 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கயல் தான், TRP ரேட்டிங் மற்றும் சன் டிவி சீரியல்களில் முதலிடத்தில் உள்ளது. மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் இந்த சீரியலின் நாயகி நடிகை சைத்ரா ரெட்டி ஆவார். தனது இயல்பான நடிப்பால் கயல் சீரியலை டாப்பிற்கு கொண்டு சென்றுள்ளார் இவர்.

மேலும் படிக்கவும் ...
காமெடிக்கு ஆதித்யா, பாட்டுக்கு சன் மியூசிக், செய்திகளுக்கு சன் நியூஸ் என்று பல சேனல்கள் சன் குரூப்பில் இருந்தாலும் ரியாலிட்டி ஷோக்கள்,சீரியல்கள், திரைப்படங்கள் என பல வெரைட்டி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும் சன் டிவி-க்கு இருக்கும் ரசிகர் வட்டம் மிக பெரியது. சீரியல்களை பொறுத்த வரை விஜய் டிவி மற்றும் சன் டிவி ஆகிய 2 சேனல்களுக்கு இடையே தான் நேரடி போட்டி.

ஏனென்றால் வாரா வாரம் வெளியாகும் TRP ரேட்டிங்கில் டாப் 5 இடங்களை பிடிப்பது இந்த 2 சேனல்களின் சீரியல்கள் தான். சன் டிவி-யில் காலை 9.30 மணி முதல் இரவு 11 மணி வரை கிட்டத்தட்ட 15-க்கும் மேற்பட்ட சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. பூவே உனக்காக, மகராசி, திருமகள், சித்தி 2, பாண்டவர் இல்லம், சந்திரலேகா, அருவி, தாலாட்டு, அபியும் நானும், சுந்தரி, வானத்தை போல, கண்ணான கண்ணே, ரோஜா, எதிர்நீச்சல், அன்பே வா, உள்ளிட்ட பல சீரியல்களை ஒளிபரப்பி வருகிறது சன் டிவி.

திங்கள் - சனி வரை தினமும் 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கயல் தான், TRP ரேட்டிங் மற்றும் சன் டிவி சீரியல்களில் முதலிடத்தில் உள்ளது. மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் இந்த சீரியலின் நாயகி நடிகை சைத்ரா ரெட்டி ஆவார். தனது இயல்பான நடிப்பால் கயல் சீரியலை டாப்பிற்கு கொண்டு சென்றுள்ளார் இவர்.

இதனிடையே இன்றைய கயல் சீரியல் எபிசோடின் ப்ரமோ வீடியோ வெளியாகி இருக்கிறது. கயலின் மூத்த சகோதரனான மூர்த்தி (நடிகர் ஐயப்பன்) தனது மனைவியை பார்த்து குடும்பத்தினர் இருக்கும் போது "டக்கு டக்கு என்று பொருளெல்லாம் எடுத்து பேக் பண்ணி வை" என்று அதட்டுகிறான். கயலின் குடும்பத்திற்கு எப்போதும் கெட்டது நினைக்கும் அவளது பெரியப்பா தர்மலிங்கமும் அப்போது கயலின் வீட்டில் தான் இருக்கிறார்.



மூர்த்தி சொல்வதை கேட்கும் கயலின் அம்மா ஷாக் ஆகிறார். மூர்த்தி சொல்வதை கேட்டு உள்ளுக்குள் ரசிக்கும் தர்மலிங்கம், "கயலு ஒவ்வொருத்தரா உன் குடும்பத்திலிருந்து பிரிச்சு உன்ன நான் தனிமரமா நிக்க வைக்கலனா பாரு" என்று மனதிற்குள் நினைத்து கொண்டே கயலை பார்த்து சிரித்தபடி எழுந்திருக்கிறார்.

Also Read : சூப்பர் சிங்கர் பிரியங்காவுக்கு விஜய் டிவி செய்த காரியம்.

இதனை தொடர்ந்து கயல் மற்றும் எழிலின் சீன் வருகிறது. அதில் உன்ன உயிருக்கு உயிரா காதலிச்சிட்டு, திடீர்னு என்ன வேற ஒரு பொண்ண கல்யாணம் பண்ணிக்க சொன்னா என்னால எப்படி ஏத்துக்க முடியும் என்று ஹீரோ எழில், நாயகி கயலை பார்த்து கேள்வி எழுப்புகிறான். ஆனால் அதை எல்லாம் காதில் வாங்காத கயல், எழிலுக்கு குட்பை சொல்லிவிட்டு நகர்வதோடு இன்றைய எபிசோடின் ப்ரமோ முடிகிறது.
Published by:Selvi M
First published:

Tags: Sun TV, TV Serial

அடுத்த செய்தி