Home /News /entertainment /

நான் தான் அந்த கபிலன்.. கயலிடம் உண்மையை போட்டுடைக்கும் எழில்!

நான் தான் அந்த கபிலன்.. கயலிடம் உண்மையை போட்டுடைக்கும் எழில்!

கயல்

கயல்

கயலிடம் கபிலன் யார் ? என்ற உண்மையை எழில் சொல்ல இருப்பதாக தகவல்கள் இணையத்தில் கசிந்துள்ளன.

    சன் டிவியில் ஒளிபரப்பாகும் கயல் சீரியலில் அடுத்து வரப்போகும் முக்கியமான திருப்பம் குறித்த தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது.

    சின்னத்திரையில் சீரியல் டி.ஆர்.பி ரேட்டிங்கில் சன் டிவி  மற்றும் விஜய் டிவி சீரியல்கள் போட்டி போடுவது வழக்கமான ஒன்று தான். ஆனால் சமீப காலமாக போட்டியே இன்றி கயல் சீரியல் டி.ஆர்.பி ரேட்டிங்கில்  முதலிடத்தை பிடித்து வருகிறது. டெலிகாஸ்ட் ஆன முதல் வாரத்தில் இருந்தே இந்த சீரியலின் கதைக்களம் விறுவிறுப்பாக சென்றதால் மக்கள் விரும்பி பார்க்க தொடங்கி விட்டனர். அதே போல் யாரடி நீ மோகினி சீரியலில் வில்லியாக நடித்த சைத்ரா இந்த சீரியலில் லீட் ரோலில் நடிப்பதும் இந்த சீரியலின் வெற்றிக்கு முக்கிய காரணம் என்றே கூறலாம்.

    உங்க மேல லவ் இல்லை.. சிம்புவிடம் மன்னிப்பு கேட்ட சின்னத்திரை நடிகை ஸ்ரீநிதி!

    நர்சாக பணிபுரியும் கயல் ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர். தனது தம்பி, தங்கைகளை கவனித்து கொள்ளும் ஒரு குடும்பத்தலைவராகவும், தைரியமான பெண்ணாகவும் இருக்கிறார். அவருக்கு உறுதுணையாக கதாநாயகன் செயல்படுகிறார். இதில் கயலாக நடிகை சைத்ரா ரெட்டி நடித்து வருகிறார். எழில் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் சஞ்சீவ் கார்த்திக் நடித்து வருகிறார். இவர் விஜய் டிவி-யின் ராஜா ராணி சீரியலில் நடித்து புகழ்பெற்றவர். இந்நிலையில் தற்போது கயலிடம் எழில், கபிலன் என்ற பெயரில் நண்பராக பழகி வருகிறார்.

    அப்படி ஒரு லவ்.. திருமணத்திற்கு பிறகு கணவருடன் நட்சத்திரா இருக்கும் புகைப்படம்!

    அதாவது ஏற்கெனவே கயலிடம் எழில் காதலை சொல்ல அதை கயல் மறுத்து விட்டார். இப்படி இருக்கையில் மீண்டும் கயலிடம் பழக, கபிலன் என்ற நண்பராக எழில் அறிமுகம் ஆகிறார். இப்போது வரை அப்படி தான் கயலிடம் பழகி வருகிறார். தேவியின் கல்யாணம் பிரச்சனை இல்லாமல் முடிய கபிலனாக எழில் ஏகப்பட்ட உதவிகளை செய்து இருக்கிறார்.



     




    View this post on Instagram





     

    A post shared by Tamil TV Express (@tamiltvexpresss)






    இந்நிலையில் வரும் நாட்களில் கபிலன் யார் ? என்ற உண்மையை எழில் சொல்ல இருப்பதாக தகவல்கள் இணையத்தில் கசிந்துள்ளன. அதாவது, கபிலனாக பழகுவது நான் தான் என்ற உண்மையை கயலை சந்தித்து எழில் சொல்ல இருக்கிறாராம். அந்த முக்கிய திருப்பம் கயல் சீரியலில் வரும் வாரத்தில் ஒளிப்பரப்பாகவுள்ளது என இணையத்தில் தகவல்கள் கசிந்துள்ளன.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: Sun TV, Television, TV Serial

    அடுத்த செய்தி