அஜித் நடிப்பில் வெளியான வலிமை படத்தில் இடம்பெற்றிருக்கும் நாங்க வேற மாரி பாடலுக்கு கயல் சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி நடுரோட்டில் ஆடியிருக்கும் நடனம் சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்து வருகிறது.
விஜய் டிவி-யில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை சீரியல் மூலம் தமிழ் சின்னத்திரையில் அறிமுகமானவர் நடிகை சைத்ரா ரெட்டி. அமித் பார்கவ் ஹீரோவாக நடித்து வந்த அந்த சீரியலில் பிரியா பவானி சங்கர் ஹீரோயினாக நடித்து வந்தார். பின்னர் திரைப்பட வாய்ப்புகளால் அவர் அந்த சீரியலில் இருந்து விலகியதைத் தொடர்ந்து, கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில் ஹீரோயினாக களம் இறங்கினார் சைத்ரா.
இதையடுத்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான யாரடி நீ மோகினி சீரியலில் வில்லியாக நடித்தார். இதன் மூலம் ரசிகர்களிடம் நன்கு பரிச்சயமான சைத்ரா ரெட்டி, தனது நடிப்புக்காக பாராட்டுகளைப் பெற்றார். தற்போது சன் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலில் டைட்டில் ரோலில் நடித்து வருகிறார். குடும்பத்திற்காக கயல் எதிர்கொள்ளும் சவால்களை மையப்படுத்தி இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. ராஜா ராணி சீரியலில் ஹீரோவாக நடித்து, ரசிகர்களின் கவனம் ஈர்த்த சஞ்சீவ் தான் கயல் சீரியலில் ஹீரோவாக நடித்து வருகிறார்.
Bharathi Kannamma: பெற்றோர் திருமணத்துக்கு திட்டம் தீட்டும் ஹேமா... லட்சுமியின் முடிவு என்ன?
இது மட்டுமில்லாமல் சீரியல்கள் தவிர, அஜித் நடித்த வலிமை படத்தில் அவருக்குக் கீழ் பணிபுரியும் போலீஸ் அதிகாரியாக முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் சைத்ரா. படம் வெளியான பிறகு அஜித்துடன் 2 ஆண்டுகளுக்கு முன்பு எடுத்தப் படத்தையும் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருந்தார். இந்நிலையில் தற்போது அவர் வெளியிட்டிருக்கும் நடன வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்து வருகிறது.
அதாவது வலிமை படத்தில் நாங்க வேற மாரி பாடலுக்கு கயல் சீரியல் நடிகர் அவினாஷ் அசோக்குடன் இணைந்து நடனம் ஆடியிருக்கிறார் சைத்ரா. கயல் சீரியல் கெட்டப்புடன் படப்பிடிப்பு தளத்தில் இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோவைப் பார்த்த அஜித் ரசிகர்கள், சைத்ராவை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.