ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

கயல் சீரியலை விட்டு விலகிய முக்கிய பிரபலம்?

கயல் சீரியலை விட்டு விலகிய முக்கிய பிரபலம்?

கயல்

கயல்

சன் டிவி சீரியல்களில் அதிக TRP ரேட்டிங் பெற்று டாப்பில் இருப்பது கயல் சீரியல் தான்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  கயல் சீரியலில் அன்பு கேரக்டரில் நடித்து வந்த ஹரி தற்போது அந்த சீரியலை விட்டு விலகியிருக்கிறார். 

  சன் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்கள் ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளன. இதில் இரவு 7.30 மணிக்கு ஒளிப்பரப்பாகி வரும் சூப்பர் ஹிட் சீரியல் தான் கயல். கடின உழைப்பாளியான ஹீரோயின் கயல், தன் குடும்பத்தில் ஒரே வருமானம் ஈட்டும் நபராக இருந்து கஷ்டப்பட்டு குடும்பத்தை காப்பாற்றி வருகிறார். கயல் மற்றும் அவளுடைய குடும்ப உறுப்பினர்களை சுற்றியும் மற்றும் அவரை காதலிக்கும் எழிலை சுற்றியும் கயல் சீரியலின் கதை நகர்கிறது. இந்த சீரியலில் கயலாக பிரபல சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி நடித்து வருகிறார். ஹீரோ எழிலரசனாக ராஜா ராணி சீரியல் புகழ் சஞ்சீவ் நடித்து வருகிறார்.

  தற்போது சன் டிவி சீரியல்களில் அதிக TRP ரேட்டிங் பெற்று டாப்பில் இருப்பது கயல் சீரியல் தான். விறுவிறுப்பான கதையும், நடிகை சைத்ரா ரெட்டியின் இயல்பான நடிப்பும் இதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. இந்த தொடரில் கயல் தம்பியாக நடித்து வந்த அவினாஷ் சில காரணங்களால் தொடரில் இருந்து விலகினார்.

  இதுல யார் குழந்தை...? சைத்ரா ரெட்டியின் படங்களைப் பார்த்து ஆச்சர்யப்படும் ரசிகர்கள்!

  பின்னர் அவருக்கு பதில் ஹரி என்பவர் அன்பு கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். அவர் நடிக்க தொடங்கி குறுகிய நாட்களே ஆன நிலையில், தற்போது ஹரியும் தனது சொந்த காரணங்களுக்காக தொடரில் இருந்து விலகியிருப்பதாகக் கூறப்படுகிறது.

  Kayal Serial actor Hari quit the serial, Sun TV Kayal serial TRP, kayal serial trp rating, vijay tv - trp ratings this week, trp ratings of tamil serials this week 2021, sun tv highest trp rating serial, zee tamil trp rating, sun tv serial trp ratings this week, sun tv trp ratings today, zee tamil serial trp rating 2021, trp ratings of vijay tv serials 2021 Kayal Serial Chaitra Reddy Salary Details, chaitra reddy, chaitra reddy instagram, chaitra reddy facebook, chaitra reddy serials, chaitra reddy kayal, chaitra reddy salary, chaitra reddy kayal serial, chaitra reddy photos, கயல் சைத்ரா ரெட்டி, சைத்ரா ரெட்டி படங்கள், சைத்ரா ரெட்டி சம்பளம், சைத்ரா ரெட்டி சீரியல், kayal serial wikipedia, aishwarya kayal serial, kayal serial actress name, kayal serial devi real name, kayal serial promo, kayal serial aishwarya instagram id, sun tv serials today episode youtube, serial serial
  ஹரி

  இதனால் அன்பு கதாபாத்திரத்தில் ஜீவா என்ற புதிய நடிகர் நடிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Shalini C
  First published:

  Tags: TV Serial